• குடியேறிகளை ஏற்க மறுக்கும் ஒரேயொரு ஐரோப்பிய கிராமம்

  சுவிற்சலாந்தின் செல்வந்தர்கள் அதிகம் வாழும் ஒபர்வில் லியலி கிராமம் குடியேறிகளை ஏற்பதற்கு மறுத்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கையை மதித்து, 50 ஆயிரம் சிரிய அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ள சுவிஸ் அரசு, சூரிச் நகரத்துக்கு 10 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள அழகிய ஒபர்வில் லியலி கிராமத்துக்கு 10 அகதிகளை அனுப்பிவைக்க முடிவுசெய்தது. எனினும், 300 கோடீஸ்வரர்கள் உள்பட 2 ஆயிரத்து 200 மக்கள் தொகையை மட்டும் கொண்ட இந்த கிராமத்தினர் மக்கள் கருத்தெடுப்பை நடத்தி, குடியேறிகளை அநுமதிக்க மறுப்பு தெரிவிக்கும்…

  Read more
 • பேர்ணி சண்டேர்ஸுடன் விவாதத்துக்கு ட்ரம்ப் மறுப்பு

  அமெரிக்க அதிபர் தேர்தலில் போhட்டியிடுவதற்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளர் நியமனத்துக்கான போட்டியிலிருக்கும் பேர்ணி சண்டேர்ஸுடன் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொள்வதற்கு குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். ஜனநாயகக்கட்சியின் வேட்பாளர் இன்னமும் நிச்சயமாகாத நிலையில் சண்டேர்ஸுடன் விவாதிப்பது எந்த வகையிலும் பொருத்தமற்றது என்றும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். ஜனநாயகக்கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்படுபவருடன் விவாதத்தில் ஈடுபடுவதற்கு தாம் காத்திருப்பதாகவும், பெரும்பாலும் நேர்மையற்றவரான ஹில்லறி கிளின்ரனுடன் விவாதிக்க நேரிடலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் தற்போதைய…

  Read more
 • ஈழத்தமிழரின் உரிமைகளை வெல்ல பாடுபடுவோம் – ஜெயலலிதா விக்னேஸ்வரனுக்கு உறுதி

  ஈழத்தமிழர்களின் நலன் குறித்து நேரடியாக பேச்சு நடாத்தி, உகந்த தீர்வுகாண நடவடிக்கை எடுக்க தயாராகவுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதல்வராக மீண்டும் தெரிவானமைக்கு வாழ்த்து தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்திலேயே ஜெயலலிதா இதனைத் தெரிவித்தார். ஈழத் தமிழ் மக்களின் நலன் குறித்து பேச்சுநடத்த விரைவில் சந்திப்போம் என்றும் முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஈழத்தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க முதல்வர் ஜெயலலிதா உதவுவார் என்று…

  Read more
 • யூரோ-2016 போட்டிகளின்போது ஐ. எஸ். தாக்குதல்? – ஜேர்மன் சந்தேகம்

  எதிர்வரும் ஜூன் மாதம் பிரான்ஸில் தொடங்கவிருக்கும் யூரோ 2016 உதைபந்தாட்ட போட்டிகளின்போது ஐ. எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஜேர்மன் உளவுத்துறையின் தலைவர் யூகம் வெளியிட்டுள்ளார். பிரான்ஸில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் ஐ. எஸ். அமைப்பு கண் வைத்திருக்கின்றபோதிலும், அதனது தாக்குதல் திட்டங்கள் குறித்து எதனையும் உறுதியாக கூறமுடியாதிருப்பதாகவும் ஜேர்மன் உளவுத்துறையின் தலைவரான ஹான்ஸ் ஜோர்ஜ் மஸென் தெரிவித்துள்ளார். பெரும் எண்ணிக்கையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்தும் திட்டங்களை ஐ. எஸ். கொண்டிருக்கிறது என்று…

  Read more
 • நேரடி விவாதத்துக்கு ஒரு கோடி டொலர் கோருகிறார் ட்ரம்ப்

  அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் நியமனத்துக்கு போட்டியிடும் பெர்னி சாண்டர்ஸஜ்டன் தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் கலந்து கொள்ளுவதற்கு ஒரு கோடி டொலர் வழங்கப்பட வேண்டும் என்று குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கோரியிருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தகுதி பெற்றிருக்கும் நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் நியமனத்துக்காக ஹில்லறி கிளின்ரனுடன் போட்டியிடும் பேர்னி சண்டர்ஸ், டொனால்ட் ட்ரம்புடன் விவாதம் செய்யத் தயாராகவிருப்பதாக தெரிவித்தார். அமெரிக்க பெரும் செல்வந்தரான டொனால்ட்…

  Read more
 • ஐ. எஸ். தாக்குதல்களுக்கு மத்தியில் ஒரு லட்சம் சிரிய மக்கள்

  துருக்கி எல்லையில் ஐ. எஸ். அமைப்பின் தாக்குதல்களுக்கு மத்தியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சிரிய மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிரிய மக்கள் செறிந்துள்ள அலெப்போ நகரத்தைநோக்கி ஐ. எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியவாறு முன்னேறுவதாகவும், துருக்கியும் தனது எல்லையை மூடியிருப்பதால் பொதுமக்கள் தம்மை பாதுகாப்பதையிட்டு வழியறியாதிருப்பதாகவும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ. எஸ். அமைப்பினரின் தாக்குதல்கள் காரணமாக 48 லட்சம் சிரிய மக்கள் அயல் நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் தற்போதைய நகர்வு…

  Read more
 • `இறந்தவர்களின் ஆன்மாக்கள் நம்முடன் பேசுகின்றன’ – ஹிரோஷிமாவில்அதிபர் ஒபாமா

  `ஹிரோஷிமா நகரின்மீது நடத்தப்பட்ட அணுகுண்டு வீச்சில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் நம்முடன் பேசுகின்றன’ என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். முகமும் மனமும் மிகவும் இறுகிய நிலையில் காணப்பட்ட ஒபாமா, ஓரிரு நிமிடம் கண்களைமூடி மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கு உரை நிகழ்த்தினார். 71 ஆண்டுகளுக்கு முன்னர் வானத்திலிருந்து மரணம் விழுந்ததாகவும், அதனால் இந்த உலகமே முற்றாக மாறிப்போனதாகவும் குறிப்பிட்டார். `தீப்பிழம்பு எழும்பியது; நகரின் சுவர்கள் நாசமாகின. அத்துடன், மனித நேயம் அழிந்தது என்று கூறி,…

  Read more
 • ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதால் உலக பொருளாதாரத்துக்கு பின்னடைவு

  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக நேரிட்டால், உலக பொருளாதார வளர்ச்சியில் பாரிய பின்னடைவு ஏற்படும் என்று உலகின் 7 பெரும் நாடுகளின் தலைவர்களின் மாநாட்டின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்திலிருந்து பிரிட்டடன் விலகும்பட்சத்தில் உலக பெரும் முதலீடு, வேலைவாய்ப்பு போன்ற அனைத்து பொருளாதார தளங்களிலும் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்படும் என்று, உச்சி நாடுகளின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதா, இல்லையா என்ற கருத்துக்கணிப்பு…

  Read more
 • ஹிரோஷிமாவில் பராக் ஒபாமா அஞ்சலி

  ஜப்பானில் நடைபெற்ற உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் அங்கிருந்து ஹிரோஷிமா சென்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஹிரோஷிமா நினைவிடத்துக்கு சென்ற, பதவியிலுள்ள முதலாவது அமெரிக்க அதிபராகும் பராக் ஒபாமா, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட நிகழ்வு நவீன வரலாற்றின் திருப்பு மையம் என்றும், நாம் ஏதோ ஒரு வகையில் இதனை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது என்றும் தெரிவித்தார். வரலாற்றை கூர்மையாக உற்று நோக்கி, இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில்…

  Read more
 • போக்குவரத்து நெருக்கடிளை சமாளிக்க சீனாவின் புதிய திட்டம்

  சீனாவில் அதிகரித்து செல்லும் சுற்றாடல் மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், நவீனரக டிராம் வடிவ பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. வீதிகளில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அமைக்கப்படவிருக்கும் தடங்களில் இந்த பேருந்து பயணிக்கும். வீதிகளில் செல்லும் வாகனங்களுக்கு மேலாக, அதனை கடந்து செல்லும் வகையில் இந்த பேரூந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. 60 மீற்றர் நீளம், 7.80 மீற்றர் அகலம் மற்றும் 4.50 மீற்றர் உயரம்கொண்ட இந்த பேருந்துகள், மின்கலங்களால் இயக்கப்படும் என்றும், ஒரே தடவையில் ஆயிர்த்து 200…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ