• ஆர்மெனியர்களுக்கு எதிரான ஒட்டோமென் படையினரின் தாக்குதல் `இனப்படுகொலை’! – ஜேர்மன் பிரகடனம்

  முதலாம் உலகப் போரின்போது துருக்கியின் ஒட்டோமென் படையினர் நடத்திய தாக்குதல்கள் இனப்படுகொலை என்று, ஜெர்மனிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவது உலகப்போரின்போது பதினைந்து லட்சம் ஆர்மேனியர்கள் திட்டமிட்டு கொல்லப்பட்டதாக நீண்டகாலமாக ஆர்மேனியர்கள் குற்றம் சுமத்திவந்தனர். எனினும், இவ்வளவு பெரும் எண்ணிக்கையானவர்கள் கொலைசெய்யப்படவில்லை என்று தொடர்ந்து மறுப்பு தெரிவித்த துருக்கி, இனப்படுகொலை என்ற பதத்தையும் நிராகரித்து வந்தது. ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆதரவோடு இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றபட்டதால் ஆத்திரமடைந்த துருக்கி, ஜேர்மனிக்கான தனது தூதரை…

  Read more
 • உலகில் அதி கூடிய அடிமைகள் இந்தியாவில்!

  உலகம் முழுவதிலும் 4.6 கோடியினர் அடிமைகளாக காணப்படுவதாகவும் இவர்களில் 1.83 கோடி அடிமைகளைக்கொண்டு இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் அண்மையில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பாலியல் தொழில், பிச்சை எடுத்தல் மற்றும் கொத்தடிமைத் தொழிலில், அச்சுறுத்தி ஈடுபடுத்தப்படுவர்கள் தொடர்பாக ஆய்வு செய்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான `வோக் ப்ரீ’ மையம் அனைத்துலக அளவிலான அடிமைகள் குறித்த ஆய்வறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் 3.58 கோடி அடிமைகள் காணப்பட்டதாகவும், இந்த ஆண்டில் பெண்கள், குழந்தைகள்…

  Read more
 • உலகிலேயே மிக மோசமான ஊழல் நாடு பிரிட்டன் – இத்தாலிய எழுத்தாளர் றொபேற்றோ

  பிரிட்டன் உலகிலேயே மிக மோசமான ஊழல் நாடு என்று புகழ்பெற்ற எழுத்தாளரும் இத்தாலியின் மாபியா என்றழைக்கப்படும் குற்றக்கும்பல் மற்றும் பாதாள உலகக் குழுவினரின் நடவடிக்கைகளை பகிரங்கப்படுத்தியவருமான ரொபேற்றோ சவினோ தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் மிக அதிகமாக விற்பனையாகும் கொமோறா (Gomorra) மற்றும் சீறோ சீறோ சீறோ(Zero Zero Zero) ஆகிய நூல்களின் ஆசிரியரான றொபேற்றோ அண்மையில் நடைபெற்ற ஹே இலக்கிய விழாவில் பங்கேற்றார் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு விலகுவதனால் நிதி மோசடி குற்றங்களை எவரும் அறியாதவாறு பிரிட்டனால் அதனைத்…

  Read more
 • உலகின் மிக நீளமான தொடரூந்து சுரங்கத் தடம்

  உலகின் மிக நீளமான தொடரூந்து சுரங்கத் தடம் சுவிட்சர்லாந்தில் திறந்து வைக்கப்பட்டது. அல்ப்ஸ் மலைத் தொடரைக் குடைந்து, 57 கிலோ மீற்றர் நீளத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கத்தடம், வடக்கு ஐரோப்பாவையும் தெற்கு ஐரோப்பாவையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தடத்துக்கான திட்ட வரைபு 1947இல் வடிவமைக்கப்பட்டது. `கோதார்ட் சுரங்கத்தடம்’ என்று பெயரிடப்பட்ட இந்த சுரங்க வழியை அமைப்பதில் 2 ஆயிரத்து 400 பணியாளர்கள் ஈடுபட்டனர். ஏறத்தாழ 18 ஆண்டுகாலம் நீடித்த கட்டுமானப்பணிகளுக்கு 12 பில்லியன் சுவிஸ்…

  Read more
 • ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பின் மறுநாள் ஐக்கிய இராச்சியம் வரும் டொனால்ட் ட்ரம்ப்

  அமெரிக்க தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளராக உறுதியாகியிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், எதிர்வரும் ஜூன் 24ஆம் தேதி ஸ்கொட்லாந்து பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். பிரிட்டனின் அரசியல் எதிர்காலம் குறித்த முக்கிய வாக்கெடுப்பான ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா, விலகுவதா என்ற மக்கள் கருத்தின் வாக்கெடுப்பு ஜூன் 23ஆம் திகதி நடைபெற்று, முடிவுகள் ஜூன் 24 காலை வெளியிடப்படும் வேளையில், டொனர்ல்ட் டரம்பின் ஐக்கிய இராச்சிய பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் பெரும் முதலீடுகளைக்கொண்டிருக்கும் ட்ரம்ப், கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் கொள்வனவு…

  Read more
 • ஜனநாயக கட்சியின் வேட்பாளர் நியமனத்தை ஹில்லறி கிளின்ரன் இழக்கலாம்?

  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் நியமனத்தில் இது நாள் வரை முன்னிலையில் இருக்கும் ஹில்லறி கிளின்ரன் தற்போது அவரை எதிர்த்து நியமனத்துக்கு போட்டியிடும் பேர்ணி சண்டேர்ஸிடம் தோல்வியடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கலிபோர்ணியா மாநிலத்தில் எதிர்வரும் ஜூன் 7ஆம்தேதி நடைபெறவிருக்கும் உட்கட்சி தேர்தலில் ஹில்லறி கிளின்ரன் பெர்ணி சண்டேர்ஸிடம் தோல்வியடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலிபோர்ணியா மாநிலத்தில் முன்னொருபோதும் இல்லாதவாறு பெரும் எண்ணிக்கையானவர்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்வதில் முனைப்புக்காட்டி வருவதாக சுட்டிக்காட்ப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகப்படியான இளம்வாக்காளர்கள்…

  Read more
 • யூரோ-2016 போட்டிகளின்போது தாக்குதல் அபாயம்? அமெரிக்கா எச்சரிக்கை

  பிரான்ஸில் நடைபெறவிருக்கும் `யூரோ-2016’ உதைபந்தாட்ட போட்டிகளின்போது தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்று அமெரிக்க ராஜாங்க அமைச்சு எச்சரித்துள்ளது. யூரோ-2016 போட்டிகளை பார்வையிட அமெரிக்காவிலிருந்து பயணம் மேற்கொள்பவர்களும், பிரான்ஸில் ஏற்கனவே வாழும் பல லட்சக்கணக்கான அமெரிக்கர்களும், ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து போட்டிகளைக் காண பிரான்ஸ் செல்லவிருக்கும் அமெரிக்கர்களும் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளுமாறும் அமெரிக்க ராஜாங்க அமைச்சு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் இடங்கள் மட்டுமன்றி, மக்கள் கூடும் பொது இடங்கள் மற்றும் உணவு விடுதிகளிலும் கடந்த…

  Read more
 • பரிஸில் அகதிகளுக்கான முகாம் – மேயர் அறிவிப்பு

  பரிஸ் நகரத்தில் அகதிகளை பராமரிப்பதற்கான சர்வதேச தரம் வாய்ந்த அகதி முகாம் அமைக்கப்படும் என்று நகர மேயர் ஆன் ஹிடல்கோ தெரிவித்துள்ளார். அடைக்கலம்கோரி வருபவர்கள் உரியமுறையில் பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக தெரிவிக்கப்படும் நிலையில், அகதிகளுக்கு வேண்டிய அவசிய தேவைகளைக்கொண்ட சர்வதேச தரத்துக்கு அமைவாகவும், ஐக்கிய நாடுகள் சபை அகதிகளுக்கான அமைப்பு போன்றவற்றின் வரைமுறைகளுக்கு அமைவாகவும் இந்த அகதிகள் முகாம் அமையும் என்றும் பரிஸ் மேயர் கூறினார். பரிஸ் அகதி முகாம் அமைக்கப்படுவதற்கான இடத்தை தேர்வுசெய்யும் நடவடிக்கைகள்…

  Read more
 • ஜெயலலிதாவின் பணம் முறைகேடானதா? – ஆதாரம் கோரும் உச்சநீதிமன்றம்

  இலாபம் தேடுவதற்காக தோழி சசிகலா பினாமி நிறுவனங்களை நடத்தியதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சுமத்தியிருக்கும் நிலையில், அந்த பணம் ஜெயலலிதாவுக்கு உரியது என்பதற்கு ஆதாரம் உள்ளதா? என்று கர்நாடக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி. சுதாகரன் ஆகியோர் மீதான வருமானத்துக்குமீறிய சொத்துக் குவிப்பில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய சிறைத்தண்டனை தீர்ப்பை உறுதிசெய்யுமாறு கோரிய மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையின்போதே உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்தக் கேள்வியை எழுப்பினார்கள். கர்நாடக சிறப்பு…

  Read more
 • கடவுச்சீட்டு கட்டுப்பாடுகளைகளை இலங்கை அரசு நீக்குகிறது

  அரசியல் அழுத்தங்கள் மற்றும் ஏனைய காரணங்களால் நாட்டைவிட்டு வெளியேறி, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஜூன் முதலாம் தேதி தொடக்கம் நீக்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து அல்லது அரசியல் புகலிடம் பெற்று வாழும் இலங்கையருக்கு கடவுச்சீட்டு வழங்கக்கூடாதென்று 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. அகதிகளாகவோ புகலிடம் கோரியோ வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் உரிமைகளை முன்னைய அரசின் அறிவுறுத்தல்கள் மீறுவதால், குடிமக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு உறுதி கொண்டிருக்கும்…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ