• 500க்கும் மேற்பட்ட கைதிகள் தவறுதலாக முற்கூட்டியே விடுதலை

    இங்கிலாந்தின் சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டிருந்த கைதிகள் பல தடவைகள் தவறுதலாக விடுவிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. கொலை மற்றும் பாரிய குற்றச் செயல்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்துவந்த கைதிகள் இவ்வாறு தண்டனைக்காலத்துக்கு முன்பதாக விடுவிக்கப்பட்டதாகவும், தவறு கண்டுபிடிக்கப்பட்டு இவர்கள் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தவறுதலாக தண்டனைக்காலத்துக்கு முன்பதாக கைதிகள் விடுவிக்கப்பட்ட சம்பவங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 505 தடவைகள் நடைபெற்றிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2014-2015ஆம் ஆண்டு காலத்தில் மட்டும் 48 கைதிகள் தண்டனை முடிவடைவதற்கு முன்பாக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், கொலைக் குற்றத்துக்கு தண்டனை…

    Read more
  • இலங்கையில் பொலித்தீன் பாவனைக்கு ஜனவரி மாதம் முதல் தடை

    எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பொலித்தீன் பொதிகள், பைகள் மற்றும் அவை சார்ந்த உற்பத்திகளை பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் என்பது தடைசெய்யப்படவுள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்தினையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்குடனேயே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. 20 மைக்ரோன்களுக்கு குறைவான கனவளவைக்கொண்ட பொலித்தீன் பொதிகளின் பயன்பாட்டிற்கே முதலாம் திகதி தொடக்கம் இத தடையுத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. தடையுத்தரவுகளை மீறி பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், 10 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

    Read more
  • 15 ஆண்டுகளில் இந்தியா உலகின் 3ஆவது பொருளாதார வல்லரசு

    இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாகமாக முன்னேறி வருவதாகவும், 2029ஆம் ஆண்டுக்கு முன்பதாக ஜப்பானை 4ஆவது இடத்துக்கு பின்தள்ளி, உலகின் 3ஆவது மிகப்பெரிய வல்லரசு நாடாக இந்தியா விளங்கும் என்றும் அமெரிக்க விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 2029ஆம் ஆண்டில், சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக மாறும் என்றும், அமெரிக்கா முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும் என்றும் தெரிவிக்ப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 10 ஆயிரத்து 133 பில்லியன் டொலர்களாக உயரும் அதேவேளை,…

    Read more
  • எல்லைதாண்டி பாதுகாப்பு நடவடிக்கைகளில் சீன இராணுவத்துக்கு அனுமதி

    பாதுகாப்பை உறுதிசெய்து, தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும், அதிமுக்கிய தொழில்நுட்ப தகவல்களை சீன அரசுக்கு வழங்குவது தொடர்பிலும் புதிய தீவிரவாத தடுப்புச் சட்டத்துக்கு சீன அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியால் அங்கீகரித்திருந்த இந்த புதிய சட்டமூலத்தை 159 உறுப்பினர்களைக்கொண்ட தேசிய மக்கள் காங்கிரஸ{ம் ஏற்றுக்கொண்டது. சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் தனது தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை எல்லை கடந்து மேற்கொள்வதற்கு இது அனுமதிக்கிறது. வெளிநாடுகளில் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் சீன இராணுவம் ஈடுபடுவதற்கு இந்த சட்டமூலம்…

    Read more
  • ஈராக்கில் ஐ. எஸ். அமைப்புக்கு முதலாவது பெரும் தோல்வி

    ஈராக்கின் முக்கிய நகரமான றமாடியை இஸ்லாமிய அமைப்பான ஐ. எஸ். ஸிடமிருந்து ஈராக் படையினர் திரும்பவும் கைப்பற்றியுள்ளார்கள். றமாடியைக் கைப்பற்றும் முயற்சியில் கடந்த பல நாள்களாக சுற்றிவளைப்புத் தாக்குதல் நடாத்திய ஈராக் படையினர், ஞாயிற்றுக்கிழமை றமாடியைத் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் படையினரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில், ஐ. எஸ். ஆயுததாரிகள் அங்கிருந்து வெளியேறியிருப்பதாகவும் ஈராக் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஈராக் படையினர் கவச வாகனங்கள் சகிதம் றமாடி நகரத்தினுள் பிரவேசித்தது…

    Read more
  • அமெரிக்காவில் வானிலைச் சீற்றம்: 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

    அமெரிக்காவின் தென்பகுதியில்; கிறிஸ்துமஸ் தின விடுமுறை நாள்களின்போது வீசிய சூறாவளி காரணமாக இருபதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். டெக்ஸாஸ் மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸின் டல்லஸ் பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காரணமாக வீதிகளில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் பயணிகளுடன் தூக்கி வீசப்பட்டன. இவ்வாறான விபத்துக்களில் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளார்கள். டெக்ஸாஸின் கிழக்கே மிஸ்ஸிஸிப்பி, டென்னெஸ்ஸி, ஆர்கன்ஸாஸ் ஆகிய மாகாணங்களில் கடும் சூறாவளி வீசியதில் பதினேழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக பல இடங்களில் மின் இணைப்புத்…

    Read more
  • குடும்பத்துக்கு ஒரு குழந்தை மட்டும் திட்டம் சீனாவில் முடிவுறுகிறது

    சீனாவில் 2016ஆம் ஆண்டு முதல் தம்பதிகள் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுவதற்கு சீன அரசு அதிகாரபூர்வமாக அநுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகிலேயே மிக கூடுதலான மக்கள்தொகைகொண்ட சீனாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு குழந்தை மட்டும் திட்டத்தை 1979இல் சீன அரசு அறிவித்தது. சீனாவில் அண்மைக்காலமாக முதியோர் எண்ணிக்கை அதிகரித்து, இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருவது அவதானிக்கப்பட்டது. அத்துடன், உழைக்கும் திறன் குறைந்து வருவதாகவும், இதனால், பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்தே, குடும்பத்துக்கு…

    Read more
  • யாழ். மறைமாவட்ட ஆயராக ஜஸ்ரின் ஆண்டகை

    யாழ். மறைமாவட்டத்துக்கான புதிய ஆயராக ஜஸ்ரின் ஆண்டகை திருநிலைப்படுத்தப்பட்டார். புதிய ஆயராக ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் திருநிலைப்படுத்தல் சடங்கு 26ஆம் திகதி யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. இலங்கையின் அனைத்து மாவட்டங்களினதும் ஆயர்கள், கர்தினால்மார்கள், குருக்கள், அருட்சகோதரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் இந்த திருநிலைப்படுத்தல் சடங்கல் கலந்து சிறப்பித்தார்கள். யாழ்.மறை மாவட்டத்தின் 11ஆவது ஆயர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Read more
  • தீர்வு திட்டத்தை ஆராய்வதற்கு தமிழ் மக்கள் பேரவை உபகுழு நியமனம்

    தமிழ் மக்களுக்கான உகந்த அரசியல் தீர்வுத்திட்டத்தை ஆராய்வதற்கு உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையானது அடுத்த கட்டதை நோக்கி நகரவேண்டி உள்ளதாகவும், அதன் அடிப்படையில் அரசியல் தீர்வுதிட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு உபகுழு ஒன்று நியமிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐந்து அங்கத்தவர்களைக்கொண்ட வெளிநாட்டு நிபுணர் குழு இணைக்கபடவுள்ளதாகவும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் வகையில் ஆவணங்கள் தயாரிக்கபட்டு ,அவை பேரவையால் ஏற்றுக்கொள்ளபட்ட பின்னர் மக்களுக்கு அறியத்தரப்படும் என்றும்…

    Read more
  • உள்ளூராட்சி மன்ற தேர்தல்: புதிய கூட்டணி முயற்சியில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு

    உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு புதிய அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சியில் மஹிந்த ராஜபக்ஷவும் அவருக்கு நெருக்கமானவர்களும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. `எமது ஸ்ரீலங்கா முன்னணி’ என்று பொருள்படும் ‘அபே ஸ்ரீலங்கா பெரமுன’ (Our Sri Lanka Front) என்ற பெயரில் இந்த புதிய அரசியல் கூட்டணி அழைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, பிவிதுறு ஹெல உறுமய மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்தே இந்த புதிய…

    Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ