• மீண்டும் தொடங்கும் மிடுக்கு

  மார்கழிச் சென்னை; சென்னையில் இசைவிழா களைகொள்கிறது. சில சபாக்களில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுடன் சில கச்சேரிகள் சில தினங்கள் ஒத்திவைக்கப்பட்டு தொடர்கின்றன. இசைவிழா காலத்தின்போதுதான் எம். ஜி. ஆரும் மறைந்தார். அப்போதும் சில தினங்கள் இடைநிறுத்தப்பட்ட நிகழ்வுகள் பின்னர் தொடர்ந்தன. அப்போது சுப்புடு எழுதிய விமர்சனம் ஒன்று எப்போதும் நினைவில் வரும். `எம். ஜி. ஆர். மறைந்த கவலை சோமுவுக்குத்தான் தீரவில்லை.’ பின்னர் நிகழ்ந்த மதுரை சோமுவின் கச்சேரியை இப்படி விமர்சித்திருந்தார் சுப்புடு. இப்படி, எத்தனை `சங்கதிகள்’….

  Read more
 • அமெரிக்க அதிபர் தேர்தல்: வரலாற்றுப் புதுமையின் நாயகியா, நாயகனா?

  அமெரிக்க மக்கள் வாக்களிப்புக்கு தயாராகும் நிலையில், அடுத்த அதிபர் எவராக இருக்கலாம் என்ற ஊகங்கள், எதிர்வு கூறல்களுக்குள் அகப்படாது தப்பித்துக்கொள்ளும் தேர்தலாக இதன் இறுதிக்கணங்கள் மாறியிருக்கின்றன. ஆற்றுலும் தகைமையும்கொண்ட பல போட்டியாளர்களிலிருந்து மிகச்சிறந்த ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை ஏற்படும்போதோ, தலைமைப் பதவிக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர்கள் அல்லது தகுதியற்றவர்கள் என்று மக்களால் கருத்தப்படுபவர்கள் தேர்தல் களத்தில் காணப்படும்போதோ, இவ்வாறு முடிவை எதிர்வுகூற முடியாத நிலை ஏற்படுவதுண்டு. வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு, தகுதியும் பதவிக்கு பொருத்தமும் இல்லாதவர்கள்…

  Read more
 • கேள்விகளுக்கு பதில் என்ன? முதல்வருக்கு அரசாங்கம் வேண்டும்!

  ஆர். நடராஜன் கவர்னர் இல்லாமல் ஒரு மாநிலம் இயங்காதா என்று ஒரு காலத்தில் கேள்வி கேட்ட தலைவர்கள் இருக்கும் இதே மாநிலத்தில்தான் முதல்வர் இல்லாமலும் நிர்வாகம் நடக்கும் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. முதல்வர் இருக்கிறார். அவர் நாற்காலியில் இல்லை; படுக்கையில் இருக்கிறார். கோட்டையில் இல்லை; மருத்துவ மனையில் இருக்கிறார். ஆனாலும், அரசாங்கம் நடக்கிறது. எங்கும் எதுவும் ஒடிந்து அறுந்து விழுந்துவிட்டதாகத் தெரிவில்லை. இப்படி, முதல்வர் இயங்காமலும் அரசாங்கம் இயங்கும் என்றால் முதல்வர் எதற்கு என்ற கேள்வியை எழுப்பினால்…

  Read more
 • திமுகவின் போராட்டம் காரணமாக நாள் முழுவதும் சட்டப்பேரவை ஒத்திவைப்பு

  தங்களை வயல்காட்டுப் பொம்மைகள் என அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கூறியதை சபைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென திமுகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், தமிழக சட்டப்பேரவை நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இன்று எரிசக்தித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இது தொடர்பான விவாதத்தின் போது, அதிமுகவின் பரமக்குடி தொகுதியின் உறுப்பினர் முத்தைய்யா , திமுக உறுப்பினர்களைப் பார்த்து, 89 வயல்காட்டுப் பொம்மைகள் என்று கூறினார். இதற்கு…

  Read more
 • இனத்தைக் குணமாக்கல்; தலைமைத்துவம்மீதான ஒரு கேள்வி

  டாக்டர் நிஹால் ஜயவிக்கிரம (இலங்கை நீதி அமைச்சின் முன்னாள் நிரந்தர செயலாளர் (1970 – 1977) `இனத்தைக் குணமாக்கல்; தலைமைத்துவம்மீதான ஒரு கேள்வி’ எனும்போது, உடனடியாகவே ஒரு கேள்வி எழுகிறது. ஒரு ஜனநாயக சமூகத்தில் ஓர் அரசியல் தலைவரிடம் எதிர்பார்க்கப்படுவது என்ன? அடுத்த தேர்தலில் மீண்டும் தனது தொகுதி மக்களைச் சந்திக்கவேண்டிய நிலையில், அவர்களின் பார்வை, அவர்களின் பயம், அவர்கள் கொண்டுள்ள தப்பெண்ணங்களையே அத் தலைவர் வெளிப்படுத்தவேண்டுமா; அல்லது, தனது சொந்த நோக்கில், தனது சொந்த பெறுமானங்களில்,…

  Read more
 • சரஸ்வதி பாக்கியராசா: ஈழத்து இசைக் குயில்

  ஈழத்தின் பெரு மதிப்புக்குரிய இசைக் கலைஞராக திகழ்ந்த திருமதி சரஸ்வதி பாக்கியராசா லண்டனில் காலமானார். இசையுலகின் மும்மூர்த்திகளாக எம். எஸ். சுப்புலக்ஷ்மி, டி. கே. பட்டம்மாள், எம். எல். வசந்தகுமாரி ஆகியோர் புகழ்பெறுகையில், யாழ்ப்பாணத்தில் அப்படி அழைக்கவல்ல ஒரு சிறப்பை ஒரு காலத்தில் பெற்றவர்கள் நாகேஸ்வரி பிரம்மானந்தா, சரஸ்வதி பாக்கியராசா, சத்தியபாமா இராஜலிங்கம் ஆகியோர். கொக்குவில்லைச் சேர்ந்தவரான சரஸ்வதி பாக்கியராசா சிங்கப்பூரில் பிறந்து, அங்கேயே தனது இசைப் பயணத்தை ஆரம்பித்தவர். சென்னை, மத்திய கர்நாடக இசைக் கல்லூரியின்…

  Read more
 • துருக்கியில் இராணுவ சதி!

  துருக்கியில் அரசுக்கு எதிரான சதி முயற்சியில், நாட்டைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக இராணுவ பிரிவொன்று தெரிவித்திருக்கிறது. இஸ்ரன்புல்லில் முக்கிய கேந்திர ஸ்தானங்களில் இராணுவம் நிலைகொண்டுள்ளதுடன், தலைநகர் அங்காராவில் ஜெற் விமானங்கள் தாள பறப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முக்கியமான இரண்டு பாலங்கள் போக்குவரத்துக்கு மூடப்பட்டு, இராணுவம் காவல்புரிவதாகவும், விமான நிலையங்களில் அனைத்து விமான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகையில், அரசுக்கு விசுவாசமான முக்கிய இராணுவ அதிகாரிகள் சிலர் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. `சமாதான கவுன்சில்’ ஒன்று தற்போது நாட்டை ஆட்சிபுரிவதாகவும், ஊரடங்கு…

  Read more
 • தெரெசா மே புதிய பிரிட்டிஷ் பிரதமர்!

  புதிய பிரிட்டிஷ் பிரதமராக தெரேசா மே பதவியேற்பது உறுதியாகிவிட்டது. சக்தி அமைச்சர் அன்ட்ரியா லீட்சம் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்ததையடுத்து, தெரேசா மே பிரதமர் பதவிக்கான ஒரே வேட்பாளராகவிருக்கிறார். இப்பொழுது ஏற்பட்டுள்ள இத் திருப்பங்களையடுத்து, புதிய பிரதமர் பதவியேற்பதற்கான தீவிர செயல்பாடுகளில் வெஸ்ற்மின்ஸ்ரர் சுறுசுறுப்பாகியிருக்கிறது. சில தினங்களில் புதிய பிரதமர் பதவியேற்கலாமென்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டாலும், சிலவேளைகளில் அது இன்றுகூட நடைபெறலாமென்றும், தெரேசா மே இன்று பங்கிங்காம் மாளிகையில் மகாராணியை சந்திக்கலாமென்றும் வெஸ்ற்மின்ஸ்ரர் வட்டாரங்களில் ஹேஷ்யம் நிலவுகிறது. பிரதமர் டேவிட்…

  Read more
 • தெற்கு சூடானில் மீண்டும் கடும் மோதல்

  தெற்கு சூடான் தலைநகரான ஜூபாவில் அதிபர் சல்வா கீரின் படைகளுக்கும் துணை அதிபர் ரெய்க் மச்சருக்கு விசுவாசமான படையினருக்கும் இடையே மிகவும் கடுமையான மோதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச படையினர் தமது நிலைகள்மீது தாக்குதல் நடத்தியதாக மச்சர் ஆதரவு படைத்தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த மோதல்கள் காரணமாக இதுவரை 150க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இன்னும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு சூடானில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் தவறிவிட்டதாக ஐக்கிய…

  Read more
 • போத்துக்கல் வசமானது யூரோ கிண்ணம்

  ஐரோப்பிய கிண்ணத்தின் 2016ஆம் ஆண்டுக்கான 15வது சுற்றுப்போட்டியில், போத்துக்கல் முதல் தடவையாக ஐரோப்பிய கிண்ணத்தை வென்றுள்ளது. உலக கிண்ண வெற்றியுடன், தர வரசையில் முதலாவது இடத்திலுள்ள ஜேர்மனி, மற்றும் பலம்வாய்ந்த ஸ்பெயின், பெல்ஜியம், இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய அணிகள் போட்டியிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, தரவரிசையில் 8ஆவது இடத்திலுள்ள போர்த்துக்கல்லும் 17ஆவது இடத்திலுள்ள பிரான்ஸும் வெற்றிக்கிண்ணத்துக்காக இறுதியாக மோதின. தொடக்கத்திலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் போர்த்துக்கல்லின் நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டோ காயம் காரணமாக…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ