• தமிழக அரசியல்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பதவிநீக்கத்துக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

  தமிழக அரசியல்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பதவிநீக்கத்துக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு தினேஷ் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பதினெட்டு பேரின் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். சத்தியநாராயணன் தீர்ப்பளித்துள்ளார். வழக்கின் பின்னணி முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிமீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், முதல்வரை மாற்றக் கோரியும் அதிமுகவைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த…

  Read more
 • கிரிக்கெட்: வேகப் பந்துவீச்சில் ஏன் பாகிஸ்தான் இந்தியாவை விஞ்சுகிறது?

  தினேஷ் அகிரா இந்திய கிரிக்கெட் அணியை நோக்கித் தொடர்ச்சியாக இன்றுவரை எழுப்பப்படும் விடை தெரியாத ஒரு கேள்வி, ‘ஏன் இந்தியாவால் தொடர்ச்சியாக சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க முடிவதில்லை’ என்பதுதான். 1947 பிரிவினைக்கு முன் ஒரே தேசமாக இந்தியாவுடன் இருந்த பாகிஸ்தான் அணி, தனது தொடக்க காலத்திலிருந்தே வேகப் பந்துவீச்சுப் பாரம்பரியத்தை வளர்த்தெடுத்து, தொடர்ந்து தக்கவைத்தும் வந்துள்ளது. ஆனால், இந்தியா தனது ஆரம்ப நாள்களிலிருந்தே சுழல் பந்துவீச்சுக்கே பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. நடுவில் சிலகாலம் கபில்தேவ்,…

  Read more
 • சபரிமலை சர்ச்சை: கேரளாவில் ஆட்சியை கவிழ்க்க சதி?

    சபரிமலை பிரச்னையில் மக்கள் உணர்வுகளைத் தூண்டி, இடதுசாரி முன்னணி ஆட்சியைக் கவிழ்க்க காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் சதிசெய்வதாக கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே இரகசிய உடன்பாடு இருப்பதாகவும் மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாமென உச்ச நீதிமன்றம் அநுமதி அளித்தது. இதனையடுத்து, ஐயப்பன் கோவில்நடை திறந்துள்ள நிலையில் பெண்கள் சிலர் கோவிலுக்குள் நுழைய முயன்றுவருகின்றனர். எனினும், பக்தர்கள்…

  Read more
 • போபர்ஸ் – ரபேல் ஊழல்கள்: காட்சி மாறவில்லை; கதாபாத்திரங்கள் மட்டுமே

  தினேஷ் அகிரா சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையான நேரு காலம் தொடங்கி இன்றுவரை பல்வேறு ஊழல்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் இந்திய ஜனநாயகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், இவற்றில் ஒரு சில விவகாரங்கள்மட்டுமே ஆட்சி மாற்றத்தையும் அரசியல் தட்ப வெப்ப சூழ்நிலையையும் மாற்றும் வல்லமை பெற்றதாக இருந்திருக்கின்றன. இராணுவ விவகாரம் தொடர்பான முறைகேடுகள், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அதன்பொருட்டு இராணுவ அமைச்சர் பதவி விலகும் சடங்குகள் போன்றவை நேரு காலத்திலேயே தொடங்கினாலும், அதன்பொருட்டு ஆட்சிக்கோ அதன் ஆட்சித்…

  Read more
 • செய்தித் துறையை மோடி அரசு அச்சுறுத்துகிறது?

  கலையரசன் தமிழகத்தில் கவர்னர் அலுவலகத்தின் புகாரின்பேரில் `நக்கீரன்’ ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற தலையீட்டால் விடுதலைசெய்யப்பட்ட விவகாரத்தின் பரபரப்பு ஓய்வதற்குள், தேசிய அளவில் ‘குயின்ற்’ (Quint) இணைய இதழ் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகள் பரபரப்பை ஏற்படுத்தின. கடந்த வியாழன் காலை, உள்ளூர் காவல்துறையுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் நொய்டா நகரில் உள்ள ‘குயின்ற்’ இணைய இதழ் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளரான தொழிலதிபர் ராகவ் பாஹல் வீட்டில் நுழைந்து சோதனை நடாத்தத்…

  Read more
 • தமிழக முதல்வர்மீது ‘சிபிஐ’ விசாரணை? அதிமுக அரசுக்கு நெருக்கடி

  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து, சரியான ஒரு சிக்கலில் அவர் சிக்கிக்கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமிமீது ஊழல் புகாரைச் சுமத்திய எதிர்க்கட்சியான தி. மு. க.கூட எதிர்பார்க்காத அளவில் இந்த உத்தரவு அமைந்துள்ளது. தமிழக அரசியலில் இதன் தாக்கம் என்ன என்பதுதான் இப்போதைய பரபரப்பான கேள்வி. எதிர்க்கட்சிகளின் தாக்குதல், உள்கட்சி மோதல், தினகரனின் வியூகம், பொதுமக்களின் அதிருப்தி போன்றவை ஒரு பக்கம் இருந்தாலும்,…

  Read more
 • பயண சாகசம்: அதிதூர விமானசேவை ஆரம்பம்

  உலகின் அதிதூர நேரடி விமான சேவை இன்று தொடங்குகிறது. ஐந்து ஆண்டுளுக்கு முன்னர் தொடங்கி இடைநிறுத்தப்பட்டிருந்த சிங்கப்பூருக்கும் அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்குமான இந்த சேவையை சிங்கப்பூர் எயர்லைன்ஸ் மீண்டும் இன்று ஆரம்பிக்கிறது. 19 மணித்தியாலங்களுக்குச் சற்றுக் குறைவான பயண நேரத்தைக்கொண்ட இச்சேவை, 15 ஆயிரத்துக்கும் அதிகமான கி. மீ. தூரத்தைக் கடக்கிறது. அதி செலவினம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இச் சேவையில் இப்போது புத்தம்புதிய A350-900 ULR விமானம் ஈடுபடுத்தப்படுகிறது. முன்னர் சேவையிலீடுபடுத்தப்பட்ட போயிங் 777 ரக விமானத்தைவிட…

  Read more
 • வெப்பமயமாகும் உலகு: விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும் உலகின் உறக்கமும்!

  சைபர்சிம்மன் பருவநிலை மாற்றம் தொடர்பாகக் காத்திருக்கும் பாதிப்புகளை அபாய எச்சரிக்கையாகவும், அதைத் தடுப்பதற்கான வழிகளை மனித குலத்திற்கான இலக்காகவும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். தற்போதையநிலை, மாற்றம் இல்லாமல் தொடருமானால், பூமியின் வெப்பம் வெகு விரைவில் 1.5 முதல் 2 செல்ஷியஸ் வரை உயரும் வாய்ப்பிருப்பதாகவும், இதனால் பவளப் பாறைகள் முற்றாக அழிவது, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை வீசுவது உள்ளிட்ட விபரீதங்கள் காத்திருப்பதாக விஞ்ஞானிகளின் எச்சரிக்கை அமைகிறது. இந்த விபரீதங்கள் ஏற்படாமல் தடுக்கவேண்டுமெனில், வெப்பநிலை உயர்வை 1.5…

  Read more
 • திரைப்படம் – ‘பரியேறும் பெருமாள்’: சாதியத்துக்கு ஒரு சங்கநாதம்

  தமிழகத்தில் நிலவும் தீண்டாமை, ஆணவக் கொலை உள்ளிட்ட சாதிய அவலங்கள் தமிழ் சினிமாவில் பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கும் காலம் இது. சாதியத்தைச் சாடும் திரைப்படங்கள் எக்காலத்திலுமே அவ்வப்போது வெளிவந்திருந்தாலும், இயக்குநர் பா. இரஞ்சித்தின் வருகைக்குப்பின்னர் பல படங்கள் இந்தப் பிரச்னைகளைப் பேசத் தொடங்கியுள்ளன. தலித் மக்களின் வாழ்வியலையும் தலித் அரசியலையும் பூடகமாகவும் நேரடியாகவும் பேசும் படங்களை இயக்கியவரான இரஞ்சித், தான் அச்சமூகத்தில் பிறந்தவர் என்பதை வெளிப்படையாக அறிவித்துச் செயல்படும் மிகச்சில திரை ஆளுமைகளில் ஒருவர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான…

  Read more
 • சமாதான நோபல் பரிசை வெல்லும் மனித உரிமைப் போராளிகள்

  சைபர் சிம்மன் ஈராக்கின் யாசிடி இனத்தைச் சேர்ந்த நடியா முராத் மற்றும் கொங்கோவைச் சேர்ந்த டெனிஸ் முக்வெகே ஆகிய இருவரும், போர்ச் சூழலில் பாலியல் தாக்குதலை ஓர் ஆயுதமாக பயன்படுத்துவதை எதிர்த்துப் பாடுபட்டமைக்காக இந்த ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். நோர்வே நோபல் குழு இதனை அறிவித்துள்ளது. போர் மற்றும் ஆயுதப் போராட்டச் சூழலில் பாலியல் தாக்குதலை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை எதிர்த்துப் பாடுபடுவதற்காக இந்த பரிசுக்கான அங்கீகாரத்தை இவர்கள் பெறுகின்றனர். முக்வெகே ‘தனது வாழ்க்கை…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ