• பாகிஸ்தானில் சட்டபூர்வமாகும் இந்து திருமணம்

  பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் இந்து திருமணங்கள் சட்டபூர்வமான அங்கீகாரத்தைப் பெறுகின்றன. இதற்கான சட்டம், மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் வாழும் சுமார் 3 லட்சம் இந்துக்களில் பெரும்பாலானோர் சிந்து மாநிலத்தில் வாழ்கிறார்கள். 1947இல் பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகியதிலிருந்து, இங்கு வாழும் இந்துக்களின் திருமணங்களுக்கு சட்டரீதியான உத்தரவாதம் எதுவும் இருக்கவில்லை. இதனால், குறிப்பாக இந்து பெண்கள், கடத்தல், கட்டாய மத மாற்றம், இளவயதுத் திருமணம் முதலான பல துயரங்களை எதிர்கொண்டார்கள். இதுதவிர, வங்கி கணக்கு, வீசா, மூலதனங்களிலும் இந்துக்கள்…

  Read more
 • மருத்துவமனைகள்மீது தாக்குதல்: சிரியாமீது யுத்த குற்றம்?

  சிரியாவில், மருத்துவமனைகள், பாடசாலைகள்மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 50 பேருக்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அஸாஸ் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதல்களில் இரண்டு மருத்துவமனைகளும் இரண்டு பாடசாலைகளும் தாக்குதலுள்ளாகியிருப்பதாக ஐ. நா. தெரிவித்துள்ளபோது, பிரான்சும் துருக்கியும் இத் தாக்குதல்கள் அப்பட்டமான யுத்த குற்றம் என்று குற்றஞ்சாட்டியிருக்கின்றன. ரஷ்ய விமானங்களே இத் தாக்குதல்களை மேற்கொண்டதாக துருக்கி தெரிவித்துள்ளபோது, ரஷ்யா இதுதொடர்பில் கருத்து எதனையும் வெளியிடவில்லை. இவ்வார இறுதியில், சிரியாவில் ஓரளவு யுத்த நிறுத்தமொன்றை அமலுக்கு கொணர உலக தலைவர்களின் முயற்சியில்…

  Read more
 • அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தவறு – அல் ஹூசைன்

  அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தவறு; அரசியல் கைதிகளை வழக்கு விசாரணையின் பின்னரே விடுதலை செய்ய வேண்டும் என, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசைன் தெரிவித்திருக்கிறார். யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர், வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார். அக் கலந்துரையாடலின் பின்னர் கலந்துரையாடல் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் பின்வருமாறு தெரிவித்தார்: கடந்த வருடம் ஜெனீவாவில்…

  Read more
 • இடம்பெயர்ந்தவர்களை ஆணையாளர் சந்தித்தார்

  `25 வருடங்களாக இந்த நிரந்தரமற்ற வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமக்கு துறைமுகம் வேண்டாம்; விமான நிலையம் வேண்டாம்; எங்களுடைய சொந்த நிலங்களை மீட்டுக் கொடுங்கள். நாங்கள் நிம்மதியாக வாழ விரும்புகிறோம்.’ மேற்கண்டவாறு, சுன்னாகம், மருதனாமடம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தில் வாழும் வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்கள், ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹுசைனிடம் தெரிவித்திருக்கின்றனர். இன்று யாழ். வந்த மனித உரிமைகள் ஆணையாளர் மேற்படி நலன்புரி நிலையத்திற்கு நண்பகல் விஜயம்…

  Read more
 • இந்திய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு

  தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்குமிடையில் கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின் பின்னர் செய்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்,குறித்த சந்திப்பு திருப்திகரமானதாக…

  Read more
 • யாழ். செல்லாமலேயே டெல்லி திரும்பினார் சுஷ்மா

  இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று பிற்பகல் புதுடெல்லி திரும்பினார். இலங்கை – இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதாகற்காக இலங்கைக்கு விஜயம் செய்த அவர், கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டதோடு, முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு ஒப்பந்தங்களையும் ஏற்படுத்திக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்…

  Read more
 • இலங்கையில் மனித உரிமை ஆணையாளர்

  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹூசைன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தார். டுபாயிலிருந்து வந்த விமானத்தில் வந்த சயிட் அல் ஹூசைனுடன், கூடவே ஆறு பிரதிநிதிகளும் வந்துள்ளனர். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சயிட் அல் ஹூசைன், அரச தரப்பு மற்றும் சிவில் சமூகப்¬பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்திக்கவுள்ளதுடன், வடமாகாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்…

  Read more
 • யாழ். பல்கலைக்கழகத்தின் உலக சைவ மாநாடு

  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்துநாகரீகத்துறை நடாத்தும் முதலாவது அனைத்துலக சைவ மாநாடு எதிர்வரும் 12 ஆம் தேதி, பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகிறது. மூன்று தினங்கள் நடைபெறும் இம் மாநாட்டைத் தொடர்ந்து, 15ஆம் திகதி ஆன்மீக சுற்றுலா ஒன்றும் இடம்பெறுகிறது. முதலாம் நாள் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரத்தினம் பிரதம விருந்தினராக பங்குபற்றுவார். `சிவாகமங்களும் திருமுறைகளும் பலப்படுத்தும் சைவப் பண்பாட்டுக் கூறுகளும் சமூக நல்லிணக்க சிந்தனைகளும்’ என்பதே இம் மாநாட்டின் கருப்பொருளாகும். பல்வேறு உரைகளும் ஆய்வு அமர்வுகளும்…

  Read more
 • தமிழில் தேசிய கீதம்; வரலாற்றில் திருப்பமா?

  இலங்கையில், இனங்களிடையேயான தேசிய நல்லிணக்கத்துக்கு பெரும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் சந்தேகமும் ஒருசேர முனைப்படைந்துள்ள வேளையில், சுதந்திரதின வைபவத்தில் இலங்கையில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர இலங்கையின் வரலாற்றில் இரண்டாவது தடவையென கருதப்படும் இந் நிகழ்வில், சுதந்திர இலங்கையின் வரலாற்றில் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள இரண்டாவது தமிழரான திரு இரா. சம்பந்தனும் வரலாற்றை மீறி, இவ்வைபவத்தில் கலந்துகொண்டிருக்கிறார். இலங்கையின் 68ஆவது சுதந்திர தினம் கொழும்பு, காலிமுகத் திடலில் இம்முறை கொண்டாடப்பட்டபோது, வழமைபோல சிங்கள மொழியிலான தேசிய கீதத்துடன்…

  Read more
 • வடக்கு ஆளுநர் பதவி ஓய்வு

  வடக்கு மாகாண ஆளுநர் எச். எம். ஜி. எஸ். பளிகக்கார இந்த மாதத்துடன் ஓய்வுபெறப்போவதாக ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் ஆளுநர் ஏ. சந்திரசிறி பதவி விலகினார். இதையடுத்து, கடந்த வருடம் ஜனவரி 29 ஆம் திகதி பளிகக்கார ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையிலேயே, அவர் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதாக கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். இதேவேளை, வடக்கின் புதிய ஆளுநராக றெஜினால்ட் கூரே நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது….

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ