• தமிழ் நாட்டில் மதுவிலக்கை ஆதரித்த பாடகர் தேசத் துரோக வழக்கில் கைது..!!

  தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி பிர்சாரத்தில் ஈடுபட்ட கலைஞரும் பாடகருமான கோவன் என்கிற சிவதாஸ் தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இடது சாரி இயக்கமான, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் உறுப்பினரான இவர் மது விற்பனைக்கு எதிராக குரல் கொடுத்ததுடன் தமிழக அரசின் டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் மதுபான கடைகளை மூடுமாறு வலியுறுத்தியும் பாடல்களை இசைத்து வந்தார் என்றும் இவரது பாடல்கள் மாநில முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சிக்கும் வகையில் இருந்தாகவும் கூறப்படுகிறது. மது விற்பனைக்கு எதிராகவும் முதல்வர் ஜெயலலிதாவை கண்டிக்கும்…

  Read more
 • ரஷ்ய விமானம் வெடித்து சிதறிய விபத்தில் 224 பேர் பலி

  ரஷ்ய விமானம் வெடித்து சிதறிய விபத்தில் 224 பேர் பலி.இருந்து ரஷ்யா நோக்கி 224 பயணிகளுடன் சென்ற விமானம் ஷினாய் வான்பரப்பில் நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணித்த அனைவரும் ரஷ்ய நாட்டவர் என்றும் பயணிகளில் 17 குழந்தைகளும் அடங்குவதாகவும்தெரிவிக்;கப்படுகிறது. எகிப்தின் செங்கடல் பகுதியை அண்மித்த சுற்றுலா நகரமான ஷேர்ம் அல் ஷேக் விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவின் சென்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தை நோக்கி பயணத்தை தொடங்கிய சில நிமிட நேரத்தில் விபத்து சம்பவித்துள்ளது. ரஷ்யாவின் கோகலிமவியா விமான…

  Read more
 • வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை தடுக்கத் தவறியதற்கு அனைத்து தமிழரும் பொறுப்பு- எம்.ஏ.சுமந்திரன்

  வடக்கிலிருந்த முஸ்லீம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமையை தடுத்து நிறுத்த தவறியதற்கு அனைத்து தமிழர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்திருந்தால் விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து வெளியேற்றுவதைத் தடுத்திருக்க முடியும் என்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் முஸ்லிம் சமூகங்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை வெளிப்படையாகப் பேசுவதன் ஊடாகவே இரு சமூகத்துக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் முஸ்லிம் தலைமைத்துவங்களின் செயற்பாடுகள் தமிழர்களிடையே சந்தேகத்தை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். வடபகுதியிலிருந்து முஸ்லிம்கள் வெளி யேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு ஸ்ரீPலங்கா…

  Read more
 • ஓஸ்ரேலியாவின் மோர்லான்ட் நகர முதல்வராக இலங்கைப் பெண்மணி தெரிவு:

  ஒஸ்ரேலியாவின் மோர்லாண்ட் நகரத்தின் முதல்வராக இலங்கைப் பெண்மணியான சமந்தா ரட்ணம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் போர் காரணமாக சிறுவயதிலேயே நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். பசுமைக்கட்சியின் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சமந்தா ரட்னம் தொழிற்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து சமந்தா தோதலில் வெற்றியீட்டியுள்ளார்.

  Read more
 • நேபாளின் முதல் பெண் ஜனாதிபதியாக பித்யா தேவி தெரிவு:

  நேபாளத்தில் ஆளும் பொதுவுடமை கட்சியான ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும் பெண் உரிமை செயற்பாட்டாளருமான பித்யா தேவி பண்டாரி ; புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் கவுல் பகதுர் குருங்கைவிட 100 வாக்குகள் அதிகமாக பெற்று பித்யா தேவி பண்டாரி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 2008ம் ஆண்டு நேபாளம் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர், முதலாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ராம்பரன் யாதவை தொடர்ந்து அந்த நாட்டின் முதல்…

  Read more
 • ஐரோப்பா நோக்கி பயணித்த குடியேறிகள் படகு விபத்தில்:

  ஐரோப்பாவுக்குள் நுழையும் நோக்கத்துடன் குடியேறிகள் பயணித்த படகு ஒன்று கிரேக்கத்தின் லெஸ்போ தீவுக்கு அருகில் விபத்துக்குள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடுடைய குடியேறிகள் மரப்படகு மூழ்கிய போதிலும் அதில் பயணித்த 242 பேரை கிரேக்க கடலோர காவல் படையினர் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இரு சிறுவர்கள் உட்பட மூவர் மூழ்கி பலியாகியிருப்பதாகவும் காணாமல் போயிருப்பவர்கள் தொடர்டபான எண்ணிக்கையை உறுதி செய்ய முடியாதுள்ளது என்றும் கிரேக்க கடலோர படை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி தொடக்கம் கிரேக்க தீவுக்கு 5000க்கும் அதிகமான குடியேறிகள் வந்தடைந்துள்ளதாகவும் மத்திய மற்றும் வட…

  Read more
 • மியன்மார் தேர்தலில் எதிர்கட்சியினர் மீது தாக்குதல் :

  கடந்த 25 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்தடவையாக பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் மியன்மாரில்வன்சம்பவங்கள் தலைதூக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் விருது வென்ற ஆங் சான் சுகி தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி வேட்பாளர் ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலுக்கு இன்னமும் 10 நாட்களே உள்ள நிலையில் ஆங் சான் சுகி தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெற்றி வாய்ப்பு அதிகம் காணப்படும்…

  Read more
 • சீனாவின் குடும்பத்துக்கு ஒரு குழந்தை மட்டும் கொள்கை கைவிடப்படுகிறது:

  சீன அரசு நீண்ட காலமாக கடைப்பிடித்து வரும் குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்றும் கொள்கையை கைவிடத் தீர்மானித்திருப்பதாக அநத ;நாட்டின் சின்ஹ{வா செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இனி வரும் காலங்களில் தம்பதியினர் இரண்டு குழந்தைகளை பெறுவதற்கு அனுமதிப்பதாக ஆளும் பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது. குடும்பத்துக்கு ஒரு குழந்தை மட்டும் என்ற சட்டம் சீனாவில் 1979ம் ஆண்டு முதன்முதலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. நாட்டில் அதிகரித்து வந்த மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் முயற்சியாகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதுடன் இதனை மீறுவோருக்கு…

  Read more
 • துனிசிய `நால்வருக்கு’ சமாதான நோபல் பரிசு

  இந்த ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு, துனிசியாவின் ஜனநாயக மாற்றத்துக்கு துணையாகவிருந்த `துனிசிய தேசிய பேச்சுவார்தை நால்வர்’களாக விளங்கிய நான்கு அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. துனிசிய பொது தொழிற் சங்கம், துனிசிய ஐக்கிய நிறுவனம், துனிசிய மனித உரிமைகள் அமைப்பு, துனிசிய வழக்கறிஞர் சங்கம் ஆகிய துனிய சமூகத்தின் பல்துறை சார்ந்த இவ்வமைப்புகள், 2011ஆம் ஆண்டு புரட்சியின் பின்னர், துனிசியாவில் பரந்த ஜனநாயகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஆற்றிய பாரிய பங்களிப்புக்காக சமாதானத்துக்கான இந்த நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படுவதாக நோபல்…

  Read more
 • பெலரஸ் நாட்டு எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

  பெலரஸ் நாட்டைச் சேர்ந்த, ஸ்வெட்லனா அலெக்ஸிவிச் என்ற 67 வயதாகும் பெண் எழுத்தாளருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில், ரஷ்யாவின் எல்லையோடு அமைந்த நாடான பெலரஸின் ஸ்வெட்லனா அலெக்ஸிவிச், மனித வாழ்வின் அவலங்கள், அவதிகள் ஆகியவற்றை உணர்வுபூர்வமாக அணுகி, தன் பன்முகத் தன்மை கொண்ட எழுத்தாற்றல் மூலம் உலகறியச் செய்தவர். ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்து, இரண்டாம் உலகப் போர் போன்ற வரலாற்று கொடுமைகளில் சிக்கியோர்களின் துயரங்களை தனது எழுத்துக்களால் உலகின்…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ