• கிளிநொச்சி, முல்லைத்தீவு: 50 ஆயிரம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு முப்படையினரும் பொலிஸாரும் களத்தில்

    குமார்-ராஜா கடும் மழை வெள்ளம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 75 பேராக மேலும் அதிகரித்துள்ளது. என்றாலும், நேற்று வெள்ளநீர் வடிந்தோட ஆரம்பித்துள்ளதுடன், இப்பகுதிகளில் வானிலை சுமுகமாகவே காணப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 338 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 ஆயிரத்து 254 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 841 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள் சுந்தரம்…

    Read more
  • பிரிட்டிஷ் மக்களின் கவலைகளும் மனமாற்றங்களும் கவனத்தில் வேண்டும் – ‘சொந்த செலவில் சூனியம்’ – 2

    வி. சிவலிங்கம் (பகுதி-2) தற்போதைய நெருக்கடிகள் வரலாற்று அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைப்புத் தொடர்பாக பிரித்தானிய அரசில் ஏற்பட்ட விளைவுகளை முன்னர் பார்த்தோம். இனி, 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான பொதுசன வாக்கெடுப்பின் பின்னர் நிகழ்ந்துவரும் மாற்றங்களை அவதானிக்கலாம். ஏனெனில், சுமார் 45 ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தமையால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இலகுவாகப் பிரிந்து செல்வதற்கான சூழல்களை ஏற்படுத்தியுள்ளதா? 28 நாடுகளுடன் பின்னிப் பிணைந்துள்ள ஐரோப்பிய பொருளாதாரத்திலிருந்து விலகுவதால்…

    Read more
  • எனது நடவடிக்கைகள் வரலாற்று பொன்னெழுத்துக்கள் – ஜனாதிபதி சிறிசேன

    குமார்-ராஜா பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கும் ஜனநாயகத்துக்கும் கௌரவமளிக்கின்ற தலைவரென்ற வகையிலேயே தாம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று சத்தியப்பிரமாணம் வழங்கிய பின்னர் அந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களும் கையொப்பமிட்டுத் தந்தாலும் தாம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கப் போவதில்லையென தாம் வெளியிட்ட செய்தி தமது…

    Read more
  • அரசியலமைப்பு மீறல் குற்றத்தை தேர்தல் போர்வையில் சரிசெய்யமுடியாது – பதவியேற்பில் ரணில்

    குமார்-ராஜா ஒன்றிணைந்த இலங்கையில் அனைவருக்கும் நீதியான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும், மக்கள் விடுதலை முன்னணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டின் ஐந்தாவது பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். நாட்டிலிருந்து ஊழல் மோசடிகளை முற்றாக இல்லாதொழித்து, அனைத்து இன, மத மக்களும் சம உரிமையுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கப்போவதாக…

    Read more
  • ‘சொந்தச் செலவில் சூனியம்?’ – ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கைகள்

    வி. சிவலிங்கம் (பகுதி-1) ஐரோப்பாவிலும் குறிப்பாக, பிரித்தானியாவிலும் மிக அதிக அளவில் பேசப்படும் அரசியல் நிகழ்வு எனில் அது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற எடுத்த முடிவு ஆகும். தற்போது, வெளியேறுவது என்பது அதாவது, முற்றாகவா? அல்லது ஓரளவாகவா? மென்மையான (ளுhடிகவ நஒவை) வெளியேற்றமா? அல்லது கறாரான (ழயசன நஒவை) வெளியேற்றமா? என, தெளிவற்ற நிலை தொடர்கிறது. ஆளும் கன்சவேட்டிவ் கட்சிக்குள் மிக மோசமான பிளவுகள் தோன்றியுள்ளன. சமீபத்தில், பிரதமர் தெரேசா மே மீது நம்பிக்கை வாக்கெடுப்பு…

    Read more
  • மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா

    குமார்-ராஜா மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியிலிருந்து இன்று (15) ராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றிய பின்னர் தனது ராஜிநாமாவை கையளிக்கவுள்ளதாக அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளார். இதேவேளை, ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை (16) புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். இந்தப் பதவிப்பிரமாண நிகழ்வு நாளை (16) காலை 10.00 மணிக்கு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவையும்…

    Read more
  • மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

    குமார்-ராஜா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது அமைச்சரவைக்கும் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவை நீக்கமுடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்தது. தடையுத்தரவு நீக்கக்கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் முற்றாக நிராகரித்ததோடு, மஹிந்த தரப்பால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 16, 17, 18 ஆகிய திகதிகளில் விசாரணைக்கெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு முடிவுறும் வரையில், இதனோடு தொடர்புபட்ட மேன்முறையீட்டு நீதிமன்றில் உள்ள றிட்மனு மீதான விசாரணையையும் இடைநிறுத்தும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த…

    Read more
  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது – நீமன்றம் தீர்ப்பு

    குமார்-ராஜா இலங்கையில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட முடிவு அரசியலமைப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதம நீதியரசர் தலைமையில், இந்த மனுக்களை விசாரித்த ஏழு நீதியரசர்கள் குழாம், ஏகமனதாக இத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பாராளுமன்றத்தை நான்கரை வருட கால எல்லைக்கு முன்னர் ஜனாதிபதியினால் கலைக்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு…

    Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ