• தெரிவுக்குழு விசாரணைக்கு உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அழைப்பு

    ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைசெய்ய அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு, எதிர்வரும் 29ஆம் தேதி, இச் சம்பவங்கள் தொடர்பான உயர்மட்ட அதிகாரிகளை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் இளங்கோன், இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க, பாதுகாப்பு தளபதி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்தின அகியோரையே எதிர்வரும் 29ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, மற்றும்…

    Read more
  • அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடக்கூடாது – ஜனாதிபதி

    அமெரிக்காவுடன் எந்தவொரு பாதுகாப்பு அல்லது பாதுகாப்புடன் தொடர்புடைய உடன்பாடுகளிலும் கையெழுத்திடக்கூடாது என ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சராக தான் பதவியில் இருக்கும் நிலையில், பாதுகாப்புடன் தொடர்புடைய எந்தவோர் உடன்பாட்டைச்செய்துகொள்வதற்கும் தனது அநுமதி தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவிலிருந்து கொழும்பு திரும்பிய பின்னர், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம் இதுகுறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வாஷிங்டனில் தங்கியிருந்த திலக் மாரப்பன, அமெரிக்கா – இலங்கை தொடர்பிலான…

    Read more
  • தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்க விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு

    இலங்கையில் நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பில் கண்டறிய விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவு நியமிக்கப்பட்டுள்ளது. இவ் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி நியமிக்கப்பட்டுள்ளார். குழுவில் இணைந்து பணியாற்ற, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஆசு மாரசிங்க, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, காவிந்த ஜயவர்தன, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்….

    Read more
  • இலங்கை பௌத்த நாடல்ல – தம்பர அமில தேரர்

    இது பௌத்த நாடு அல்ல என்ற மங்களவின் கருத்து சரியானதே என, பேராசிரியர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு பௌத்த நாடு அல்லவெனவும், அது இலங்கையர்கள் அனைவருக்குமான நாடு எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்து உண்மையானது என பேராசிரியர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையற்றும்போதே தேரர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், முஸ்லிம், கத்தோலிக்கர், இந்து ஆகிய அனைவரும் அவசரமாக முன்வரவேண்டும், அவர்கள் தங்களுக்குரிய அடையாளங்கள்…

    Read more
  • சிறையிலிருந்து ஞானசார தேரர் வெளியேறினார்; ஜனாதிபதிமீது சட்ட நடவடிக்கை?

    பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் இன்று சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக தண்டனை அனுபவித்தவந்த ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில், நேற்றையதினமே விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஆனாலும், அவரது விடுதலைக்கான ஆவணங்கள் சரிசெய்யப்பட்ட பின்னர், இன்று பிற்பகல் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அவர் வெளியேறினார். ஞானசாரதேரரின் விடுதலையின்போது, அவரை வரவேற்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பு பிக்குகள் உள்பட, பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். எனினும், ஞானசார தேரர் மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி,…

    Read more
  • இலங்கைக்கு ஐ. நா. கண்காணிப்புக் குழு – விக்னேஸ்வரன் கோரிக்கை

    வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ. நா. மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவொன்றை இலங்கையில் அமைக்கவேண்டும் என, வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஐ. நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸுக்கு கடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளார். வடக்கு கிழக்கில் பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டு, தமிழர் நிலங்களில் இராணுவ அநுசரணைகளுடன் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும், பௌத்த மேலாதிக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்துவதற்கான…

    Read more
  • ராஜீவ்காந்தி கொலை வழக்கு: சட்ட நிபுணர் ஆலோசனையில் ஆளுநர்

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அநுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை குறித்து, சட்ட நிபுணர்களின் முழுமையான ஆலோசனையின் பின்னர் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அநுபவித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களின் விடுதலைக்குறித்து தமிழக அரசு, அமைச்சரவையைக் கூட்டி தீர்மானித்திருந்தது. குறித்த தீர்மானத்தின்படி இவர்களின் விடுதலையை தீர்மானிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டது. இவர்கள்…

    Read more
  • ஞானசாரதேரர் விடுதலை

    நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த ஞானசாரதேரர்/ இன்று மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளார். வெசாக் தினத்தன்று, பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசாரதேரரை சிறையில் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமன்னிப்பின் அடிப்படையில் அவரை விடுதலை செய்வதாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில், ஞானசாரதேரர் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

    Read more
  • ‘தவ்ஹீத் ஜமாத்’ முகாம்களில் ஆயிரம்பேர் பயிற்சி!

    இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பில் ஆயிரம் பேர் பயிற்சிபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய உறுப்பினர்கள் குறித்த பொலிஸ் விசாரணையில் இதுதொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய தவ்ஹீத் ஜமாத் முக்கிய உறுப்பினர் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட குருநாகல் வைத்தியசாலை ஊழியரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது இந்த தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ‘என்.ரி.ஜே’ எனப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஸஹ்ரான் மற்றும் பிரதேச தலைவர்கள்…

    Read more
  • கொழும்பு குண்டு தாக்குதல்களில் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள்

    இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் நடாத்திய தற்கொலைத் தாக்குதல்களின்போது, ‘சாத்தானின் தாய்’ என்னும் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்தமாதம் நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் தற்கொலை தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. இதன்போது, 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்நிலையில், தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இலங்கையிலேயே ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நிபுணர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டதாக பொலிஸாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் ஐ.எஸ் அமைப்பால் தயாரிக்கப்பட்ட ‘சாத்தானின் தாய்’…

    Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ