• லண்டன் கொலையில் ரஷ்ய அதிபர்?

  முன்னாள் ரஷ்ய உளவாளி அலெக்ஸான்டர் லிற்வினென்கோ கொலைதொடர்பில் லண்டனில் இன்று வழங்கப்பட்ட விசாரணையின் தீர்ப்பு, லண்டன் – மொஸ்கோ இடையே கடும் ஆத்திரத்தை கிளறிவிட்டிருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இக் கொலைக்கான அங்கீகாரத்தை பெரும்பாலும் அளித்திருக்கிறார் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இரு நாடுகளிடையேயும் இந்த விசனநிலை உருவானது. தீர்ப்பு வெளியானதும், `அப்பட்டமான, ஏற்றுக்கொள்ளவியலாத சர்வதேச சட்ட மீறலுடனான, நாகரீகமற்ற செயல்’ என்று, பிரிட்டிஷ் உள்நாட்டு செயலாளர் தெரேசா மே, பாராளுமன்றத்தில் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு உடனடியாகவே கண்டனம்…

  Read more
 • அரசைக் கவிழ்ப்பதற்கு முயற்சி: ஜனாதிபதி அவசர கலந்துரையாடல்

  தேசிய அரசைக் கவிழ்ப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் பல்வேறு சதிகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்ததையடுத்து, சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவசர கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களான கூட்டு எதிர்க்கட்சியினர் தெற்கில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசைக் கவிழ்ப்பதற்கு சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கமையவே வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிவிட்டதாகவும்…

  Read more
 • யாழ்ப்பாணத்தில் இந்துக் கல்லூரி முதலிடம்

  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 30 மாணவர்கள் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இக் கல்லூரியின் உயிரியல் பிரிவு மாணவனான ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ பெறுபேற்றைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். தொழில்நுட்பப் பிரிவிலும் இந்தப் பாடசாலையின் மாணவனே மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இதுவரை பாடசாலைக்குக் கிடைக்கப்பெற்ற பரீட்சை முடிவுகளின் பிரகாரம் கணித பிரிவில் 30 மாணவர்களும், உயிரியல் பிரிவில் 6 மாணவர்களுமாக 30 பேர்வரை 3ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இதேவேளை, தெல்லிப்பளை மகாஐனா கல்லூரி…

  Read more
 • கபொத உயர்தர பரீட்சை: தேசிய மட்டத்தில் யாழ்., மட்டு. மாணவர்களுக்கு 2, 3, 4ஆம் இடங்கள்

  கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டு துறைகளில் யாழ்ப்பாண மாணவர்கள் இருவர் அகில இலங்கை ரீதியில் இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர். தேசிய மட்டத்தில் கணித பிரிவில் நான்காம் இடத்தினையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும் மாணவி கௌரிகாந்தன் நிஷாங்கனி பெற்றுள்ளார் பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பாலசுப்பிரமணியம் ஞானகீதன் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார். உயிரியல் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ சித்தி பெற்று,…

  Read more
 • சவூதியில் ஒரே நாளில் 47 பேருக்கு மரண தண்டனை; ஈரானில் பதற்றம்

  மன்னராட்சி நிலவும் சவூதி அரேபியாவில் மத குரோதம், கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக சனிக்கிழமை மாத்திரம் 47 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவூதியின் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் ஷியா முஸ்லிம் இனத்தவர்களின் தலைவரான ஷேக் நிம்ர் அல்-நிம்ரிட்ஸ் மற்றும் 2003-2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் சவுதியில் தீவிரவாத தாக்குதல்களை நடத்திய அல்-கைடா அமைப்பினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஷியா மதத்தலைவர் நிம்ர் அல்-நிம்ரிட்ஸ் கொல்லப்பட்டதையடுத்து,…

  Read more
 • சீன இராணுவத்தில் 3 புதிய பிரிவுகள்

  சீன இராணுவத்தின் படைபலத்தை அதிகரித்துக்கொள்வதற்காக 3 புதிய பிரிவுகளை உருவாக்கி, குறித்த புதிய பிரிவுகளின் தலைவர்களிடம் இராணுவ கொடிகளை அதிபர் ஜின் பிங் வழங்கினார். இராணுவத்தை நவீன மயமாக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக 3 புதிய பிரிவுகளை தொடங்கியுள்தாகவும், இதன்மூலம் உலகின் வலுவான படை பலம் என்ற கனவை சீன இராணுவம் நனவாக்கும் என்று சீன அதிபர் கூறினார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 3 பிரிவுகளில் பொது இராணுவ பிரிவு, ஏவுகணைப்பிரிவு, கொள்கை ஆதரவு படை ஆகியவை அடங்குகின்றன.

  Read more
 • இந்திய விமான நிலையங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு

  ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு இலக்கான பதன்கோட் விமானப்படை தளத்தில் மீண்டும் குண்டு வெடிப்பு இடம்பெற்றதையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதன்கோட் விமானப்படை தளத்தில் இன்று ஞாயிறு காலை மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் பலியாகினார். காயமடைந்த நிலையில் மேலும் மூன்று படையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தாகவும், விமானப்படை தள தாக்குதலில் பலியான இந்திய வீரர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி – ஷெரிவ் நல்லுறவை குலைக்க மேற்கொள்ளப்படும் சதி முயற்;சியாக…

  Read more
 • இந்திய விமானப் படைத் தளத்தில் ஆயுததாரிகள் தாக்குதல்

  இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் விமானப் படைத் தளத்தின்மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விமானப் படைத்தளத்தின் பின்புற வழியாக நான்கு ஆயுததாரிகள் ஊடுருவ முயற்சித்தபோது இந்திய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மோதலில் இரண்டு இந்திய படையினர் கொல்லப்பட்டதாக முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய இராணுவத்தின் சீருடை அணிந்தவாறு ஆயுததாரிகள் பாகிஸ்தான் எல்லையில் உள்ள படைத்தளத்தின்மீது தாக்கதல் தொடுத்ததாகவும், ஆயுததாரிகளுக்கும் இந்திய படையினருக்குமிடையே சுமார் ஐந்து மணி நேரம் மோதல்…

  Read more
 • இந்திய சிறைகளில் 189 பாகிஸ்தான் கைதிகளை காணவில்லை

  இந்திய சிறைகளில் இருந்த 189 பாகிஸ்தான் கைதிகள் காணமல்போயிருப்பதாக வெளியான தகவல் இரு நாடுகளுக்குமிடையே புதிய நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லெண்ண அடிப்படையில் நேற்று சிறைக்கைதிகள் மற்றும் மீனவர்கள் பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நடைமுறையில் உள்ள ஒப்பந்த அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களின் முதல் தேதிகளில் இருநாடுகளின் சிறைகளிலும் உள்ளவர்களை பரிமாற்றம் செய்துகொள்ளுவது வழமை. இந்த ஆண்டு இருதரப்பிலும் சிறையில் உள்ள கைதிகளின் பட்டியல் பரிமாற்றபட்டபோது, இந்திய…

  Read more
 • உலகின் பிரமாண்ட சுரங்க தொடரூந்து நிலையம்

  ஒரு லட்சத்து 47 ஆயிரம் சதுரமீற்றர் பரப்பளவுகொண்ட உலகின் மிகப்பெரிய சுரங்க தொடரூந்து நிலையம் சீனாவில் ஷென்ழென் நகரில் திறந்து வைக்கப்பட்டது. ஹொங்கொங் நகரின் எல்லையோரமுள்ள குவாங்டாங் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த தொடரூந்து நிலையம் மூன்றடுக்களைக்கொண்டதுடன், ஒரே நேரத்தில் சுமார் 3 ஆயிரம் பயணிகள் இதனை பயன்படுத்த முடியும். அத்துடன், இந்த தொடரூந்து நிலையத்திலிருந்து அதிவேக தொடரூந்து சேவைகளும் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் மணிக்கு சுமார் 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக தொடரூந்துகளும் இயக்கப்படுகின்றன.

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ