• அமெரிக்க, துருக்கி, சுவீடன் நாட்டவருக்கு இரசாயனவியல் நோபல் பரிசு

  மரபணுக்களில் மாற்றங்களை மேற்கொண்டு புற்றுநோயைக் குணப்படுத்தும் வழிவகைகளை கண்டறிவதற்கு உதவும் ஆய்வுகளை மேற்கொண்ட சுவீடன் நாட்டவரும், இங்கிலாந்தின் பிரான்சிஸ் கிரிக் ஆய்வு மையத்தை சேர்ந்தவருமான தோமஸ் லிண்டாஸ், அமெரிக்காவைச் சேர்ந்த போல் மோட்ரிக் மற்றும் துருக்கி மற்றும் அமெரிக்க குடியுரிமை கொண்ட அஜிஸ் சன்கார் ஆகிய மூவருக்கும் இடையே இந்த ஆண்டின் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் தெரிவுக்குழு அறிவித்துள்ளது. உலகில் நிலவும் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு மரபணுக்களின் குணாம்சங்களே காரணம் என்று கண்டறியப்பட்டிருந்தபோதிலும், அதில்…

  Read more
 • ஜப்பான், கனடா விஞ்ஞானிகளுக்கு பௌதிகவியல் ஆய்வு நோபல் பரிசு

  பௌதிகவியலில் ஆய்வுகள் மேற்கொண்டமைக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு ஜப்பான், கனடா நாடுகளின் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது. பிரபஞ்ச இயக்கம் தொடர்பாக மேலும் கண்டறிவதற்கு அவசியமான  அணுவின் மிகவும் நுண்ணிய துகளான `நியூட்ரினோ’ தொடர்பான புதிய தகவல்களை வெற்றிகரமாக ஆய்வுசெய்தறிந்த ஜப்பான் நாட்டு விஞ்ஞானி தகாகி கஜிதா, கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆர்தர் மக்டொனால்ட் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்படும் என்று நோபல் தெரிவுக்குழு அறிவித்துள்ளது. ஒளியின் வேகத்தில் பிரபஞ்சத்தில் பயணிக்கும் நியூட்ரினோக்கள், தம் அடையாளத்தை மாற்றக்கூடியவை என்பதையும், இதுநாள்…

  Read more
 • நோபல் பரிசை வென்றவர்களில் இங்கிலாந்து முதலிடம்

  கடந்த 1901ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டுவரும் நோபல் பரிசு, இதுவரை 860 ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 131 ஆய்வாளர்கள் தங்கள் கல்வியின் ஒரு பகுதியை இங்கிலாந்தில் மேற்கொண்டவர்கள் என்றும் அதில் 38 சதவீதத்தினர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் உட்பட்;ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர்கள் என்றும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இதேபோன்று, நோபல் பரிசை பெற்றவர்களில் அமெரிக்காவில் கல்வி கற்றவர்கள் இரண்டாவது இடத்தையும், ஜேர்மனியில் உயர்கல்வி கற்றவர்கள் மூன்றாவது இடத்தையும் வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கல்வி கற்று…

  Read more
 • மூவருக்கு மருத்துவ நோபல் பரிசு

  மருத்துவத்துக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மலேரியா நோயை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த பங்களிப்பு வழங்கிய சீனாவைச் சேர்ந்த பேராசிரியர் யூயூ ரூ, கண்பார்வை இழத்தல் மற்றும் யானைக்கால் நோய் போன்ற, மூன்றாம் உலக நாடுகளில் அதிகமானவர்களை பீடித்திருக்கும் நோய்களுக்கு எதிராக மருந்தைக் கண்டுபிடித்த அயர்லாந்து நாட்டவரும், அமெரிக்க பேராசிரியருமான வில்லியம் சீ கம்பெல் மற்றும் ஜப்பான் நாட்டு உயிரியல் ஆய்வாளர் சத்தோசி ஓமுரா ஆகியோருக்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டொன்றில் மட்டும் ஒரு…

  Read more
 • சிரியாவில் பொதுஇடங்கள் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு `நேட்டோ’ கண்டனம்

  சிரியாவில் பொதுமக்கள் வாழ்விடங்கள்மீதும்; மற்றும் சிரிய அரசுக்கு எதிராக போராடும் புரட்சியாளர்கள்மீதும் தாக்குதல் நடத்துவதை ரஷ்யா உடனடியாக நிறுத்தவேண்டும் என்று `நேட்டோ’ அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது. இஸ்லாமிய அரசு அல்லது ஐ. எஸ். என்னும் அமைப்புக்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்தியிருப்பதாக ரஷ்யா தெரிவிக்கின்றபோதிலும், சிரிய அதிபர் அல் அசாத்துக்கு ஆதரவாகவே இந்த தாக்குதல்களை ரஷ்யா நடாத்திவருவதாகவும் நேட்டோ குற்றம்சாட்டியுள்ளது. ஐ. எஸ். அமைப்புமீது மட்டுமன்றி, அசாத்துக்கு எதிராக போராடும் சிரிய மக்கள்மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது என்று பிரிட்டஷ்…

  Read more
 • துருக்கி வான் பரப்பில் ரஷ்ய போர்விமானம்: துருக்கி கடும் கண்டனம்

  சிரியாவுடனான எல்லைப்பகுதியில் துருக்கியின் வான் பரப்பில் நுழைந்த ரஷ்ய போர் விமானம் ஒன்றை இடைமறித்து வழி திருப்பதியதாக துருக்கி கூறுகிறது. சனிக்கிழமை இச்சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. துருக்கி வெளியுறவு அமைச்சர் பெரீதுன் சினிர்லியோக்லு, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரொவ்வை அழைத்து தனது வலுவான எதிர்ப்பைப் பதிவுசெய்ததோடு, இப்படியான அத்துமீறல்கள் இனி நடந்தால் மொஸ்கோ அதற்கு பொறுப்பேற்கவேண்டிவரும் என்றும் எச்சரித்துள்ளார். `நேட்டோ’ அமைச்சர்களுடனும் இச்சம்பவம் பற்றி அவர் விவாதித்துள்ளார். அங்காராவிலுள்ள ரஷ்ய தூதரையும் துருக்கிய வெளியுறவுத்துறை அழைத்துப் பேசியுள்ளது….

  Read more
 • சிரியாவின் மற்றுமொரு புராதன சின்னம் தரைமட்டம்

  சிரியாவின் பழமைவாய்ந்த பல்மைராவில் மற்றுமொரு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த நினைவு மண்டபத்தை `இஸ்லாமிய அரசு’ என்ற ஐ. எஸ். அமைப்பு தகர்த்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,000 ஆண்டுகளுக்கு முனனர் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் `வெற்றி வளைவு’ எனப்படும் இந்த நினைவு மண்டபத்தை, இஸ்லாமிய அரசு என்ற ஐ. எஸ். அமைப்பு தகர்த்திருப்பதை ஏ. எப். பி. செய்தி நிறுவனமும் உறுதி செய்திருக்கிறது. சிரியாவில், ஏற்கனவே இரண்டு தொன்மைவாய்ந்த தேவாலயங்களை ஐ. எஸ். அமைப்பு அழித்திருந்தது. ஐக்கிய நாடுகள் கலாசார…

  Read more
 • விக்னேஸ்வரனிடம் விளக்கம் கோருவேன் – இரா சம்பந்தன்

  தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளிப்படுத்திய கருத்துக்கள், மற்றும் கூட்டமைப்பு எதிரான அவரின் நடவடிக்கைகள் குறித்து விரைவில் அவரிடம் விளக்கம் கோரவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்திலும், அதனைத் தொடர்ந்து ஐ. நா. மனித உரிமைப் பேரவையின் அமர்வு இடம்பெற்ற காலத்திலும், வடமாகாண முதலமைச்சர் விடயத்தில் முரண்பாடான கருத்துக்களை கூறுவது அல்லது, எங்களுக்குள் குழப்பம் இருப்பதாக காட்டுவது பொருத்தமாக இருந்திருக்காது என்றும், அதனாலேயே மௌனமாக இருந்தாகவும் வலிகாமம் கிழக்கு…

  Read more
 • அரசியலமைப்பு மாற்றம் அவசியம் – மைத்திரிபால சிறிசேன

  இலங்கையின் அரசியலைமப்பில் மாறுதல்களை ஏற்படுத்தாமல் சர்வதேச நீதிமன்றமொன்றை இலங்கையில் அமைப்பது சாத்தியமற்றது என்பதுடன், இது மிகவும் சிக்கலானது என்றும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள்குறித்த விசாரணைப் பொறிமுறையானது நாட்டின் அரசியலமைப்புக்கு உள்பட்டதாகவே அமையும் என்றும், ஐ. நா. மனித உரிமைகள் ஆணையகம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் உள்ளகப் பொறிமுறையினூடாக மட்டுமே முன்னெடுக்கப்படும் என்றும் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி சிறிசேனா குறிப்பிட்டுள்ளார். விசாரணைப் பொறிமுறை விடயங்கள்…

  Read more
 • பாகிஸ்தானில் இந்தியாவின் தீவிரவாத நடவடிக்கைகள்

  பாகிஸ்தானில் இந்தியா மேற்கொண்டுவரும் தீவிரவாத நடவடிக்கை தொடர்பான ஆதாரரங்கள் ஐ. நா. விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கூட்டத்தொடரின்போது இந்த ஆதாரங்கள் பாகிஸ்தான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் இடம்பெறும் தீவிரவாத நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றுடன்; இந்தியா தொடர்புகொண்டுள்ளதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படடுள்ளதாகவும், பலுஜிஸ்தான், பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் கராச்சி ஆகிய இடங்களில் இந்தியா மேற்கொண்ட தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பான ஆதார ஆவணங்கள் பாகிஸ்தான் தூதரூடாக ஐ. நா….

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ