• சுவிஸில் இந்திய – பாகிஸ்தான் நல்லுறவுப் பேச்சு

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை சுவிற்சர்லாந்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் பேச்சுக்களை, புது டில்லியில் நடத்தவேண்டும் என்று இந்தியாவும், இஸ்லாமாபாத்தில் நடத்தவேண்டும் என்று பாகிஸ்தானும் வலியுறுத்திவரும் நிலையில், இப் பேச்சுக்கள் தற்போது சுவிற்சர்லாந்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதார அமைப்பின் 46ஆவது கூட்டத்தொடர் சுவிஸில் எதிர்வரும் ஜனவரி 20முதல் 23வரை நடைபெறும்போது, இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ள இந்திய பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்…

    Read more
  • ருவாண்டா இனப்படுகொலை: ஐ. நா. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

    சுமார் 20 ஆண்டுகளாக ருவாண்டா இனப்படுகொலை விசாரணைகள் நடந்துவந்தன. ருவாண்டா இனப்படுகொலை விவகாரத்தை விசாரணைசெய்துவந்த ஐ. நா. சபையின் சர்வதேச குற்றவிசாரணை நீதிமன்றம், இதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 6 பேரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களில், மூன்று குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை தலா 47 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. ருவாண்டாவில் 1994ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களை விசாரிப்பதற்காக, தன்ஸானியாவின் அருஷா நகரில் ஐ. நா. சபையின் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது….

    Read more
  • யாழ் குடாநாட்டுக்கு 40 ஆயிரம் வீடுகள் தேவை

    யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முழுமையாக 39 ஆயிரத்து 300 புதிய வீடுகள் அமைக்கப்படவேண்டிய தேவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற 2016ஆம் ஆண்டுக்கான நகர திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடலின்போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்கள், மீள்குடியேறவுள்ள மக்கள், நலிவடைந்த மக்கள் மற்றும் பொதுவாக அமைக்கப்பட வேண்டியுள்ள வீடுகள், மலசலகூடங்கள், நீர் வசதிகள் தொடர்பான மதிப்பீட்டு தரவுகளில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில்…

    Read more
  • சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்க வீஸா மறுப்பு

    முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுககு வீஸா வழங்க கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளது. அமெரிக்க பயணம் மேற்கொள்வதற்காக சரத் பொன்சேகாவினால் கையளிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவுக்கான வீசா விண்ணப்பத்தை அமெரிக்க தூதரகம் நிராகரிததிருப்பதை சரத் பொன்சேகாவின் செயலாளர் சேனக டி சில்வா உறுதிசெய்துள்ளார். எனினும், அமெரிக்க வீஸா மறுக்கப்பட்மைக்கான காரணம் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை

    Read more
  • தேசிய வழிபாட்டு நகரமாகிறது சபரிமலை

    சபரிமலையை தேசிய வழிபாட்டு நகரமாக்கும் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் பல லட்சக் கணக்கான மக்கள் வழிபாடுசெய்யும் சபரிமலையை தேசிய வழிபாட்டு மையமாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துவரும் நிலையில் கேரள அரசு, மத்திய அரசுக்கு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் அமைச்சர்களும் பிரதமர் மோடியைச் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தியதை தொடர்ந்து, பிரதமர் மோடி தனது கேரள மாநில சுற்றுப்பயணத்தின்போது சபரிமலையை வழிபாட்டு நகரமாக அறிவிப்பார்…

    Read more
  • சவூதி அரேபிய தேர்தல்: முதல் முறையாக பெண் உறுப்பினர்கள் தேர்வு

    சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிட்ட சல்மா பிந்த் ஹிஜாப் அல்-ஒடேய்பி என்னும் பெண் வேட்பாளர் மெக்கா மாகாண நகரசபை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளர். இவரோடு, மேலும் 16 பெண்கள்வரை இத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாக தெரியவருகிறது. கடுமையான பழமைவாத கொள்கைகளை கடைப்பிடிக்கும் நாடான சவூதி அரேபியாவில் முதல் தடவையாக பெண்கள் தேர்தலில் வாக்களிக்க அநுமதி அளிக்கப்பட்டிருந்ததுடன், தேர்தலில் போட்டியிடவும் அநுமதிக்கப்பட்டனர். உள்ளூராட்சித் தேர்தல்களில் 5938;…

    Read more
  • படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு?

    இலங்கையில் கடந்த காலங்களில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஊடக அமைச்சுமீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் இதுவரை ஊடகவியலாளர்கள் 44 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்றும், ஊடகவியலாளர்களை படுகொலைச்செய்த யுகம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனாவும் மிகுந்த ஆதரவாக உள்ளதாகவும், இந்த திட்டம் விரைவில்…

    Read more
  • இலங்கைச் சுற்றுலாப் பயணத்தில் இந்தியர்கள் முதலிடம்

    இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் வருபவர்களில் இந்தியர்கள் முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைச் சுற்றுலாப்பயணத்துறைக்கு பெரும் வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 29 ஆயிரம் இந்தியர்கள் இலங்கை வந்ததாக இலங்கையின் சுற்றுலாப் பயணத்துறை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 48.4 வீதம் அதிகமாகும். இந்தியர்களுக்கு அடுத்தபடியாக கடந்த மாதம் 16 ஆயிரம் சீன மக்கள் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தார்கள். கடந்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த சீனமக்களைவிட இது 54 வீதம்…

    Read more
  • புவி வெப்பமடைதலை தடுக்க உதவும் உடன்படிக்கை: திட்ட வரைபில் உடன்பாடு

    உலக வரலாற்றில் முதல் தடவையாக காலநிலை மாற்றம் தொடர்பான உடன்படிக்கைக்கான நகல் குறித்து உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடைபெறும் 190க்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மாசு வாயுக்களை வெளியிடுவதில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு பூமி வெப்பமாதலை உடனடியாக 2 சதம பாகையால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது உள்பட பல்வேறு அத்தியாவசியமான அம்சங்கள் இந்த உடன்பாட்டில் முன்மொழியப்பட்டுள்ளன. எனினும், சீனா…

    Read more
  • சவூதி அரேபியாவில் பெண்கள் முதல் தடவையாக வாக்களிப்பு

    கடுமையான பழமைவாத கொள்கைகளை கடைப்பிடிக்கும் நாடான சவூதி அரேபியாவில் முதல் தடவையாக பெண்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டதுடன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் ஈட்டியுள்ளனர். சனிக்கிழமை 12ஆம் தேதி இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் 5938; ஆண்களுடன் 978 பெண்களும் போட்டியிட்டனர். சவூதி அரேபிய தேர்தலில் வாக்களிக்க ஒரு லட்சத்து 30 அயிரம் பெண்கள் பதிவு செய்திருந்ததாகவும், வாக்களிப்பு வீதம் அதிகமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன….

    Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ