• ரொனி பிளேயர் சிறிசேனவைச் சந்தித்தார்

    பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சு நடத்தினார். இலங்கைக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டிருந்த ரொனி பிளேயர், பல்வேறு விவகாரங்கள் குறித்து மைத்ரிபால சிறிசேனவுடன் ஆலோசனை நடத்தினார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலை மிகவும் அமைதியான முறையிலும் சுதந்திரமான முறையிலும் நடத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை பிளேயர் பாராட்டினார். இலங்கையினுடைய சுற்றுலாத்துறை வளர்ச்சியடைவதற்கு தன்னாலான பங்களிப்பினை வழங்குவதாகவும் இச்சந்தர்ப்பத்தில் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் குறிப்பிட்டார்.

    Read more
  • சிரிய புராதன தேவாலயம் தகர்ப்பு

    பாலைவனத்தின் முத்து என்றழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க, சிரியாவின் பல்மைரா நகரத்தில் பல் ஷமின் தேவாலயத்தை ஐ. எஸ். அமைப்பு குண்டுவைத்து தகர்த்திருக்கிறது. ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ. எஸ். அமைப்பு நடத்தியிருக்கும் தாக்குதல் பாரிய போரக்குற்றம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த மே 21ஆம் தேதி பல்மைரா நகரை கைப்பற்றிய ஐ. எஸ். அமைப்பு நடத்திய தாக்குதலில் செல்லோ என்று அழைக்கப்படும் தேவாலயத்தின் உட்பகுதி வெகுவாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டைச்…

    Read more
  • சுதந்திர முன்னணியிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகும்?

    ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தன்னை விடுவித்துக்கொள்ள எண்ணுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2004இல் அமைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதான கட்சியாக விளங்குகிறது. மஹாஜன எக்சத் பெரமுன, ஸ்ரீலங்கா மஹாஜன கட்சி, தேசவிமுக்தி ஜனதா கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய ஐக்கிய கூட்டணி ஆகிய கட்சிகளும் இதில் கூட்டுச்சேர்ந்துள்ளபோது, கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள்…

    Read more
  • றோஸி சேனநாயக்கா புதிய இலங்கை தூதர்?

    நடந்து முடிந்த தேர்தலில் தோல்வி கண்ட முன்னாள் சிறுவர் விவகார அமைச்சர் றோஸி சேனநாயக்கா பிரிதிதானியாவுக்கான புதிய இலங்கை தூதராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. புpரித்தானியாவுக்கான இலங்கைத் தூதராக கடமையாற்றியிருந்த கலாநிதி கிறிஸ் நோறிஸ் கடந்த ஒக்ரோபர் மாதம் பதவி துறந்ததிலிருந்து லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தலைமையின்றியே உள்ளது. அத்துடன், தற்காலிக தூதுவராக கடமையாற்றும் கலாநிதி ஷானக தலப்ஹெவா எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் தேதி தொடக்கம் மாலைதீவுக்கு மாற்றலாகி செல்லும் நிலையில் பிரித்தானியாவுக்கான இலங்கையின் துணைத்தூதுவராக…

    Read more
  • புதிய பாராளுமன்றம் செப்ரெம்பர் முதலாம் தேதி கூடுகிறது

    இலங்கையில் நடைபெற்ற தேர்தலையடுத்து, ஐக்கிய தேசிய முன்னணியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்த தேசிய அரசாங்கத்தின் புதிய பாராளுமன்றம் செப்ரெம்பர் முதலாம் தேதி கூடுகிறது. பாராளுமன்றத்தின் இத் தொடக்க அமர்வின்போது சபாநாயகர், துணைச் சபாநாயகர், குழுக்களின் தலைவர் ஆகியோர் தெரிவுசெய்யப்படுவர். முன்னனைய பாராளுமன்றத்தின் 70க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேர்தலில் தோல்வியுற்ற நிலையில், பல புதிய முகங்கள் இப் புதிய பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்றனர். தோல்வியுற்றவர்களில் கடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 18 அமைச்சர்கள், 21 பிரதி…

    Read more
  • தேசிய அரசில் 35 அமைச்சர்கள்

    இலங்கையில்; புதிதாக அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில், அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக வரையறுக்கப்பட்டிருக்கும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியும் (ஐ. தே. க.), சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் (சு. க.) இணைந்து அமைகக்கவுள்ள தேசிய அரசாங்கத்தில், 35 அமைச்சர்களே அங்கம் வகிப்பர் என்றும், இதில் 19 அமைச்சர் பதவிகள் ஐ. தே. க. வுக்கும், 16 அமைச்சர் பதவிகள் சுதந்திரக் கட்சிக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில்…

    Read more
  • இலங்கை விவகாரங்களில் தென் ஆபிரிக்கா – ஜப்பான் பேச்சுவார்த்தை

    இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு மற்றும் புனர் நிர்மாணம் ஆகியவற்றை மேற்கொள்ளுவது தொடரபாக தென் ஆபிரிக்காவும் ஜப்பானும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. ஜப்பான் பயணம் மேற்காண்டிருக்கும்; தென் ஆபிரிக்காவின் துணை ஜனாதிபதி சிறில் ராமபோஸா இலங்கை தொடர்பாக ஜப்பானின் சிறப்புத்தூதர் யசூசி அகாஸியுடன் பேச்சு நடத்துகிறார். தென் ஆபிரிக்க அதிபர் ஜக்கோப் சூமோவின் இலங்கை விவகாரங்களுக்கான தூதுவராக ஜப்பான் சென்றுள்ள சிறில் ராமபோஸா, ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே, முன்னாள் பிரதமர் யோசிறோ மோறி ஆகியோருடனும்…

    Read more
  • அமைச்சரவை திங்கள் பதவிப்பிரமாணம்

    ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துள்ளதை தொடர்ந்து, அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்வுகள் எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறும் என பிரதமருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர், விபரங்களை அறிவித்துள்ளபோதிலும் ஏனைய கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. தேர்தலில் போட்டியிட்டு தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர்…

    Read more
  • ஈராக் யுத்தம்: தொழில் கட்சி மன்னிப்பு கோரும்!

    தொழில் கட்சியின் தலைவராக தாம் தெரிவுசெய்யப்பட்டால், ஈராக் யுத்தத்தில் பிரிட்டனை ஈடுபடுத்தியதற்காக தொழில் கட்சியின் சார்பில் சம்பிரதாயபூர்வமான மன்னிப்பைக் கோருவேன் என்று தொழில் கட்சி தலைவருக்கான போட்டியில் முன்னணியில் நிற்கும் ஜெரெமி கோர்பின் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையையும், சர்வதேச சட்டத்தையும் மீண்டும் இனி ஒருபோதும் பரிகாசத்துள்ளாக்கமாட்டோம் என்றும் அவர் `கார்டியன்’ பத்திரிகைக்கு தெரிவித்திருக்கிறார். ஈராக் யுத்தம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட சில்கொட் விசாரணை அறிக்கை தாமதமாவதும் பிழையானது என்று அவர் கூறியிருக்கிறார். ஈராக் யுத்தத்தில் பிரிட்டனை…

    Read more
  • சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர்?

    தேசிய அரசாங்கத்தின் புதிய பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படலாம் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நிமால் சிறிபால டி சில்வாவுக்கு பிரதி பிரதமர் பதவி வழங்கப்படலாம் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. ஐக்கிய தேசிய முன்னணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து புதிய தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பட்சத்தில், அடுத்ததாக அதி கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட, அரசாங்கத்துக்கு வெளியே உள்ள…

    Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ