• இலங்கையின் அரசியல்சாசனத்துக்கு ஏற்றவகையிலேயே விசாரணைப் பொறிமுறை அமையும் – ரணில்

  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் தீரமானத்தை தொடர்ந்து அமைக்கப்படவிருக்கும் நீதி விசாரணைப் பொறிமுறையானது இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே அமையும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். நீதி விசாரணனை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தின் முழுமையான அங்கீகாரத்துடனேயே மேற்கொள்ளப்படும் என்றும், உண்மை, நல்லிணக்கத்துக்கே முக்கியத்தும் வழங்கப்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். போர் விசாரணைகளின்போது, நடந்தவற்றுக்கு முழுமையான பொறுப்புக்கூறவேண்டியது விடுதலைப் புலிகள் அமைப்பே என்றும், பாரிய பொறுப்பை புலிகளும் பிரபாகரனுமே ஏற்கவேண்டும் என்றும் கொழும்பில்…

  Read more
 • சிரிய நெருக்கடிக்கு தீர்வுகாண ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட தயார்: பராக் ஒபாமா

  சிரியாவில் தொடரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட தயார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐ. எஸ். அமைப்பினரின் நிலைகள்மீது நடத்தப்படும் தாக்குதலை நியாயப்படுத்திய ஒபாமா, சிரிய நெருக்கடிக்கு தீர்வு காண்பது அவசியம் என்றும், அதனை அமெரிக்காவினால்மட்டும் தன்னந்தனியாக காணமுடியாது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் 70ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டார். சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அதிபர் பஷீர் அல்…

  Read more
 • பிரிட்டிஷ் மக்களிடம் அதிகாரம் முழுமையாக சென்றடையவேண்டும் – தொழிற்கட்சியின் புதிய தலைவர் ஜெரெமி கோர்பின்

  சமத்துவமின்மையையும் அநீதியும் தவிர்க்கப்படமுடியாதவை என்பதை பிரிட்டிஷ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும், பிரிட்டன் கட்டாயம் மாறுதலடையவேண்டும் என்றும் தொழிற்கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டபின்னர் கட்சியின் மாநாட்டில் நிகழ்த்திய முதலாவது உரையில் ஜெரெமி கோர்பின் தெரிவித்தார். பிரிட்டனில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் பழமைவாதக்கட்சியும் அதன் பிரதமர் டேவிட் கமரோனும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத்தவறிவிட்டதாகவும் ஜெரெமி கோர்பின் குற்றஞ்சாட்டினார். டேவிட் கமரோன் பொருளாதார மேம்பாடு குறித்து பேசுகையில், 28 லட்சத்துக்கும் அதிகமான நடுத்தர வர்க்கததினர் மிக நீண்டகாலமாக ஊதிய உயர்வின்றி,…

  Read more
 • இந்தியாவில் அந்நிய முதலீட்டுக்கு நிலவும் தடைகள் நீக்கப்படும் – மோடி

  இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துவரும் அந்நிய முதலீட்டாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அந்நிய முதலீடுகளின்போது நடைமுறையில் காணப்படும் தடைகள் முற்றாக அகற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தொடரில் பங்கேற்க 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மோடி. தனது பயணத்தின்போது அமெரிக்காவின் 42 முன்னணி தொழி;ல் நிறுவனங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டார். இந்தியாவின் பொருளாதார கொள்கைகளில்; புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதுகுறித்து மோடி வழங்கிய…

  Read more
 • பிரேரணைக்கு இணை அநுசரணையாளராகும் இலங்கையின் முடிவு வரவேற்கத்தக்கது – அமெரிக்கா

  அனைத்துலக சமூகத்தின் அநுசரணை மற்றும் ஒத்துழைப்போடு, நம்பகத்தன்மையான நீதி விசாரணை அவசியம் என்ற மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணையை இலங்கை ஏற்று நடைமுறைப்படுத்த முன்வந்திருப்பது மிகவும் முக்கியத்துவமானது என்று, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். இந்தப் பிரேரணைக்கு இணை அநுசரணையாளராக இணைந்து கொள்வதென்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானமானது, பிரேரணையில் குறிப்பிடப்பட்டவற்றை சகலரும் இணைந்து அர்ப்பணிப்புடன் மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவும் ஏனைய நட்பு நாடுகளும் இணைந்து சமர்ப்பித்திருக்கும் பிரேரணையானது…

  Read more
 • நம்பிக்கையை பெறுவதில் இலங்கை வெற்றியடைந்திருக்கிறது – மங்கள சமரவீர

  மனித உரிமைப்பேரவையில் ஏனைய நாடுகளால் அந்நியப்படுத்தப்பட்டிருந்த இலங்கைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி இது என்று, அமெரிக்க பிரேரணை தொடர்பாக கருத்துவெளியிட்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். உண்மை, நீதி ஆகியவற்றின் அடிப்படையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற அரசாங்கத்தின் முனைப்புக்களில் தற்போது மனித உரிமை பேரவையையும் இணைத்துக்கொள்வதில் வெற்றிபெற்றிருப்பதாகவும், இலங்கைமீது கொண்டிருக்கும் நம்பிக்கையை மதித்து, புதிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தமது அரசு அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் மங்கள சமரவீர கூறியிருக்கிறார். 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர்…

  Read more
 • அமெரிக்காவின் பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு

  இலங்கையில் நீதியை நோக்கிய பயணத்தில் இது ஒரு தொடக்கப்புள்ளி என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ. நா. பிரேரணை தொடர்பில் தெரிவித்துள்ளது. நீதிக்குக் கிடைத்த முக்கியமான வெற்றி இது எனவும் பிரேரணை தொடர்பாக தமிழத்; தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் அமைக்கப்படவிருக்கும் விசாரணைக்கான நீதிப் பொறிமுறையில் ஏனைய நாடுகளையும் சேர்ந்த நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்கறிஞர்கள் சட்ட நிபுணர்கள் அங்கம் வகித்து ஆலோசனை வழங்க வேண்டும் என்று இந்த வரைவில் கூறப்பட்டிருப்பதை வரவேற்பதாகவும் கூட்டமைப்பு கூறியுள்ளது….

  Read more
 • சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து இலங்கை தப்பித்துக்கொள்ளக்கூடும்? – ஏஎவ்பி செய்தி நிறுவனம் ஊகம்

  இலங்கையில் நடைபெற்ற போரின்போதான போர்க்குற்ற நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துலக விசாரணையிலிருந்து இலங்கை தப்பித்துக்கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாக, பிரபல செய்தி நிறுவனம் ஏஎவ்பி ஊகம் வெளியிட்டுள்ளது. போரின்போது பாரிய அளவில் போர்க்குற்ற நடவடிக்கைகளும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றிருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கண்டறிந்து, அனைத்துலக நீதிபதிகள் அங்கம் வகிக்கும் கலப்பு நீதிமன்றம் இந்த குற்றங்கள் தொடர்பாக விசாரரைண நடத்த வேண்டும் என்று முன்மொழிந்திருந்தபோதிலும், இலங்கை அதனை வெற்றிகரமாக…

  Read more
 • ஐ. நா. மனித உரிமைகள் சபையில் திருத்தத்துடன் இலங்கைமீதான தீர்மானம்

  இலங்கையின் நீதித்துறைப் பொறிமுறையுள், பொதுநல நாடுகள் மற்றும் வெளிநாடுகளின் நீதிபதிகளும் உள்ளடங்கிய விசாரணை என்ற திருத்தத்துடன், போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைமீதான அமெரிக்காவின் தீர்மானம் ஐ. நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து, மசிடோனியா, மொன்ரெனேகுரோ ஆகிய நாடுகளின் அநுசரணையுடன் அமெரிக்கா கொணர்ந்த இத் தீர்மானம், இலங்கை அரசாங்க தரப்பின் நீண்ட தொடர் பேச்சுவார்த்தைகளின் பின்னர், ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்திருந்த `கலப்பு நீதிமன்ற’ விசாரணை என்பதற்கு பதிலாக, பொதுநல நாடுகள் மற்றும் வெளிநாட்டு…

  Read more
 • ஐரோப்பாவில் அதிகரிக்கும் குடியேற்றகாரர்களின் நெருக்கடி: ஜேர்மன் அதிபர் எச்சரிக்கை!

  ஐரோப்பாவை முற்றுகையிடும் குடியேற்றகாரர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துள்ள நிலையில், கடந்த புதனன்று மாத்திரம் 10 ஆயிரத்து 46 குடியேற்றகாரர்கள் ஹங்கேரி எல்லையைக் கடந்துள்ளதாகவும், ஓரே நாளில் ஐரோப்பாவில் நுழைந்த மிக அதிகமான குடியேற்றகாரர்களின் எண்ணிக்கை இதுவாகும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்தே, ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கல் இதனை தெரிவித்திருக்கிறார். ஐரோப்பாவில் நுழையும் குடியேற்றகாரர்கள் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முடிவுகள் தீர்வுகளை நோக்கிய தொடக்கமே என்றும், முழுமையான தீர்வுக்கான பயணம் மிக நீண்டது என்றும் மெர்க்கல்…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ