• இலங்கை – தாய்லாந்து சுற்றுலா ஒப்பந்தம்

    சுற்றுலாத் துறையை அபிவிருத்திசெய்யும் வகையில், இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிகையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கும் தாய்லாந்து சுற்றுலாத்துறை அதிகாரிக்கும் இடையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது. இலங்கையிலிருந்து தாய்லாந்துக்கு செல்லும் பௌத்த சுற்றுலா பயணிகளுக்கு அங்குள்ள பௌத்த புனித ஸ்தலங்களை பார்வையிட வசதிகள் செய்துகொடுப்பதற்கும், தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு வரும் பௌத்த சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள பௌத்த புனித ஸ்தலங்களை பார்வையிடவும் வசதிகள் செய்துகொடுப்பது…

    Read more
  • மருத்துவர் ஷாபியின் விசாரணை நியாயமற்றது – புலனாய்வுத் துறை

    குருணாகல் மருத்துவர் மொஹமட் ஷாபியை, பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் தடுத்துவைத்து விசாரிப்பது நியாயமாக அமையாது என, குற்ற புலனாய்வு பிரிவு அறிவிக்கவுள்ளது. குருணாகல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, தற்போது சி.ஐ.டி தலைமையகமான நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று மருத்துவர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபியை 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் தடுத்துவைத்து விசாரிப்பது நியாயமாக அமையாது என, சி.ஐ.டியினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ஷாந்த கோடேகொடவுக்கு அறிவிக்க…

    Read more
  • மரண தண்டனைக்கு ஆதரவு வழங்க முடியாது – ரணில்

    எந்தக் காரணத்துக்காகவும் மரண தண்டனையை அமுல்படுத்த ஆதரவு வழங்கமுடியாது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளில் உயிர்க் கொலைகளுக்கு இடம் கிடையாது எனவும், எந்தக் காரணத்துக்காகவும், மரண தண்டனையை அமுல்படுத்த ஆதரவு வழங்க முடியாது எனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இன்று, மொனராகலை மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். அரசியலமைப்பில் மரண தண்டனை தொடர்பான சட்ட ஏற்பாடுகள் காணப்பட்டாலும், வரலாற்றில் எந்த தலைவர்களும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. 2016இல்,…

    Read more
  • ஆயுதம் ஏந்தி போராடினால்தான் அரசியல் தீர்வா? – சம்பந்தன்

    ஆயுதம் ஏந்தி போராடினால்தான் அரசியல் தீர்வு தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கப்படுமா என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரப்பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்காமல் காலம்கடத்துவதை அநுமதிக்க முடியாது எனவும், அனுமதிக்க மாட்டோம் எனவும், விரைவில் முடிவு காண்போம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இலங்கைத்…

    Read more
  • சஹ்ரானுடனான புகைப்படம் பொய்யானது – ரிசாட் சாட்சியம்

    சஹ்ரானை சந்தித்துள்ளதாக தெரிவித்து, செய்தி ஊடகங்களில் வெளியான புகைப்படத்திலிருப்பது பயங்கரவாதி சஹ்ரான் அல்லவென முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று சாட்சியமளித்தார். கேள்விகளுக்கு பதில் அளித்த ரிஷாத் பதியுதீன், பாராளுமன்ற தெரிவுக்குழுவினை அமைக்கவேண்டும் என்று நான் பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டவன். எனக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்களை சுமத்தி, நம்பிக்கையில்லா…

    Read more
  • மரண தண்டனை: எதிர்கால சந்ததியின் வாழ்வு -ஜனாதிபதி

    பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை காவுகொள்ளும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் முகமாகவும், தேசத்தின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை பாதுகாப்பதற்காகவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை லங்காபுர விஜித்த மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில், குற்றவாளிகளாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு நான் கையெழுத்திட்டுள்ளேன். அதற்கு எதிராக…

    Read more
  • மரண தண்டனைக்கு எதிராக ‘ரிட்’ மனு

    மரண தண்டனையை அமுல் செய்து, எந்த ஒரு நபரையும் தூக்கிட்டு கொல்வதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்துள்ளார். குறித்த மனு அவசர மனுவாக ஆராயப்பட்ட நிலையில், மீண்டும் அம்மனுவை ஜூலை 2ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் வார இறுதிவரை, தனது பொறுப்பிலிருக்கும் எந்தவொரு கைதியையும் தூக்கிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதில்லை என,…

    Read more
  • கல்முனை பிரதேச செயலக விவகாரம்: அமைச்சரவை தீர்மானம்

    கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பான பிரச்னைகளை ஒருமாத காலத்துள் தீர்த்துவைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது. இதன்போது, 1989ஆம் ஆண்டிலிருந்து இந்த பிரச்னை நீடித்து வருவதாக உள்நாட்டு மற்றும் உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். இதையடுத்து, உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துவது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, இந்த பிரச்னையை…

    Read more
  • மரண தண்டனை: சர்வதேச மன்னிப்புச் சபை விசனம்

    மரண தண்டனை விடயத்தில், இலங்கை எதிர்மாறாக செயல்படுகிறது என, சர்வதேச மன்னிப்புச் சபை விசனம் வெளியிட்டுள்ளது. போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன ஒப்புதல் வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது என, சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகள் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் தாம் கடைப்பிடிக்கும் கொள்கைகளில் மறுசீரமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்று உணரத் தொடங்கியிருப்பதுடன், மரண தண்டனையை…

    Read more
  • பயங்கரவாத தாக்குதல் தொடரலாம் – இராணுவ தளபதி

    தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான பயங்கரவாதம் முடிந்துவிட்டது என்று தம்மால் கூறமுடியாது என, இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான கைது நடவடிக்கைகள் தொடர்பில், அதிகாரத்தில் உள்ள எந்தவொரு நபரும் அழுத்தங்கள் எதனையும் பிரயோக்கவில்லை எனவும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடாத்த நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். “யாரும்…

    Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ