• 1942இல், இலங்கையில் ‘முதலாவது’ ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்!

  யப்பானிய பேரரசர் அகிஹிற்ரோ பதவி துறந்திருக்கிறார். 85 வயதான அவர், 30 ஆண்டுகள் பதவியிலிருந்தார். முதுமையும், உடல் நலமின்மையும் காரணமாக, தனது கடமைகளைத் தன்னால் சரிவர ஆற்றமுடியவில்லை என்று தெரிவித்து, அதற்காக பதவியிலிருந்து விலகுவதற்கான அநுமதியைப் பெற்று, அவர் வைபவ ரீதியாக இன்று பதவியிலிருந்து விலகியிருக்கிறார். இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, இப்படி தாமாகவே பதவியிலிருந்து விலகிய முதலாவது மன்னராக, அகிஹிற்ரோவின் இப் பதவிதுறப்பு பைவம் யப்பானில் வரலாறு சமைக்கிறது. அவரது மூத்த புதல்வரான முடிக்குரிய இளவரசர் நருஹிற்ரோ…

  Read more
 • இலங்கையில் சூறாவளி அபாயம்!

  இலங்கையின் கிழக்குப் பகுதியில் பலத்த சூறாவளி தாக்கும் அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியுற்ற சூறாவளியான ‘போனி’ சூறாவளி, மட்டக்களப்புக்குக் கிழக்குக் கடலில், ஏறத்தாழ 580 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது, அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு பலத்த சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இச் சூறாவளிஇ மே முதலாம் தேதிவரை வடமேற்கு…

  Read more
 • கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் புனர்நிர்மாண பணிகள்

  கடந்த 21ஆம் தேதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈஸ்ரர் ஞாயிறு தினத்தன்று நடாத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டோரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, நேற்றையதினம் ஆலயத்துக்கு வெளியே விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. தாக்குதல் நடத்தப்பட்ட தினம் முதல் தேவாலயமும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் பாதுகாப்பு பிரிவினரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தேவாலயத்தை பார்வையிடுவதற்கு…

  Read more
 • பொலிஸ் மா அதிபருக்கு கட்டாய விடுமுறை

  பிரதம நீதியரசர், பதில் பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் ஆகியோர் உள்பட, முக்கிய பதவிகளுக்கான புதிய நியமனங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று வழங்கப்பட்டன. பதில் பொலிஸ் மா அதிபராக சந்தன விக்ரமரத்னவும் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதி ஷாந்த கோட்டேகொடவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர பதவியை இராஜினாமா செய்யாத நிலையில், பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்…

  Read more
 • மே தினக் கூட்டங்கள் ரத்து!

  இலங்கையில் பிரதான அரசியல் கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. தாக்குதல் சம்பவங்கள் தொடரலாமென இந்திய தேசிய உளவுத்துறை இலங்கை பாதுகாப்பு தரப்பினை சில தினங்களுக்கு முன்னர் எச்சரித்ததாகவும், அந்த எச்சரிக்கை அரசியல் தலைவர்கள் பலருக்கு வழங்கப்பட்டதையடுத்து இவ்வாறு மே தினக் கூட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்கள்மீது அனர்த்தங்கள் விளைவிக்கப்படலாமென சந்தேகம்கொள்ளும் பாதுகாப்பு தரப்பு, மக்களையும் அந்த கூட்டங்களுக்கு வரும் அரசியல் பிரமுகர்களையும்…

  Read more
 • சஹ்ரானின் மனைவி, மகள் அடையாளம் காணப்பட்டனர்

  தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரானின் மனைவி, மகள் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முனைப் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தினால் படுகாயமடைந்த சிறுமி மொஹமட் சஹ்ரானின் மகள் எனவும், காயமுற்ற பெண் அவரது மனைவி எனவும் பொலிஸ் செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது. இராணுவம் மற்றும் பொலிஸ் படையினரால் கல்முனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில்போது நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்பான வீட்டில் இருந்து துப்பாக்கி சூடு மற்றும் குண்டுவெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்றுக் காலை…

  Read more
 • சாய்ந்தமருது சம்பவத்துக்கும் ஐ.எஸ். பொறுப்பேற்றது

  கல்முனை, சாய்ந்தமருதில் நேற்று முன்தினம் பொலிஸாடன் நடந்த மோதலில் தமது உறுப்பினர்கள் 15 பேர் தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் அறிவித்துள்ளது. இதன்போது, துப்பாக்கியுடன் இருக்கும் சகோதரர் றிழ்வானுடன் ஸஹ்ரான் இருக்கும் படமும் வெளியிடப்பட்டுள்ளது. இச்செய்தியை, ஐ. எஸ் ஆதரவு அமாக் செய்திச் சேவையை மேற்கோள்காட்டி, ஏனைய செய்தி ஊடகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  Read more
 • சஹ்ரான் தீவிரவாத இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர் கைது!

  தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் அடுத்தகட்ட தலைவரெனன சொல்லப்பட்ட நவ்பர் மௌலவியிடம் தீவிர விசாரணைகளை நடாத்தி, தற்கொலைதாரிகளின் முழு விபரங்களை குற்ற புலனாய்வு பிரிவு பெற்றுள்ளது. இதற்கமைய, மட்டக்களப்பு சேயோன் தேவாலயத்தில் மொஹம்மட் நஸார், மொஹம்மட் அஸார், கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இப்ராஹிம் இல்ஹாம் அஹ்மத், தெமட்டகொடை வீட்டில் பாத்திமா ஜெப்ரியா, தெஹிவளையில் அப்துல் லத்தீப் ஜெமீல், கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் அலாவுதீன் அஹ்மத் முவாத், கிங்ஸ்பரி ஹோட்டலில் மொஹம்மட் முபாரக் ஆகியோர் தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளதாக…

  Read more
 • இலங்கையில் அதிரடித் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம் – வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்!

  இலங்கையில் அதிரடித் தாக்குதல்களை நடாத்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக், சிரியா நாடுகளில் நடாத்தப்பட்ட தாக்குதல்களைப் போன்று, இலங்கையிலும் அதிரடித் தாக்குதல்களை நடாத்த தீவிரவாதிகள் திட்டமிடுவதாக, இலங்கை வந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்கள் நடாத்திய புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ட்ரோன் கமராக்களில் கைக்குண்டுகளைப் பொருத்தி, ரிமோட் கட்டுப்பாட்டின் மூலம், ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று தாக்குதல்களை நடத்தவிருந்த திட்டம்/ விசாரணைகளில் அம்பலமாகியுள்தாக பொலிஸ் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முக்கிய பிரமுகர்களை இலக்கு…

  Read more
 • சாய்ந்தமருது: வீடொன்றில் குண்டுவெடிப்பு – 15 பேரின் சடலம் மீட்பு

  கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு இடபெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தையடுத்து அப்பகுதியிலிருந்த வீடொன்றிலிருந்து 15 பேரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரூவன் குணசேகர தெரிவித்தார். கல்முனை போக்குவரத்துப் பிரிவில் சேவை புரியும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் பேரில், குறித்த இல்லத்துக்கு பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் விரைந்தபோது, படையினரை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைத் தொடர்ந்து வீடு பெரும் குண்டுவெடிப்புக்குள்ளானது. குறித்த வீட்டிற்குள் 3 ஆண்களும், 3 பெண்களும், குழுந்தைகள் ஆறுபேருடைய…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ