• ஹோம்ஸ் நகரிலிருந்து சிரிய அரச எதிர்ப்பு படை வெளியேற்றம்

  சிரியாவில் அதிபர் பஷர் அல் அஸாத் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த கிளர்ச்சிப்படையினர் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கைக்கு அமைவாக ஹோம்ஸ் நகரிலிருந்து வெளியேற ஆரம்பித்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹோம்ஸ் நகரம் முழுவதையும் அரசிடம் கையளிக்கும் அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள், தற்போதும் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் இத்லிப் மாகாணம் நோக்கி செல்கின்றனர். ஹோம்ஸ் நகரிலிருந்து கிளர்ச்சியாளர்களை ஏற்றிச் சென்ற முதலாவது பேரூந்து வெளியேறியிருப்பதாக போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. அரச எதிர்ப்பு போராளிகளுடன்…

  Read more
 • மேலும் காணிகள் ஜனவரியில் மக்களிடம் கையளிக்கப்படும் – ரணில்

  இலங்கையின் வடக்கு, கிழக்கில் எதிர்வரும் ஜனவரியில் மேலும் காணிகளை மக்களுக்குக் கையளிக்கப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். மக்களிடம் அவர்களது காணிகளைக் கையளிப்பது மட்டுமன்றி, பொருளாதாரத்தை மேம்படுத்தி, அவர்களைச் சமூக மயமாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற மனித உரிமைகள் தின நிகழ்வில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த பிரதமர், சமூகங்கள் தொர்பான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாகவும் கூறினார். மக்களின் காணிகளை மீள கையளிப்பது தொடர்பாக அரசாங்கம்…

  Read more
 • தனி நபர்கள் பாதுகாப்பு சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்து

  தனிநபர்கள் பலவந்தமாக கடத்திச் செல்லப்படுவதுபோன்ற நடவடிக்கைகளிலிருந்து தனி நபர்களை பாதுகாக்கும் சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று இந்த பிரகடன வரைவில் இலங்கை கைச்சாத்திட்டிருப்பதாகவும், ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி ரூவன் பெரேரோ இந்த பிரகடனத்தில் கைச்சாத்திட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சர்வதேச தனிநபர் பாதுகாப்பு பிரகடனத்தில் இலங்கையும் கையெழுத்திட்டிருப்பதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டுமுதல் இதனை நடைமுறைக்கு கொண்டுவரும்வகையில் சட்டமா அதிபர் திணைக்களம் சட்ட…

  Read more
 • வழமைபோலவே மார்கழி இசைவிழா…

  சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி இசை விழா இந்த ஆண்டும் திட்டமிட்டவாறு நடைபெறும் என்று இசைவிழாக்களை நடாத்தும் சபாக்கள் தெரிவித்துள்ளன. எனினும், வழக்கம்போல இசைக் கொண்டாட்ட விழாவாக அல்லாமல், வெள்ளத்தால் பாதிப்பட்டவர்களுக்கான நினைவு நிகழ்வாக இது அர்ப்பணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சபாக்களான மியூசிக் அக்கடமி, நாரத கான சபா, ஸ்ரீ கிருஷ்ண கான சபா உள்பட, கர்நாடக இசை விழா சபாக்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வரலாறு காணத அவலம்…

  Read more
 • மன்னார் ஆயர் நாடு திரும்பினார்

  மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் இன்று மன்னார் திரும்பினார். சிகிச்சையின் பின்னர் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை புதன்கிழமை காலை பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபின்னர், அங்கிருந்து சிறப்பு ஹெலிகொப்டர்மூலம் மன்னார், தள்ளாடி விமான தளத்தை சென்றடைந்தார். தள்ளாடி விமான தளத்தில் ஆயரை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்டர் சூசை மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் வரவேற்றனர்.

  Read more
 • அஞ்சலா மேர்க்கல் – 2015ஆம் ஆண்டின் சிறந்த நபர்!

  ஆண்டு தோறும் உலகளாவிய ரீதியில் சிறந்த நபரை தேர்ந்தெடுத்து கௌரவிக்கும் ஷரைம்| சஞ்சிகை இந்த ஆண்டின் சிறந்த நபராக ஜெர்மன் அதிபர் அஞ்சலா மெர்க்கலை தேர்வு செய்து கௌரவித்துள்ளது. ஐரோப்பாவில் நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடி, சிரியாவிலிருந்து வெளியேறும் அகதிகள் விவகாரங்களில் சிறப்பாக செயல்பட்ட அதிபர் மெர்க்கலின் தலைமைப் பண்பை மதித்து இந்த கௌரவம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓர் அரசியல், தலைவர் நாட்டு மக்களிடம் கேட்கத் தயங்கும் அளவைவிட மிக அதிகமாக அஞ்சலா மெர்க்கல் அவர்களிடம் கேட்டுப்…

  Read more
 • சென்னையில் வெள்ளம்: 137 ஆண்டுகளில் முதல் தடவையாக `இந்து’ தடைபட்டது!

  சென்னையில் மீண்டும் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில், இந்தியாவின் மிகப் பழமையும் பிரசித்தமும் வாய்ந்த பத்திரிகையான `இந்து’ தினசரியின் இன்றைய பதிப்பு வெளிவராது தடைபட்டுள்ளது. கடந்த 137 ஆண்டுகால வரலாற்றில் முதல்தடவையாக `இந்து’ இன்று தடைபட்டுள்ளதாக, கஸ்தூரி ஐயங்கார் குடும்பத்தவர்களுக்கு சொந்தமான இப் பத்திரிகையின் தற்போதைய வெளியீட்டாளர் என். முரளி தெரிவித்திருக்கிறார். சென்னையில் தலைமையகத்தைக்கொண்ட இந்திய தேசிய தினசரியான `இந்து’, சென்னைதவிர மேலும் 17 நகர்களில் வெளியிடப்படுகிறது. சென்னையிலிருந்து 18 மைல்கள் தூரத்திலுள்ள மறைமலையடிகள் நகரில், பிரமாண்டமான அச்சுவாகன வளாகத்தில்…

  Read more
 • லிபியாவுடனான எல்லையை துனிசியா மூடியது

  துனிசிய ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் பயணித்த பேரூந்துமீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, லிபியாவுடனான எல்லையை மூடுவதாக துனிசியா அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னர் அவசரகாலநிலை பிறப்பிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, தற்போது அடுத்த 15 நாட்களுக்கு எல்லை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிபிய எல்லையை மூடுவதற்கு பாதுகாப்புப் படைகளுக்கு மேலதிகமாக 6 ஆயிரம்பேரை இணைத்துக் கொள்வதற்கு துனிசியா தீர்மானித்துள்ளது. சிரியாவிலிருந்து இஸ்லாமிய அரசு போராளிகள் ஊடுருவதை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என்றும் துனிசியா தெரிவித்துள்ளது.

  Read more
 • சிரிய நாட்டு அகதிகளை நாடுகடத்தும் நடவடிக்கையில் ஜேர்மனி

  சிரியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஜேர்மனியில் அடைக்கலம் கோரியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளை ஜேர்மனி மேற்கொள்ளவுள்ளது. அடைக்கல கோரிக்கை நிராகரிக்கபட்டவர்களை உடனடியாக நாடுகடத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக ஜேர்மனிக்குள் நுழைந்து அடைக்கலம் கோரியிருக்கும் சிரியா மற்றும் ஈராக் நாட்டவர்கள் பலர் தமது கடவுச்சீட்டுகளையும் அடையாள அட்டைகளையும் அழித்தொழித்;துவிட்டதாகவும் ஜேர்மனிய குடிவரவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசியல் அடைக்கல கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்பேரை உடனடியாக நாடுகடத்தவிருப்பதாகவும், இவர்களில் கடவுச்சீட்டுகளை கொண்டிராதவர்களுக்கு தற்காலிக பயண ஆவணம் வழங்கி…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ