• யுத்த விசாரணை: அமெரிக்காமீது கருணாநிதி கண்டனம்

  இலங்கைமீதான யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளூர் விசாரணை ஒன்றை மேற்கொள்ளும் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு, திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு. கருணாநிதியும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் எஸ். ராமதாஸும் தமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். “அமெரிக்க அரசின் இந் நடவடிக்கை, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட யுத்த குற்றங்களை மூடி மறைப்பதற்கான முயற்சிபோலத் தெரிகிறது. ஆனால், அமெரிக்கா இதற்கு அநுமதிக்காது என்று நம்புகிறேன். இலங்கை தனது சொந்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு…

  Read more
 • வீதிகளில் `வீசா’ சோதனை?

  அவுஸ்திரேலியாவில், மேல்போர்ண் வீதிகளில் வீசா சோதனைகளை மேற்கொள்வதற்கு அவுஸ்ரேலிய எல்லை பாதுகாப்பு ஏஜென்சி விடுத்த திடீர் அறிவிப்பு, பெரும் விசனத்தை எற்படுத்தியிருக்கிறது. பல முகவர் நிறுவனங்கள் மேற்கொள்ளும் வீசா மோசடிக் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையாக தமது அதிகாரிகள் இந்த வீசா சோதனைகளை மேற்கொள்ளப்போவதாக எல்லை பாதுகாப்பு ஏஜென்சி தெரிவித்திருக்கிறது. எல்லை பாதுகாப்பு ஏஜென்சியின் இந்த அறிவிப்பு ஒருவித இன துன்புறுத்தலாக அமையும் என்ற ஐயம் சமூக ஊடகங்களில் பெருமளவில் எழுந்துள்ளதையடுத்து, இந்த நடவடிக்கையைக் கைவிடுவதாக விக்டோரியா பொலீசார்…

  Read more
 • லொறியினுள் 70 சடலங்கள்

  ஒஸ்ரிய நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட லொறியொன்றினுள் 70க்கு மேற்பட்ட சடலங்களை ஒஸ்ரிய பொலீசார் கண்டெடுத்துள்ளனர். ஹங்கேரியன் எல்லைப் பகுதியில், வியன்னா நோக்கிய நெடுஞ்சாலையில் கைவிடப்பட்டிருந்த இந்த லொறியில் பயணம்செய்த இவர்கள், வெளிநாடுகளில் புகலிடந்தேடிப் புறப்பட்டவர்களாகவிருக்கலாமென்று பொலீசார் நம்புகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே இவர்கள் இறந்திருக்கலாமென்று நம்பும் பொலீசார், ஹங்கேரி எல்லையைக் கடந்து, லொறி ஒஸ்ரியாவுக்குள் பிரவேசிக்குமுன்னரேயே இவர்கள் இறந்திருக்கலாமென்றும் தெரிவிக்கின்றனர். ஹங்கேரிய இலக்கத் தகட்டுடன், சொலொவாக்கிய கோழி இறைச்சி நிறுவனமொன்றின் பெயர் இலச்சினையைக்கொண்ட இந்த லொறி தற்போது தமக்கு…

  Read more
 • பிரிட்டனில் அதிகரிக்கும் குடிவரவு

  முன்னரெப்போதுமில்லாதவாறு, இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் 3 லட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டவர்கள் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இவர்களில், ஒரு லட்சத்து 83 ஆயிரம் பேர் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தைவிட 53 ஆயிரம் அதிகமானதாகும். நாட்டைவிட்டு வெளியேறுபவர்களைவிட நாட்டுக்குள் வருபவர்களின் எண்ணிக்கை, அரசாங்கத்தின் எதிர்பார்ப்பைவிட மூன்று மடங்கு அதிகமாகவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் தவிர்ந்த நாடுகளிலிருந்து, ஒரு லட்சத்து 90 ஆயிரம்…

  Read more
 • குஜராத்தில் தொடரும் கலவரம்

  குஜராத் மாநிலத்தில் இரண்டு தினங்களாக தொடரும் சாதிக் கலவரங்களில் எட்டுப்பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அமைதியை நிலைநாட்டுவதற்காக இராணுவம் அழைக்கப்பட்டிருக்கிறது. குஜராத்தின் செல்வாக்குமிக்க பட்டேல் சமூகத்தவர்கள், அரச வேலைவாய்ப்புக்களில் தமக்கு `கோட்டா’ முறைமை கோரி, செவ்வாய்க் கிழமை அஹ்மதாபாத்தில் பிரம்மாண்டமான ஊர்வலமொன்றை மேற்கொண்டனர். அதன் பின்னர், ஊர்வலத்துக்கு தலைமைதாங்கிய ஹார்டிக் பட்டேலை பொலீசார் சிறிதுநேரம் தடுத்து வைத்ததையடுத்து இக் கலவரம் வெடித்தது. ஒரு பொலீஸ்காரர், ஒரு தந்தையும் மகனும் உள்பட எட்டுப்பேர் உயிரிழந்தபோது, பொலீசார் பலர் காயமடைந்துள்ளனர். சுமார் 40…

  Read more
 • புதிய அரசுக்கு டக்ளஸ் ஆதரவு

  ஈழமக்கள் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் புதிய தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசநாயக்க இதனை அறிவித்துள்ளார். தமிழர் பிரச்னைக்கு புதிய அரசாங்கம் தீர்வை அளிப்பதாக உறுதியளித்திருப்பாதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கிறார்.

  Read more
 • கிரிக்கெட்: இரண்டு நட்சத்திரங்களின் கதை குமார் சங்ககார – மைக்கல் கிளார்க்

  `டெஸ்ட்’ அரங்கில் மாபெரும் ஆளுமைகளாக திகழ்ந்த இருவர் விடைபெறுகின்றனர்; இலங்கையின் குமார் சங்ககார மற்றும் அவுஸ்திரேலியாவின் மைக்கல் கிளார்க். கிரிக்கெட் உலகில் இருவருமே மாறுபட்ட ஆட்டக்காரர்களாகப் பிரகாசித்துள்ளனர் என்பது மட்டும் அல்ல, இருவரும் விடைபெறும் விதம் முரண்பட்டதாகவே இருக்கிறது. சங்ககாரா விஷயத்தில், அவர் விரும்பி ஓய்வு பெறுகிறார்; ஆனால், அணி அதை விரும்பவில்லை. ரசிகர்களும் அவர் தொடர்ந்தும் ஆடுவதையே விரும்புகின்றனர். ஆனால், ஆட்டக்காரராகவும் `கப்டனா’கவும் கிளார்க்கின் மகத்துவத்தை மீறி, அவர் ஓய்வுபெற நிர்பந்திக்கப்பட்டுள்ளார். வெளிப்படையாக இல்லாவிட்டாலும்கூட, `நீங்கள்…

  Read more
 • பிரித்தானிய தூதராக பணியாற்ற சங்ககாரவுக்கு அழைப்பு

  பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவராக பிரபல துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவை செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை துடுப்பாட்ட அணியின் நட்சத்திர வீரரும் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவருமான குமார் சங்ககார இன்று தனது இறுதி சர்வதேச போட்டியில் விளையாடிய பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராக செயற்படுமாறு அழைப்பு விடுத்தார். குமார் சங்ககார இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவரா என்று தெரியாத போதிலும் தனது…

  Read more
 • பிரபல துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார கண்ணீருடன் பிரியாவிடை

  அனைத்து இலங்கையர்களின் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் எனது மனமார்ந்த நன்றி என்றும், இறுதிப்போட்டியில் தாய் மண்ணில் உங்கள்முன் விளையாடக் கிடைத்தமையை பெரும் கௌரவமாக எண்ணுகிறேன் என்றும் இலங்கை துடுப்பாட்ட அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார கண்ணீர் மல்க தெரிவித்து விடைபெற்றார். கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் இன்று இடம்பெற்ற இந்தியாவுடனான டெஸ்ட் ஆட்டத்தின் இறுதி நாளில் விளையாடிய சங்கக்கார மிகவும் உணர்ச்சிபூர்வமாக உரை நிகழ்த்தினார். `தாய்நாட்டுக்காக விளையாடிய 15 ஆண்டுகளும் மிக அற்புதமானவை. அந்த அனுபவங்களையும் நீங்கள் அனைவரும்…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ