• பிரெஞ்சு ஓபன் ரென்னிஸ் இறுதிப்போட்டியில் முதல் தடவையாக பிரித்தானியர்

  பரிஸில் நடைபெற்றுவரும் பிரெஞ்சு ஓபன் றோலண்ட் கறோஸ் சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு பிரித்தானிய ஆட்டக்காரரும், உலகின் 2ஆவது சிறந்த ஆட்டக்காரருமான அன்டி முறே தகுதிபெற்றுள்ளார். றோலண்ட் கறோஸ் சுற்றுப்போட்டியில் 1937ஆம் ஆண்டிலிருந்து இதுவரை எந்த பிரித்தானிய ஆட்டக்காரரும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறத்தவறிய நிலையில் முதல் தடவையாக அன்டி முறே தகுதிபெற்றுள்ளார். நடப்பு சம்பியனான சுவிஸ் நாட்டின் ஸரன் வாவ்றிண்காவை 6-4 6-2 4-6 6-2 என்ற செற் கணக்கில் தோற்கடித்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஏதிர்வரும் ஞாயிறன்று நடைபெறவிருக்கும் இறுதிப்…

  Read more
 • எதிரிக்கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாகவே செயல்படுவோம்: ஸ்டாலின்

  சட்டசபையில் 89 உறுப்பினர்களைக்கொண்ட தி. மு. க. எதிர்க்கட்சியாக செயல்படுமே தவிர, எதிரிக்கட்சியாக செயல்படாது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். சபாநாயகருக்கு மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உரை நிகழ்த்தினார். அவரது உரையில்: “இந்தியாவின் வரலாற்று பெருமைமிக்க சட்டப்பேரவைகளில் தமிழக சட்டப்பேரவை சிறப்புக்குரிய இடத்தை பிடித்துள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் இந்த சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவை காண உள்ளது. ஜனநாயகத்தின் முக்கியமான தூண்களில் ஒன்றாக இந்த சட்டப்பேரவை விளங்கிக் கொண்டிருக்கிறது….

  Read more
 • எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு மதிப்பளிப்போம்: ஜெயலலிதா உறுதி

  எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு மதிப்பளித்து நடப்போம் என்ற உத்தரவாதத்தை என்னால் வழங்கமுடியும் என்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தமிழகத்தின் 15ஆவது சட்டமன்ற பேரவைக்கு புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவைத் தலைவர் மற்றும் பேரவைத் துணைத் தலைவர் ஆகியோரைப் பாராட்டி முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார். சட்டப்பேரவைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ப. தனபால் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றார். துணைத் தலைவராக பொள்ளாச்சி ஜெயராமன் பதவியேற்றார். சபாநாயகராக பதவியேற்றுக் கொண்ட தனபாலை, அ. இ….

  Read more
 • செயின் நதியில் நீர் மட்டம் மேலும் அதிகரிப்பு: அதி உச்ச தயார் நிலைக்கு அழைப்பு

  பிரான்சில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, நாட்டில் இயற்கை அனர்த்த அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைநகரம் பரிஸை ஊடறுத்து பாயும் செயின் நதியின் நீர்மட்டம் அதி உச்ச அளவை எட்டியிருக்கிறது. ஆறு மீட்டர்வரை உயர்ந்திருக்கும் செயின் நதியின் நீர்மட்டம் அடுத்த சில மணிநேரங்களில் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரிப்பதை தொடர்ந்து, அதி உச்ச தயார் நிலையை பேணுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். தொடரும் கனமழை பிரான்ஸின் பல பகுதிகளில் வெள்ளபெருக்கை…

  Read more
 • சிரியாவில் உணவுப் பொட்டலங்களுடன் ஆயுதங்களையும் விநியோகிக்கும் அமெரிக்கா

  சிரியாவில் ஐ. எஸ். அமைப்பை எதிர்த்து போராடும் கிளர்ச்சிக்குழுவுக்கு அமெரிக்க விமானங்கள் ஆயதங்களை ஆகாயத்திலிருந்து உணவுப் பொட்டலங்களுடன் விநியோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு உணவுப்பொட்டலங்களை போடும் வேளையில், இஸ்லாமிய தேச அமைப்புக்கு எதிராக போராடும் சிரிய கிளரச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விநியோகிப்பதன் மூலம் சிரியாவில் காலூன்ற அமெரிக்கா எத்தனிக்கிறது என்று ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு உணவுப்பொட்டலங்களுடன் ஆயதங்களை விநியோகம் செய்திருப்பதை சிரியாவின் வடக்கு மாநிலமான அலெப்போவிலுள்ள கிராமப்புறங்களில் வாழும் மக்கள் அவதானித்திருப்பதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது….

  Read more
 • இன்னுமொரு குடியேறிகள் படகு 700 பயணிகளுடன் மூழ்கியது

  எகிப்தின் கடற்பரப்பில் 700 சட்டவிரோத குடியேறிகளுடனான படகு மூழ்கியதாகவும், அதில் 340 பயணிகள் வரையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் அறிவிகப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டுக்குள் நுழையும் எண்ணத்தோடு பயணித்த 700 பேருடனான படகு, எகிப்துக்கு அருகாமையிலுள்ள கிரெற்றே தீவுக்கருகே தென் மத்தியதரைக் கடலில் நிiகுலைந்து, மூழ்கத்தொடங்கியது. இதனையறிந்து, எகிப்தின் கடலோர சுற்றுக் காவல் கப்பல்கள் மீட்புபணியில் ஈடுபட்டு, இதுவரை 342 பேரை உயிருடன் மீட்டுள்ளன. நூற்றி நான்கு சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், எஞ்சியோர் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த…

  Read more
 • உலகின் மிகப்பெரும் அகதி முகாமை மூடுவதற்கு கென்யா முடிவு

  கென்யாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரும் அகதி முகாமான டடாப் அகதி முகாம் எதிர்வரும் நவம்பர் மாதம் மூடப்படும் என்று அந்த நாட்டு உள்துறை அமைச்சர் ஜோசப் நைசரி தெரிவித்துள்ளார். டடாப் முகாமில் தங்கியிருக்கும் 3 லட்சத்துக்கும் அதிகமான சோமாலிய நாட்டு அகதிகளை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்புவது குறித்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு மற்றும் சோமாலிய அரசுடன் இணைந்து செயல்பட இருப்பதாகவும் ஜோசப் நைசரி குறிப்பிட்டுள்ளார். சோமாலிய நெருக்கடியின்போது வெளியேறியவர்களுக்கு அடைக்கலம் வழங்குவதற்காக 1991ஆம் ஆண்டு…

  Read more
 • ஹில்லறி கிளின்ரனின் இரகசிய மின்னஞ்சல் விபரங்களை வெளியிடுகிறது ரஷ்யா

  அமெரிக்க முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹில்லறி கிளின்ரனின் இரகசிய மின்னஞ்சலில் காணப்படும் விபரங்களை பகிரங்கமாக வெளியிடுமாறு ரஷ்ய அதிபர் விலாடிமிர் புற்றின் உத்தரவிட்டுள்ளார். பராக் ஒபாமாவின் இராஜாங்க அமைச்சராக பதவிவகித்தபோது தனியார் இணையதள வலையமைப்பை பயன்படுத்தி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் தொடர்புகளை மேற்கொண்டதாக வெளிவந்த தகவல் சச்சரவை ஏற்படுத்தியிருந்தது. இராஜாங்க அமைச்சுப் பொறுப்பிலிருந்த ஹில்லறி கிளின்ரன் தனியார் இணையதள வலையமைப்பை பயன்படுத்தியது சட்டவரம்பை மீறிய செயலாக கருதி, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்தது. ஹில்லறி கிளின்ரனின்…

  Read more
 • பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியத்தில் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி

  பிரான்சில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நாட்டில் இயற்கை அனர்த்த அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது தலைநகரம் பரிஸை ஊடறத்து பாயும் செயின் நதி வேகமாக நிரம்பி, நீர்மட்டம் கரைதட்டியிருப்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. படையினர் அவசர உதவிக்கு அழைக்கப்பட்டு, வழமையான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள இடங்களில் சிறு படகுகள்மூலம் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். நாடெங்கிலும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நகரின் மத்தியில் செயின் நதியோரம் அமைந்துள்ள தொடரூந்து நிலையங்கள் மூடப்பட்டுள்ளன….

  Read more
 • ராஜீவ் காந்தி வழக்கு கைதிகள்: ஆதரவுப் பேரணிக்கு தமிழக அரசு அநுமதி

  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்க கோரி எதிர்வரும் ஜூன் 11ஆம் தேதி பேரணி நடத்துவதற்கான விண்ணப்பத்துக்கு தமிழக அரசு அநுமதி வழங்கியிருக்கிறது. இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட அனைவரும் எதிர்வரும் 11ஆம் தேதியுடன் 25 ஆண்டுகால சிறை வாழ்க்கையை நிறைவு செயயும் நிலையில், இவர்களின் விடுதலையை வலியுறுத்தி இந்த பேரணி ஏற்பாடு செய்யப்படுகிறது. வேலூரிலிருந்து கோட்டையை நோக்கி பேரணி நடத்த விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு அநுமதி வழங்கியதை…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ