• ஆலய வழிபாட்டில் சமத்துவம்கோரி சத்தியாக்கிரகம்

  யாழ்ப்பாணம், வட வரணி சிமிழ் கண்ணகை அம்மன் திருக்கோவில் திருவிழா உபயகாரரின் ஏற்பாட்டில், ஆலய வழிபாட்டில் சமத்துவம்கோரி முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்த சத்தியாக் கிரகபோராட்டத்தில், புனித ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் வடபிராந்திய செயலாளர் செல்வம் கதிர்காமநாதன், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் இணைப்பாளர் தனுஜன் என, சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆலயத்தின் கடந்த திருவிழாவின் இரதோற்சவத்தில், இயந்திரம்கொண்டு தேர் இழுத்திருந்த நிலையில், இதனை தமது சமூகத்தினைச் சார்ந்தவர்கள்…

  Read more
 • ஐ. எஸ். தாக்குதல்கள் சாத்தியமில்லை? – அமைச்சர் செனாரத்ன

  இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகள், தாக்குதல்கள் எதனையும் நடத்தாத வகையில், ஒட்டுமொத்த வலையமைப்பையும் முடக்கியிருப்பதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகள் பலவும், இலங்கைமீது விதித்திருக்கின்ற தற்காலிக பயணத்தடை விரைவில் நீக்கப்படும் எனவும், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், அலரிமாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேனாரத்ன தெரிவித்தார். “ஏப்ரல் 21ஆம் தேதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து, இதுவரை எந்தவித தாக்குதலும் இடம்பெறவில்லை. ஒட்டுமொத்த முஸ்லிம் அடிப்படைத் தீவிரவாதத்தை முடக்குவதற்கு எம்மால் முடிந்தது. நாடு முழுவதிலும்…

  Read more
 • ஜ.எஸ். தீவிரவாதிகள் இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை

  இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் 15 பேர் கடல்மார்க்கமாக தப்பிச் சென்றிருப்பதாக வெளியான தகவல்களை இலங்கை கடற்படை முற்றாக மறுத்துள்ளது. இந்திய செய்தி ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டிருந்தாலும், அதில் எந்தவோர் உண்மையும் இல்லை என இலங்கை கடற்படையின் பேச்சாளரான லெப்டினன் கமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்திருக்கிறார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார். ‘இலங்கைக் கடற்படைக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுதொடர்பில் கிடைக்கவில்லை. இத் தகவலானது உறுதிசெய்யப்படாததாகும். இருந்த போதிலும் வெளியிடப்பட்ட…

  Read more
 • பிள்ளையார் ஆலயம் பெயர் மாற்றம்

  பௌத்த பிக்குவால் ‘கணதேவி தேவாலயம்’ என பெயர் மாற்றப்பட்ட நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பெயர்ப்பலகை, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் கட்டளைப்படி, மீண்டும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. குறித்த சர்ச்சைக்குரிய ஆலயம் தொடர்பான வழக்கு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தால் நகர்த்தல் பத்திரம் தாக்கச் செய்யப்பட்டு, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணைகளின்போது, நீதிமன்றம் இம்மாதம் 6ஆம் தேதி வழங்கிய தீர்ப்புக்கு அமைய, கணதேவி தேவாலயம் என எழுதப்பட்டிருந்த…

  Read more
 • நாடெங்கிலும் சங்கிலி மன்னனின் நானூறாண்டு நினைவுகள்

  யாழ்ப்பாணத்தை ஆண்ட இறுதி மன்னான சங்கிலியனின், 400ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ‘சிவசேனை’ அமைப்பின் ஏற்பாட்டில் நாடாளாவிய ரீதியில் உள்ள புனித நீர்நிலைகளில் பிண்டம் இட்டு, தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. நேற்றைய தினம், யாழ்ப்பாணம் முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள, சங்கிலியனின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு, மற்றும் யமுனா ஏரியில் இந்திய புனித நதிகளின் நீரினை கலக்கும் நிகழ்வு ஆகியவற்றுடன், சங்கிலியனின் 400ஆவது நினைவு தின நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன. இந்நிலையில், இன்றைய தினம் நாடாளவிய ரீதியில் உள்ள 14…

  Read more
 • சட்டவிரோத செயல்பாடுகளில் றிசாட் பதியுதீன் – சிந்தக்க மாயாதுன்ன குற்றச்சாட்டு

  சட்டவிரோத செயல்பாடுகள் அனைத்துக்கும் அமைச்சர் றிசாட் பதியுதீன் உள்ளிட்ட குழு உதவி புரிந்துவருவதாக, வடமேல் மாகாணசபையின் முன்னாள் அவைத் தலைவர் சிந்தக்க மாயாதுன்ன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நேற்று நடாத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள சிந்தக்க மாயாதுன்ன; ‘அமைச்சர் றிசாட் பதியுதீனை எனக்கு சிறுவயது முதல் தெரியும். விசேடமாக, 1999ஆம் ஆண்டு முதல் அவர் எனக்கு நன்கு தெரிந்தவர். அந்தக் காலத்தில் நானும் அவரும் துவிச்சக்கர…

  Read more
 • வைத்தியருக்கு எதிராக 16 முறைப்பாடுகள்: விசாரணைக் குழு நியமனம்

  கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகல் வைத்தியர் சேகு சிஹாப்டீனுக்கு எதிராக 16 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே இரண்டு பெண்கள், குறித்த வைத்தியருக்கு எதிராக குருணாகல் வைத்தியசாலை நிர்வாக சபையிடம் முறைப்பாட்டை முன்வைத்திருந்த நிலையில், நேற்று மேலும் 3 பேர் முறைப்பாட்டைப் பதிவுசெய்துள்ளனர். இந்நிலையில் குறித்த வைத்தியர்மீதான முறைப்பாடு இப்போது 16ஆக அதிகரித்துள்ளது. வைத்தியர் சேகு சிஹாப்டீனிடம் சத்திரசிகிச்சை செய்துகொண்டதன் பின்னர், தங்களால் கருத்தரிக்க முடியாமல் போனதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வைத்தியர் சேகு சிஹாப்டீன் சாஃபி, குற்றப் புலனாய்வு…

  Read more
 • அவசரகால சட்டம் விரைவில் நீக்கப்படும் – ஜனாதிபதி

  அவசரகால சட்டம் விரைவில் நீக்கப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. பயங்கரவாத சவாலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் குறித்து இதன்போது தூதுவர்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, தற்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது சதவீதம் இயல்புநிலைக்கு திரும்பியிருப்பதாகவும் உறுதியளித்தார். பாதுகாப்புத் துறையினரும் புலனாய்வுத் துறையினரும் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கைகளே இதற்குக் காரணமாகும்…

  Read more
 • அரசியல் கைதிகள் இப்போது விடுவிக்கப்படமாட்டார்கள் – ஜனாதிபதி

  நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், தமிழ் அரசியல் கைதிகளை எக் காரணம்கொண்டும் விடுவிக்கமுடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு, ஞானசார தேரரையும் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒப்பிடமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காகக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி, விடுதலை செய்துள்ளார். ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யமுடியுமாயின்,…

  Read more
 • பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொட விசாரணை அறிக்கை கையளிப்பு

  பத்திரிகையாளரும், கேலிச்சித்திர ஓவியருமான பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை நிறைவுக்கு வந்துள்ளது. விசாரணை அறிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமை சட்டமா அதிபருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த விசாரணைக்கு இராணுவம் ஒத்துழைக்கவில்லை என்றும், இதனால் பிரகீத் எக்னலிகொட காணாமற்போன விடயத்தில் இராணுவம், புலனாய்வு பிரிவினர் தொடர்பு பட்டுள்ளார்களா என்பது தொடர்பான விபரங்கள் விசாரணை அறிக்கையில் இல்லை என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். பிரபல பத்திரிகையாளரான பிரகீத்…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ