• ஓரிரு தினங்களில் குண்டு வெடிக்கலாம் – மஹிந்த ராஜபக்ஷ

    நாளை அல்லது நாளை மறுதினம் குண்டுகள் வெடிக்கலாம் என தனக்கு அறிவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின்மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், நாளை அல்லது மறுதினம் குண்டுகள் வெடிக்கலாம் எனவும் தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள செய்தி ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. ‘பாடசாலைகளில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும், பயங்கரவாதத்தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் தகவல் கிடைத்துள்ளது’ என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டதாக…

    Read more
  • நீர்கொழும்பில் ஊரடங்கு

    உடனடியாக அமுலாகும் வகையில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று மாலை நீர்கொழும்பு பலகத்துறை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே நாளை காலை 7 மணிவரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, முஸ்லிம்களுக்குச் சொந்தமான சில வாகனங்கள் எரியூட்டப்பட்டதாகவும், அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் கடந்த 21ஆம் தேதி இடம்பெற்ற தொடர்குண்டுத் தாக்குதலையடுத்து, நாடளாவிய ரீதியில்…

    Read more
  • தமிழ் இளைஞர்கள் எழுச்சிகொள்ள இடமளிக்கவேண்டாம் – விக்னேஸ்வரன்

    இராணுவ அடக்குமுறைகளை மேற்கொண்டு, மீண்டும் தமிழ் இளைஞர்கள் எழுச்சிகொள்ள இடமளித்துவிடவேண்டாம் என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அத்துடன், கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்குமாறும், எதிர்வரும் 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சுமுகமான முறையில் நடைபெறுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துமாறும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கோரியுள்ளார். அக் கடிதத்தில், அவசரகால நிலைமை கொண்டுவரப்பட்டதன்…

    Read more
  • சஹரான் இறக்கவில்லை?

    ஷங்ரி-லா ஹோட்டல் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு, தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹரான் உயிரிழக்கவில்லை என ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சஹரான் உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அரச தகவல் ஊடகம், புலனாய்வுத் துறை ஆகியவற்றை மேற்கோள்காட்டி இன்று இச் செய்தி வெளியாகியுள்ளது . தற்கொலைதாரிகளுடன் சஹரான் அங்கு வந்திருந்தாலும், அவர் தானே தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடாமல், தூரத்திலிருந்து குண்டு ஒன்றை வெடிக்கச் செய்திருக்கலாமென, பாதுகாப்பு தரப்பு சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைதாரியின் உடல்…

    Read more
  • யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் – செயலாளருக்கு விளக்கமறியல்

    யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை இம்மாதம் 16ஆம் தேதிவரை விளக்கமறியலில்வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டபோது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், மாவீரர்களின் ஒளிப்படங்கள் மற்றும் தமிழீழ வரைபடம் என்பன கைப்பற்றப்பட்டன. அதனையடுத்து, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம். திவாகரன், செயலாளர் எஸ். கபில்ராஜ் ஆகிய இருவரும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு,…

    Read more
  • இந்தியாவிடம் இலங்கை உதவி எதனையும் கோரவில்லை

    இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உதவி கோரினால், முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என இந்தியா தெரிவித்துள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை இதுவரையிலும் உத்தியோகப்பூர்வமாக ஒத்துழைப்புகள் எதனையும் கோரவில்லை என, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவிஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதல், இலங்கைக்கான ஒத்துழைப்புக்கள் குறித்தும், தமிழ் நாட்டிலும்…

    Read more
  • தீவிரவாதத்தை ஒழிக்க புதிய வியூகம் வேண்டும் – சரத் பொன்சேகா

    ‘ஈஸ்டர்’ குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பழிவாங்கும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கையின் இறுதிக் கட்ட போரின்போது இராணுவ தளபதியாக கடமையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க, திட்டம் வகுத்து செயல்படவேண்டும் என முன்னாள் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த தலைமை பீடங்களான மல்வத மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்கு விஜயம் செய்த பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, உயிர்த்த ஞாயிறு படுகொலைகளையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றை தடுக்க மேற்கொள்ள…

    Read more
  • தற்கொலை குண்டுதாரிகளின் விபரங்கள்

    உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகளின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதன்படி, எட்டு இடங்களில் இடம்பெற்ற 9 குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்த தீவிரவாதிகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, குறித்த நபர்களின் டீ.என்.ஏ. பரிசோதனைகளும் நடைபெற்றுவருகின்றன. அத்துடன், குறித்த தீவிரவாதிகளின் சகோதர, சகோதரிகள் மற்றும் மனைவிமார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கையில் தொடர்ந்தும் தீவிர தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ