• உள்ளூராட்சி சபைகளின் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு

    இலங்கையில் இதுவரை கலைக்கப்படாத உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் மேலும் 6 மாத காலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நகர சபை, மற்றும் மாநகர சபைகளின் ஆட்சிக் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை அறிவித்துள்ளார்.

    Read more
  • சுவீடனில் வேலை நேரம் 6 மணித்தியாலங்கள்

    சுவீடனில், நாளாந்த வேலை நேரம் படிப்படியாக 6 மணி நேரமாக குறைக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் இந்த வேலை நேர குறைப்பை நடைமுறைப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில் கூடுதல் உற்பத்தி திறனுடன் அலுவலகப் பணியை முடித்துவிட்டு, தங்களது தனிப்பட்ட வாழ்வில் கூடுதல் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட அனுமதிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சுவீடனின் கோதன்பர்க் நகரில் உள்ள `ரொயோற்ரா’ மையங்களில் 13 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வேலை…

    Read more
  • வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கும் ஊழல் மோசடிகாரர்கள்

    கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் பாரிய அளவில் ஊழல்கள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள், இரகசியமான முறையில் குடும்பங்களுடன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்து வருவதாக இலங்கை காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாட்டைவிட்டு இரகசியமாக வெளியேறி, வெளிநாடுகளில் குடியேறுவதற்கான முயற்சிகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்pறனர். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடியொன்றுடன் தொடர்புடையதாக குற்றம்சுமத்தப்பட்ட பெண் அதிகாரியொருவர் ஏற்கனவே இவ்வாறு இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதை சுட்டிக்காட்டியிருக்கும் புலனாய்வுத்துறையினர், நிதி மோசடிகள்…

    Read more
  • இலங்கை முழுவதும் ஆழிப்பேரலை அனர்த்த நிகழ்வுகள்

    ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நாடு முழுவதும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. காலை 09.25 முதல் 09.27 வரையான இரண்டு நிமிடங்களுக்கு மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்திருந்துடன், ஆத்மசாந்தி வேண்டி 25 மாவட்டங்களிலும் விசேட சமய நிகழ்வுகளும் இடம்பெற்றன. யாழ்ப்பாணம்: வடமராட்சி கிழக்கு உடுத்துறையில், ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் பெருமளவான உறவினர்கள் கல்லறைகளில் சுடரேற்றியும் உணவு வகைகளைப் படைத்தும் நினைவு கூர்ந்தனர். அங்கு நினைவுக் கூட்டமும் இடம்பெற்றதுடன், உடுத்துறையில்…

    Read more
  • முல்லைத்தீவில் பலப்படுத்தப்படும் இராணுவ முகாம்கள்

    முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் காணிகளில் அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மல்லாவி, கொக்காவில், மாங்குளம், ஒட்டுசுட்டான், கேப்பாபுலவு, மன்ன கண்டல் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் உள்பட பல இராணுவ முகாம்களை பலப்படுத்தி, நிரந்தர முகாம்களாக மாற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரத்தில் இலங்கை பீரங்கிப் படையணி முகாமை பலப்படுத்தியுள்ளதோடு. அந்த முகாமுக்கு செல்லும் வழியை குறித்துக்காட்டுவதற்காக பதாகை ஒன்றையும் சுதந்திரபுரம் சந்தியில் அமைத்து வருகின்றனர். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் 2009ஆம்…

    Read more
  • சீனாவில் 17 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன

    சீனாவில் முன்னொருபோதும் இல்லாத அளவில் சுற்றாடல் மாசுபாடு அதிகரித்துள்ள காரணத்தால், அண்மையில் இரண்டாவது தடவையாக அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிற்சாலைகளில், இயக்கத்தை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டின் ஜனவரி மாதம் முதல் செப்ரெம்பர் மாதம்வரை, ஒரு லட்சத்து 40 ஆயிரம் தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட மாசு வெளியேற்ற ஆய்வு முடிவுகளைத் தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமைவரை 17 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. இதுதவிர, 28 ஆயிரத்து 600 நிறுவனங்கள்…

    Read more
  • நைஜீரியாவில் ஷியா முஸ்லிம்களின் பாரிய மனித புதைகுழி

    நைஜீரியாவின் வடக்கு நகரமான சாரியாவில் இராணுவம் நடாத்திய, நியாயப்படுத்த முடியாத தாக்குதலில் சுமார் 300க்கும் அதிகமான ஷியா முஸ்லிம்களை கொன்று, அவசரமாக அவர்களது சடலங்களைப் புதைத்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பதாகவும், இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் குடும்ப உறுப்பினர்களின் அநுமதி இன்றி அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இந்த படுகொலைச் சம்பவம் சர்வதேச அளவில் ஷியா முஸ்லிம்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, ஷியா முஸ்லிகளைப் பாதுகாக்குமாறு நைஜீரிய…

    Read more
  • காலைத் தொட்டு வணங்கினார் மோடி

    லாகூரின் புறநகர் பகுதியில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் இல்லத்தில் ஷெரீபுடன் பேச்சுக்களை நடாத்திய மோடி, அங்கு நவாஸ் ஷெரீபின் தாயாரது கால்களைத் தொட்டு வணங்கியபோது அனைவரும் நெகிழ்ச்சியடைந்ததாக பாகிஸ்தான செய்திகள் தெரிவிக்கின்றன. மோடியும் நவாஸ் ஷெரிபும் பேசிக்கொண்டிருந்த மண்டபத்துக்குள் நவாஸ் ஷெரீபின் குடும்பத்தினர் அவருக்கு மரியாதை செலுத்த அங்கு சென்றபோது, நவாஸ் ஷெரீபின் தாயாரும் உடன் சென்றதாகவும், உடனே மோடி எழுந்து அவர் அருகில் சென்று, குனிந்து அவரது காலை தொட்டு வணங்கி ஆசி…

    Read more
  • பாகிஸ்தான் பிரதமரின் இல்லத் திருமணத்தில் பிரதமர் மோடி

    பாகிஸ்தானுக்கு எதிர்பாராத, திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் இல்லத்தில் நடந்த அவரது பேர்த்தியின் திருமண நிகழ்ச்சியில், கலந்து மணமக்களை வாழ்த்தினார். மணமக்களை வாழ்த்தியபின்னர், நவாஸ் ஷெரிபின் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் இரு நாட்டு உறவு குறித்து பேச்சு நடத்தினர். பின்னர், தனது குறுகிய பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு, லாகூர் விமான நிலையம் வழியாக மோடி நாடு திரும்பினார ரஷ்யாவுக்கும்…

    Read more
  • போக்குவரத்து மீறல்களுக்கு உடனடி தண்டம்

    இலங்கை நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் பெரும் எண்ணிக்கையிலான வழக்குகளை துரிதப்படுத்தும் வகையில் அடுத்த வருடம் முதல், போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக வழக்குகளைத் தொடராமல், அவற்றுக்கு நேரடியாகவே தண்டப் பணம் அறவிடும் முறையொன்றை அறிமுகப்படுத்தவிருப்பதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். நீதிமன்றங்களில் விசாரிக்கப்படாமல் இருக்கும் வழக்குகளில் போக்குவரத்து மீறல்கள் தொடரபான வழக்குகளே அதிகம் எனவும் குறிப்பிட்ட அமைச்சர், இணக்க சபையில் ஆராயப்படும் வழக்குகளுக்கான பெறுமதியை 5 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த…

    Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ