• பிரெஞ்சு ரென்னிஸ் போட்டியிலிருந்து றபேல் நடேல் விலகல்

  பிரான்ஸில் நடைபெற்றுவரும் றோலண்ட் கறோஸ் ரென்னிஸ் சுற்றுப்போட்டியிலிருந்து உடல் நிலை காரணமாக விலகுவதாக றபேல் நடேல் அறிவித்துள்ளார். மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்துடனேயே போட்டியின் இரண்டு சுற்றுகளிலும் கலந்து கொண்டிருந்ததாகவும், வெள்ளியன்று பிரிட்டனின் அன்டி முறேயுடனான போட்டியின்போது உபாதை மோசமானதாகவும் நடேல் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்தும் விளையாட முற்பட்டால் நிலைமை மிகவும் மோசமாகும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தும் காரணத்தால் போட்டியிலிருந்து விலகுவதாக, ஒன்பது தடவைகள் வெற்றிக்கிண்ணத்தை வென்ற நடேல் குறிப்பிட்டார். பிரெஞ்சு போட்டிகளைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் விம்பிள்டன் போட்டிகளிலும் நடேல்…

  Read more
 • சச்சினின் சாதனை ஒன்றை முறியடித்த அலஸ்ரர் குக்

  இளம் வயதில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சச்சின் ரென்டுல்காரின் சாதனையை இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தலைவர் அலஸ்ரர் குக் முறியடித்துள்ளார். ரெஸ்ற் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் சச்சின், டிராவிட், இலங்கை வீரர்கள் சங்ககார, மேகல ஜெயவர்த்தன மற்றும் மேற்கிந்திய வீரர்கள் லாரா, சந்தர்பால் போன்றோர் 10 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்தவர்கள் என்ற சாதனையை எட்டியபோதிலும், பிரித்தானிய ஆட்டக்காரர்களில் முதல் தடவையாக 10 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்தவர் என்ற பெருமையும் அலஸ்ரர் குக்குக்கு…

  Read more
 • ஆங்கிலக் கால்வாயிலும் குடியேறிகளின் படகு விபத்துக்கள் தொடரும் அபாயம்

  ஐரோப்பிய நாடுகளுக்குள் குடியேறும் நோக்கத்துடன் பாதுகாப்பற்ற படகுகளில் கடற்பயணம் மேற்கொண்டு மத்தியதரைக் கடலில் விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படுவதுபோன்ற சம்பவங்கள், எதிர்காலத்தில் ஆங்கிலக் கால்வாயிலும் ஏற்படக்கூடும் என்று பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆங்கிலக் கால்வாயில் காவலையும் கண்காணிப்பையும் அதிகரிக்க தவறினால் இதுபோன்ற ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொள்பவர்களைக் கட்டுப்படுத்துவது கடினமாக அமையும் என்றும் பிரிட்டனின் முன்னாள் எல்லை மற்றும் குடிவரவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இத்தாலிக்கு கடற்பயணங்களை மேற்கொள்பவர்கள் விபத்துகளை சந்திக்கும் சம்பவங்கள் ஆங்கிலக் கால்வாயில் இடம்பெறவிருப்பதையே…

  Read more
 • ஒரே மேடையில் பிரதமர் டேவிட் கமரோனும் மேயர் சாதிக் கானும்

  பழமைவாதக்கட்சியின் பிரதமர் டேவிட் கமரோனும் தொழிற் கட்சியின் லண்டன் மேயர் சாதிக் கானும் ஒரே மேடையில் தோன்றி, ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடரவேண்டும் என்று பரப்புரை மேற்கொண்டார்கள். லண்டன் நகரத்தின் நலனையும் நாட்டின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, தாம் இருவரும் ஒன்றாக மக்கள் முன்னிலையில் தோன்றி பரப்புரையில் ஈடுபடுவதாகவும் இருவரும் தெரிவித்தனர். அண்மையில் நடைபெற்ற லண்டன் மேயர் தேர்தலின்போது சாதிக் கானை `பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணுபவர்’ என்று டேவிட் கமரோன் கடுமையாக விமர்சித்தது குறித்து சாதிக்…

  Read more
 • இந்திய இராணுவ வெடிபொருள் சேமிப்பகத்தில் தீ: 17 படையினர் பலி!

  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இராணுவத்தின் மத்திய வெடிபொருள் சேமிப்பகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் அதிகாரிகள் இருவர் உள்பட 17 படையினர் உயிரிழந்ததுடன், 19 பேர் பலத்த காயமடைந்தனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட இத் தீவிபத்தில் படுகாயமடைந்த படையினரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேமிப்பகத்தின் ஒரு பகுதியில் இருந்த வெடிபொருள்கள் வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஏனைய பகுதிகளுக்கு தீ பரவாமல் அணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்த விபத்தால் ஏற்பட்ட முழுமையான சேத…

  Read more
 • இந்திய பிரதமருக்கு தமிழ் மொழியில் இணையத்தளம்

  இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான இணையத்தளம் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, வங்கம், மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளிலும் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே பயன்பாட்டிலிருக்கும் www.pmindia.gov.in என்ற பிரதமர் பணிமனையின் இணையத்தளம், மாநில மொழிகளில் செயல்படுவதன்மூலம் அரசின் திட்டங்களை ஆங்கில மொழி தெரியாதவர்களும் அறிந்துகொள்ளவும், கருத்துக்களை தெரிவிக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு நலன் மற்றும் வளர்ச்சி தொடர்பாக மக்களின் கருத்துக்களை உடனடியாக அறிந்துகொள்வதற்கு ஏதுவாகவே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நரேந்திர மோடி உத்தரவிட்டதாக…

  Read more
 • ஆங்கிலக் கால்வாயிலும் சட்டவிரோத குடியேறிகள் மீட்பு!

  பிரிட்டனின் ஆங்கிலக்கால்வாயில் கென்ற் பகுதிக்கு அருகே தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து 20 குடியேறிகளை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரித்தானிய குடிமக்களும் 18 அல்பேனியர்களும் இந்தப்படகில் காணப்பட்டதாகவும், இவர்கள் அனைவரும் தற்போது டோவரில் உள்ள எல்லைப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த செவ்வாயன்று, கட்டுமரமொன்றில் பயணித்த அல்பேனிய நாட்டவர் 17 பேரை கடலோர காவல் படையினர் மீட்டிருந்தனர். இந்த தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து பிரிட்டனின் கடலோர பாதுகாப்பை தீவிரப்படுத்தியிருப்பதுடன், பிரெஞ்சு கடற்படையினரும் தீவிர கண்காணிப்பில்…

  Read more
 • பிரதமர் டேவிட் கமரோனுக்கு அரசியல் நெருக்கடி

  பிரிட்டனில் குடியேறிகள் வரவை கட்டுப்படுத்த தவறியதையடுத்து பிரதமர் டேவிட்ட கமரோன் பதவி விலகவேண்டுமென்ற கோரிக்கை அவரது பழமைவாதக் கட்சியில் தீவிரமடைந்துவருகிறது. பழமைவாதக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு குடியேறிகள் வரவை கட்டுப்படுத்தமுடியாது தாம் தோல்வியடைந்ததை கமரோன் ஒப்புக்கொள்ளவேண்டும் என்று, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொறிஸ் ஜோன்ஸன் மற்றும் மைக்கல் கொவ் ஆகிய இருவரும் வலியுறுத்தியுள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதன்மூலம் நாட்டுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்ற மிகைப்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்களை பிரதமரும் நிதியமைச்சரும் விடுத்துவருவதாகவும் ஆளும் கட்சியின்…

  Read more
 • மின்னல் தாக்குதல் – ஒருவர் பலி!

  பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மின்னல் தாக்குதல்களில் ஒருவர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர். பரிஸில் மன்சூ பூங்காவில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் அங்கிருந்த மரமொன்றின் கீழ் மழைக்கு பாதுகாப்பாக ஒதுங்கியிருந்த வேளையில், பதினொரு சிறுவர்கள் மின்னல் தாக்கியதில் காயமடைந்தார்கள். ஜெர்மனியில் ஹோப்ஸ்ட்டுடன் என்னுமிடத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கான உதைபந்தாட்ட போட்டியில் கலந்துகொண்டிருந்த சிறுவர்கள் மின்னல் தாக்கியதில் காயமடைந்துள்ளனர். இது போன்றே, தெற்கு போலந்தில் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். ஐரோப்பாவில் பல்வேறு இடங்களில்…

  Read more
 • தமிழகம் திருந்தாது: பொதுவாழ்விலிருந்து தமிழருவி மணியன் விலகல்!

  தமிழக அரசியலில் பல மாற்றங்களை உருவாக்கி, மக்கள் மத்தியில் மறுமலர்ச்சி ஏற்பட உழைத்தவரான காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன், பொது வாழ்விலிருந்து முற்றாக விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். தனது இலட்சிய வாழ்வு தோல்வியில் முடிந்ததால் பொது வாழ்விலிருந்து விலகுவதாக, உருக்கமான அறிக்கை ஒன்றை மணியன் வெளியிட்டுள்ளார். அறிக்கையின் முழு வடிவம்: குத்துப்பாட்டில் குதூகலிக்கும் பாமரர்கள் பார்வையாளர்களாகக் கூடியிருக்கும் அரங்கில் அமர்ந்து, ஆன்மாவே உருகும்படி ஆலாபனை செய்தாலும், அந்த சங்கீத உபாசகனுக்கு யார் வந்து மரியாதை…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ