• சரஸ்வதி பாக்கியராசா: ஈழத்து இசைக் குயில்

    ஈழத்தின் பெரு மதிப்புக்குரிய இசைக் கலைஞராக திகழ்ந்த திருமதி சரஸ்வதி பாக்கியராசா லண்டனில் காலமானார். இசையுலகின் மும்மூர்த்திகளாக எம். எஸ். சுப்புலக்ஷ்மி, டி. கே. பட்டம்மாள், எம். எல். வசந்தகுமாரி ஆகியோர் புகழ்பெறுகையில், யாழ்ப்பாணத்தில் அப்படி அழைக்கவல்ல ஒரு சிறப்பை ஒரு காலத்தில் பெற்றவர்கள் நாகேஸ்வரி பிரம்மானந்தா, சரஸ்வதி பாக்கியராசா, சத்தியபாமா இராஜலிங்கம் ஆகியோர். கொக்குவில்லைச் சேர்ந்தவரான சரஸ்வதி பாக்கியராசா சிங்கப்பூரில் பிறந்து, அங்கேயே தனது இசைப் பயணத்தை ஆரம்பித்தவர். சென்னை, மத்திய கர்நாடக இசைக் கல்லூரியின்…

    Read more
  • துருக்கியில் இராணுவ சதி!

    துருக்கியில் அரசுக்கு எதிரான சதி முயற்சியில், நாட்டைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக இராணுவ பிரிவொன்று தெரிவித்திருக்கிறது. இஸ்ரன்புல்லில் முக்கிய கேந்திர ஸ்தானங்களில் இராணுவம் நிலைகொண்டுள்ளதுடன், தலைநகர் அங்காராவில் ஜெற் விமானங்கள் தாள பறப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முக்கியமான இரண்டு பாலங்கள் போக்குவரத்துக்கு மூடப்பட்டு, இராணுவம் காவல்புரிவதாகவும், விமான நிலையங்களில் அனைத்து விமான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகையில், அரசுக்கு விசுவாசமான முக்கிய இராணுவ அதிகாரிகள் சிலர் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. `சமாதான கவுன்சில்’ ஒன்று தற்போது நாட்டை ஆட்சிபுரிவதாகவும், ஊரடங்கு…

    Read more
  • தெரெசா மே புதிய பிரிட்டிஷ் பிரதமர்!

    புதிய பிரிட்டிஷ் பிரதமராக தெரேசா மே பதவியேற்பது உறுதியாகிவிட்டது. சக்தி அமைச்சர் அன்ட்ரியா லீட்சம் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்ததையடுத்து, தெரேசா மே பிரதமர் பதவிக்கான ஒரே வேட்பாளராகவிருக்கிறார். இப்பொழுது ஏற்பட்டுள்ள இத் திருப்பங்களையடுத்து, புதிய பிரதமர் பதவியேற்பதற்கான தீவிர செயல்பாடுகளில் வெஸ்ற்மின்ஸ்ரர் சுறுசுறுப்பாகியிருக்கிறது. சில தினங்களில் புதிய பிரதமர் பதவியேற்கலாமென்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டாலும், சிலவேளைகளில் அது இன்றுகூட நடைபெறலாமென்றும், தெரேசா மே இன்று பங்கிங்காம் மாளிகையில் மகாராணியை சந்திக்கலாமென்றும் வெஸ்ற்மின்ஸ்ரர் வட்டாரங்களில் ஹேஷ்யம் நிலவுகிறது. பிரதமர் டேவிட்…

    Read more
  • தெற்கு சூடானில் மீண்டும் கடும் மோதல்

    தெற்கு சூடான் தலைநகரான ஜூபாவில் அதிபர் சல்வா கீரின் படைகளுக்கும் துணை அதிபர் ரெய்க் மச்சருக்கு விசுவாசமான படையினருக்கும் இடையே மிகவும் கடுமையான மோதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச படையினர் தமது நிலைகள்மீது தாக்குதல் நடத்தியதாக மச்சர் ஆதரவு படைத்தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த மோதல்கள் காரணமாக இதுவரை 150க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இன்னும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு சூடானில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் தவறிவிட்டதாக ஐக்கிய…

    Read more
  • போத்துக்கல் வசமானது யூரோ கிண்ணம்

    ஐரோப்பிய கிண்ணத்தின் 2016ஆம் ஆண்டுக்கான 15வது சுற்றுப்போட்டியில், போத்துக்கல் முதல் தடவையாக ஐரோப்பிய கிண்ணத்தை வென்றுள்ளது. உலக கிண்ண வெற்றியுடன், தர வரசையில் முதலாவது இடத்திலுள்ள ஜேர்மனி, மற்றும் பலம்வாய்ந்த ஸ்பெயின், பெல்ஜியம், இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய அணிகள் போட்டியிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, தரவரிசையில் 8ஆவது இடத்திலுள்ள போர்த்துக்கல்லும் 17ஆவது இடத்திலுள்ள பிரான்ஸும் வெற்றிக்கிண்ணத்துக்காக இறுதியாக மோதின. தொடக்கத்திலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் போர்த்துக்கல்லின் நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டோ காயம் காரணமாக…

    Read more
  • விம்பிள்டன்: ஏழாவது தடவையாக செரீனா வில்லியம்ஸ்

    விம்பிள்டன் ரென்னிஸ் சுற்றுப்போட்டியில் இந்த தடவையும் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டதன்மூலம் செரினா வில்லியம்ஸ் ஏழாவது தடவையாக விம்பிள்டன் கிண்ணத்தையும், 22 பெரும் சுற்றுப்போட்டிகளையும் வென்றுள்ளார். விம்பிள்டன் சுற்றுப்போட்டியில் பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் செரினா வில்லியம்ஸ் ஜேர்மனியின் ஏஞ்சலிக் கேர்பரை எதிர்கொண்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவுஸ்திரேலிய ஓபனில் செரீனாவை வீழ்த்திய கேர்பரை இந்த தடவை 7-5, 6-3 என்ற கணக்கில் செரீனா வெற்றிபெற்றார். இதன்மூலம், 22 பெரும் போட்டிகளை வென்ற ஜேர்மனியின் ஸ்ரெபி கிறாபின் சாதனையை செரினா வில்லியம்ஸ்…

    Read more
  • இரண்டாவது தடவையாக விம்பிள்டன் கிண்ணம் வெல்லும் அன்டி முறே

    விம்பிள்டன் ரென்னிஸ் சுற்றுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் பிரிட்டனின் அன்டி முறே, கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை வெற்றிபெற்று, கிண்ணத்தை இரண்டாவது தடவையாக சுவீகரித்தார். அண்மைக்கால ரென்னிஸ் போட்டிகளில் அதிவேகமாக பந்தை வழங்குபவரான மிலோஸ் ரயோனிச்சுடனான பரபரப்பான ஆட்டத்தில் அன்டி முறே 6-4, 7-6, 7-6 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்றார். 2012ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் கிண்ணம், 2013 விம்பிள்டன் கிண்ணம் ஆகியவற்றை வென்றுள்ள முறே, தற்போது பெற்ற வெற்றியின்மூலம் மூன்று பெரும் போட்டிகளை வென்றுள்ளார்.

    Read more
  • ஸ்பெயின் காளை மோதல் விளையாட்டில் பலி

    ஸ்பெயின் நாட்டின் பாரம்பரிய காளை மோதல் விளையாட்டின்போது, காளையுடன் மோதியவர் அதனால் தாக்கி கொல்லப்பட்டார். ஸ்பெயினில் இந்த விளையாட்டின்போது காளையால் முட்டிக்கொல்லப்பட்டமை, இந்த நூற்றாண்டின் இதுவே முதல் சம்பவம் இதுவாகும். ஸ்பெயினின் டெருவெல் நகரத்தில் நடைபெற்ற இந்த மோதலில் கலந்துகொண்ட 29 வயதுடைய விக்டர் பேரியோ என்பவரை காளை குத்தி, தூக்கி வீசி எறிந்த பின்னர், தரையில் வீழ்ந்த அவரது நெஞ்சில் மூர்க்கமாக கொம்பினால் குத்தி தூக்கி எறிந்த சம்பவம் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகின. இதுபோன்ற நிகழ்வுகள்…

    Read more
  • காந்தியை மகாத்மாவாக மாற்றியது தென்னாபிரிக்கா – மோடி

    மோகன்தாஸ் காந்தியை மகாத்மாவாக மாற்றிய பெருமை தென்னாபிரிக்காவையே சாரும் என்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆபிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு தென்னாரிக்கா சென்றிருந்த மோடி, அங்கு வாழும் இந்திய, தென்னாபிரிக்க வர்த்தகர்கள் ஏற்பாடுசெய்திருந்த மாபெரும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். இனவெறி, ஒடுக்குமுறை போன்ற நெருக்கடிகள் வாழ்வைப் பாதித்திருந்தாலும், தென்னாபிரிக்கா இந்தியர்களின் இதயத்துக்கு நெருக்கமான நாடு என்று மோடி தமதுரையில் குறிப்பிட்டார். வழிகாட்டிகளாக மகாத்மாவையும், மண்டேலாவையும் உருவாக்கிய நாடு தென்னாபிரிக்கா என்றும், சத்யாகிரகம் பிறந்த இடமும்,…

    Read more
  • தச்சருக்கு பின்னர் மீண்டும் பெண் பிரதமர்

    `இரும்பு பெண்மணி’ என்று வர்ணிக்கப்பட்ட மார்கிரட் தச்சருக்கு பின்னர் பிரிட்டனுக்கு மீண்டும் பெண்மணி ஒருவர் பிரதமராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆளும் பழமைவாதக் கட்சியின் புதிய தலைவருக்கான தெரிவுக்கு தெரேசா மே மற்றும் அன்ட்ரியா லீட்ஸம் ஆகிய இருவரும் இறுதிச்சுற்றில் போட்டியிடுவதையடுத்து, பதவி விலகும் டேவிட் கமரோனுக்கு பின்னர் பிரிட்டனின் அடுத்த பிரதமராக பெண்மணி ஒருவர் தெரிவாவது உறுதியாகி உள்ளது. பழமைவாத கட்சியின் தலைமைப்பதவியை வகிப்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் முன்வந்ததை தொடர்ந்து, கட்சியின் சாசன விதிகளின் பிரகாரம் அதன்…

    Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ