• சோமாலியாவில் குண்டுத்தாக்குதல்: 5 பேர் பலி

  சோமாலியாவின் தலைநகர் மொகடிசு நகரில் தங்குவிடுதியை இலக்குவைத்து நடாத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொகடிசு நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள நஸா-ஹப்லோத் தங்குவிடுதியின் நுழைவாயிலில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை வெடிக்கவைத்தும், ஆயுததாரிகள் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தியும் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சோமாலிய பாதுகாப்பு படையினர் ஆயுததாரிகளுடன் மோதலில் ஈடுபட்டதில், ஆயுததாரிகள் இருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோமாலியாவில் இயங்கும் அல்-கைடா ஆதரவு அமைப்பான அல்-ஷபாப் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.

  Read more
 • பிரிட்டனின் வாக்கெடுப்பு முடிவு: தொழிற் கட்சியிலும் நெருக்கடி!

  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பிரிட்டிஷ் மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் முடிவால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, தொழிற் கட்சியிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொழிற் கட்சியின் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் கட்சியை ஆதரித்து, ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருப்பதற்கு ஆதரவாக வாக்களிக்கும்விதத்தில் அவர்களைத் தூண்டுவதில் ஜெரெமி கோபினின் பிரச்சாரம் தவறிவிட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஜெரெமி கோபினின் மந்தமான நடவடிக்கையே, பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டும் அணியினர், அவர்மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கு முன்மொழிந்துள்ளார்கள்….

  Read more
 • ஐக்கிய இராச்சியம் விலகுவதற்கு ஐ. எஸ். அமைப்பு மகிழ்ச்சி

  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவதற்கு ஐ. எஸ். என்னும் இஸ்லாமிய அமைப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதால் அதில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பலம் 27 ஆக குறைந்துள்ளதாகவும் இது, ஐ. எஸ். அமைப்புக்கு மிகவும் சாதகமானது என்றும் ஐ. எஸ். அமைப்பின் ஜிகாதி ரெலிகிராம் என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும், இந்த தருணத்தை பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளில் ஐ. எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தவேண்டும்…

  Read more
 • பிரிட்டன் வெளியேறுவது குறித்து மீள்வாக்கெடுப்பு நடத்த புதிய கோரிக்கை

  ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா, விலகுவதா என்பது குறித்து மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்துமாறுகோரும் மனுவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பதா இல்லை விலகுவதா என்பது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 75 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவாகியிருந்ததால், 60 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளைப்பெற்ற கருத்துதான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படவேண்டும் என்றும் ஆனால், ஆக 51.9 சதவீதமான வாக்குகளை மட்டுமே பெற்ற, விலகவேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லுபடியாகாது என்றும் வில்லியம் ஆலிவர்…

  Read more
 • பிரிட்டன் உடனடியாக வெளியேற வேண்டும்: ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தல்

  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முடிவுசெய்துள்ள பிரிட்டன் உடனடியாக விலகுவதையே விரும்புவதாக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஜீன்-கிளோட் ஜங்கர் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று பொதுவாக்கெடுப்பில் மக்கள் தீர்ப்பளித்த பின்னரும் அதை நடைமுறைப்படுத்துவதை ஒக்ரோபர் மாதம்வரை பிரிட்டன் தள்ளிவைத்துள்ளமை புதிராக உள்ளது என்றும் ஜேர்மன் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் ஜங்கர் தெரிவித்தார். ஒன்றியத்திலிருந்து வெளியேறுவற்கு ஆதரவாக பிரிட்டன் மக்கள் வாக்களித்த நாள் ஐரோப்பிய ஒன்றியனுக்கும், பிரிட்டனுக்கும் மிக மோசமான நாள் என்றும் கூறிய அவர், ஒன்றியத்திலிருந்து காலதாமதமின்றி…

  Read more
 • பிரிட்டன் விலகினாலும் ஐரோப்பிய ஒன்றியம் பலத்துடன் செயற்படும் – ஒன்றிய தலைவர்கள்

  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று மேற்கொண்ட முடிவை மதிப்பதாக தெரிவித்த ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் மார்ட்டின் சுல்ற்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்தையும் யூரோ நாணயத்தையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் முடிவு, பிரிட்டனுக்கும் ஐரோப்பாவுக்கும் ஒரு சோகமான நாள் என்று, ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த முடிவு எதிர் பார்த்ததுதான் என்றும், அதற்கு தயாராகவேதான் இருந்ததாகவும் கூறிய அவர், உலகின் மிகப்பெரிய சந்தையை இங்கிலாந்து முறித்துக்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார். இங்கிலாந்துக்காக வருத்தப்படுவதாகவும், ஐரோப்பிய ஒன்றியம்…

  Read more
 • யூரோ 2016 கிண்ணம்: போர்த்துக்கல், வேல்ஸ், போலந்து கால் இறுதிக்கு முன்னேற்றம்

  யூரோ 2016 கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் 16 அணிகளுக்கிடையேயான 2ஆவது சுற்றில் போர்த்துக்கல், வேல்ஸ், போலந்து ஆகிய நாடுகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. முதலில் நடைபெற்ற ஆட்டம் வேல்ஸுக்கும் வட அயர்லாந்துக்கும் இடையே இடம்பெற்றது. வேல்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று, கால் இறுதிக்கு தகுதி பெற்றது. வழமையான ஆட்டத்தின் போதான வெற்றிக் கோலாக அல்லாது, வடக்கு அயர்லாந்தின் ஆட்டக்காரர் மெக்குலே தனது அணிக்கு எதிராக தானே கோல் அடித்து வேல்ஸ் அணிக்கு…

  Read more
 • ஒன்றியத்தில் நீடிப்பதே ஸ்கொட்லாந்தின் தீர்க்கமான முடிவு: நிக்கொலா ஸ்ரர்ஜியோன்

  ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் நீடிப்பதே தமது தீர்க்கமான முடிவு என்பதை ஸ்கொட்லாந்து மக்கள் மிகத்தெளிவாக தெரிவித்திருப்பதாக ஸ்கொட்லாந்து முதல்வரும் ஸ்கொற்லாந்து தேசிய கட்சியின் தலைவருமான நிக்கோலா ஸ்ரர்ஜியோன் தெரிவித்துள்ளார். எனினும், இங்கிலாந்து மக்கள் ஸ்கொட்லாந்து மக்களின் உணர்வுகளுக்கு மாறாக நடந்து கொண்டிருப்பதாகவும், முடிவுகள் வெளியான பின்னர் கருத்து வெளியிட்ட அவர் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கான அனைத்து நகர்வுகளையும் ஸ்கொட்லாந்து மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாகவும் நிக்கொலா தெரிவித்தார். ஒன்றியத்திலிருந்து விலகும் முடிவை ஐக்கிய இராச்சியம் மேற்கொண்டால், ஐக்கிய…

  Read more
 • ஸ்ரேர்ளிங் பவுண் 30 ஆண்டுகளில் இல்லாத பெறுமதி வீழ்ச்சி!

  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் முடிவை பிரிட்டன் மேற்கொண்டதையடுத்து, சர்வதேச நாணய சந்தையில் ஸ்ரேர்ளிங் பவுண் வரலாறு காணாத வீழ்ச்சி கண்டது. வாக்கெடுப்பு நாளன்று அமெரிக்க டொலருக்கு எதிரான பெறுமதியிலிருந்து உடனடியாக சரிய ஆரம்பித்த பவுண், முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த 6 மணி நேரத்தில் மட்டும் 10 சதங்கள் வீழ்ச்சி கண்டது. கடந்த 30 ஆண்டுகளில் பவுண் கண்டிராத பெறுமதி வீழ்ச்சி இது என்றும், ஒரு கட்டத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் பவுண் 3 சதங்கள் வீழ்ச்சி கண்டதாக பொருளாதார நிபுணர்…

  Read more
 • பிரிந்து செல்லும் பிரிட்டன் : 52 வீதமான மக்கள் ஆதரவு

  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த முடிவை பிரிட்டிஷ் வாக்காளர்கள் அறிவித்துள்ளார்கள். பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறவேண்டும் என்பதற்கு ஆதரவாக 52 வீதமான மக்களும், ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிக்கவேண்டும் எனபதற்கு ஆதரவாக 48 வீதமானவர்களும் வாக்களித்துள்ளார்கள். இதன்மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதற்கு ஆதரவாக 1975ஆம் ஆண்டு வழங்கிய ஆதரவை பிரிட்டிஷ் மக்கள் நிராகரித்துள்ளார்கள். ஐக்கிய இராச்சியத்தில் அங்கம் வகிக்கும் இங்கிலாந்தும், வேல்ஸும் ஒன்றியத்திலிருந்து விலகவேண்டும் என்று வாக்களித்த அதேவேளை, வட அயர்லாந்தும், ஸ்கொட்லாந்தும்…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ