• பிரதமர் டேவிட் கமரோன் பதவி விலகுகிறார்

  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகவேண்டும் என்று மக்கள் தெளிவாக வாக்களித்திருப்பதை மதித்து ஏற்றுக்கொள்வதாக பிரதமர் டேவிட் கமரோன் தெரிவித்துள்ளார். மக்களின் ஆணையை ஏற்று, ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாட்டுக்கு புதியதொரு தலைமை அவசியமாக உள்ளதாகவும், அந்த புதிய தலைமையை ஒக்ரோபரில் தமது கட்சி, அதன் மாநாட்டில் தேர்வு செய்யும் என்றும், அப்போது, பதவியிலிருந்து தாம் விலகுவதாகவும் அவரின் டவுனிங் வீதி வாசஸ்தலத்துக்கு முன்பாக அவர் அறிவித்தார். மக்களின் விருபபத்தை ஏற்று, ஒன்றியத்திலிருந்து விலகும் நடவடிக்கைகளை தலைமைதாங்கி…

  Read more
 • இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

  பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்திருக்கும் இந்துக்களுக்கு, குடியுரிமை அளிக்க இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகள் சாசன ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடான இந்தியா, அகதிகள் விவகாரத்தில் சொந்த நடைமுறையை பின்பற்றிவருகிறது. முஸ்லீம்கள் பெரும்பானமையாக உள்ள பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக இடம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், பார்சிகள் உள்பட, பல்வேறு மதத்தினர் கடவுச்சீட்டு மற்றும் நுழைவு அநுமதி இல்லாமல்…

  Read more
 • ஈராக் மூன்று சுயாட்சி மாநிலங்களாக பிரிக்கப்படவேண்டும் – குர்திஷ்கள் கோரிக்கை

  இஸ்லாமிய தேசம் என்னும் ஐ. எஸ். அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர் மேலும் வன்சம்பவங்களும் மோதல்களும் இடம்பெறாமல் இருப்பதற்கு ஷியா, சுன்னி மற்றும் குர்திஷ்களுக்காக ஈராக் வெவ்வேறு மூன்று மாநிலங்களாக பிரிக்கப்படவேண்டும் என்று குர்திஷ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. பலூஜா நகரத்தை ஐ. எஸ். அமைப்பிடமிருந்து கைப்பற்றிய பின்னர், அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் மொசூலை நோக்கி ஈராக் படையினர் முன்னேறிவருவதாகவும், மொசூல் கைப்பற்றப்பட்ட பின்னர் ஐ. எஸ். அமைப்பின் அதிகாரம் ஈராக்கில் முடிவுக்குகொண்டுவரப்படும் என்றும் தெரிவித்திருக்கும் குர்தீஷ் அமைப்பு,…

  Read more
 • கொலம்பிய அரசும், பார்க் போராளிகளும் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு இணக்கம்

  கொலம்பியாவில் 52 ஆண்டுகளாக நீடித்த மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தில் ஈடுபட இணங்கியிருப்பதாக கொலம்பியா அரசும், பார்க் போராளிகளும் கூட்டாக அறிவித்துள்ளனர். இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோரை பலிகொண்ட மோதலை முடிவுக்கு கொண்டுவரும் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த விபரங்கள், கியூபா தலைநகரம் ஹவானாவில் பார்க் குழுவின் தலைவர் டிமோலியோன் ஜிம்மனேஸ், கொலம்பிய அதிபர் யுவான் மனுவெல் சண்டோஸ் ஆகியோருக்கிடையேயான சம்பிரதாய சந்திப்பின்போது வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகநீண்ட போராட்டங்களில் ஒன்றான…

  Read more
 • பாகிஸ்தானின் பிரபல சுபி பாடகர் சுட்டுக் கொலை!

  பாகிஸ்தானின் சிறந்த பாடகர்களில் ஒருவரான அம்ஜத் சப்ரி, கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கவ்வாலி எனப்படும் சுபி பக்தி பாடல்கள் பாடுவதில் புகழ் பெற்ற அம்ஜத் சப்ரி, தனது வீட்டுக்கு அருகாமையில் வாகனத்தில் பயணித்துகொண்டிருக்கும்போது, மிக அருகாமையிலிருந்து துப்பாக்கி ஏந்திய இருவரால் சுடப்பட்டதாகவும், ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுபி மதத்துடன் தொடர்புகொண்ட பக்தி இசையை மத நிந்தனையாக கருதும் சுன்னி மத பிரிவினரே இவரைப் படுகொலைசெய்ததாக கருதப்படுகிறது. அம்ஜத் சப்ரி கொலையாளிகள்…

  Read more
 • விண்ணில் ஒரே தடவையில் 20 செயற்கை கோள்களை நிறுத்தியது இந்தியா

  இந்தியாவின் சொந்த செயற்கை கோள்கள் உள்பட, ஏனைய நாடுகளினதும் அடங்கிய 20 செயற்கை கோள்களை ஒரேதடவையில் இந்திய விஞ்ஞானிகள் விண்வெளிக்கு அனுப்பி, சாதனை நிகழ்த்தியுள்ளார்கள். ஆந்திராவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து புதன்கிழமை காலை அனுப்பிவைக்கப்பட்ட விண்கலம் 20 செயற்கைக் கோள்களையும் வெற்றிகரமாக விண்வெளியில் நிலைநிறுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புவியியல் வரைபடம், கடல்வழி போக்குவரத்து கண்காணிப்பு, நீர்வள மேம்பாடு, நகர மற்றும் ஊரக பகுதிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள உதவும் இந்திய வடிவமைப்பு செயற்கை கோள்களுடன்,…

  Read more
 • டொனால்ட் ட்ரம்பை கொல்ல முயன்ற பிரித்தானிய இளைஞர் கைது

  அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பின் பிரச்சார கூட்டத்தில் கடமையிலிருந்த காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்து டொனால்ட் ட்ரம்பை கொல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைதான 20 வயதாகும் பிரித்தானிய இளைஞர் நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்பட்டார். இங்கிலாந்தின் சறே பகுதியின் டோக்கிங் என்னும் இடத்தைச் சேர்ந்த மைக்கல் ஸ்டாக்ட்போர்ட் என்பவர் லாஸ் வெகாஸில் கடந்த வாரம் நடைபெற்ற ட்ரம்பின் பிரச்சார கூட்டத்தின்போது அங்கிருந்த காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்து டொனால்ட் ட்ரம்பை சுட்டுக்கொல்ல முயன்றதாகவும், இதற்காக…

  Read more
 • யோகா இனியும் இந்தியாவுடையதல்ல – ஐ. நா. வில் ஜக்கி வாசுதேவ்

  யோகா ஓர் உலகலாவிய நிகழ்வு என்றும் இது இனியும் இந்தியாவுடையதாக இருக்கமுடியாதென்றும் ஈஷா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் யோகாவை ஐக்கிய நாடுகள் சபையும் ஏற்றுக்கொண்டிருப்பது மகத்தான புரட்சி என்றும் நியூயோர்க் ஐக்கிய நாடுகள் சபை பணிமனையில் நடைபெற்ற 2ஆவது அனைத்துலக யோகா தின நிகழ்வில் கலந்து கொண்ட ஜக்கி வாசுதேவ் குறிப்பிட்டார். ஒவ்வொரு மனிதரிடமும் யோகாவை கொண்டுசெல்லும் இந்த முயற்சி ஐ. நா. சபைமூலம் மனிதரின் தேவைகளான…

  Read more
 • ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலக வேண்டும்: பிரித்தானிய நாளேடுகள்

  ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் அங்கத்துவத்தை தொடரவேண்டுமா இல்லை விலகவேண்டுமா என்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு ஒரு சில மணிநேரங்களே உள்ள நிலையில், பிரித்தானியாவின் செல்வாக்கு மிக்க நாளேடுகள் ஒன்றியத்திலிருந்து விலகவேண்டும் என்பதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. இங்கிலாந்தின் விற்பனையில் முதலிடத்தில் உள்ள பிரபல பத்திரிகைகளான `சன்’, `சன்டே ரைம்ஸ்’ போன்றவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று தொடர் பரப்புரைகளை மேற்கொண்டிருக்கும் நிலையில், மற்றுமொரு செல்வாக்கு மிக்க நாளேடான `ரெலிகிராப்’ தீட்டியுள்ள ஆசிரிய தலையங்கத்தில், எதிர்வரும்…

  Read more
 • ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டாம்: நாட்டு மக்களுக்கு டேவிட் கமரோன் வேண்டுகோள்

  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன் இறுதிநேர வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறக்கூடாது என பல்வேறு நாடுகளின் தலைவர்களும், முதலீட்டாளர்களும், நிறுவன அதிபர்களும் வலியுறுத்தி வருவதுடன், பிரிட்டன் வெளியேறினால் ஐரோப்பாவில் அதன் செல்வாக்கு குறைந்துவிடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளதையும் டேவிட் கமரோன் சுட்டிக்காட்டியிருக்கிறார். தொலைக்காட்சிமூலம் நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தால் நீங்கள் மட்டுமின்றி, உங்களது எதிர்கால சந்ததியினரும் பாதிக்கப்படுவார்கள்’…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ