• கன்னியா விவகாரம்: விகாரை அமைப்பதற்கு நீதிமன்றம் தடை

  திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயத்துக்கு சொந்தமான ஆதனங்களை தர்மகர்த்தா சபையே தொடர்ந்து நிர்வகிக்க திருகோணமலை மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன், கன்னியா பிள்ளையார் ஆலயத்தில் விகாரை அமைக்கும் பணிக்கும் நீதிமன்றினால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயம், அதன் ஆதனங்களின் தர்மகர்த்தா சபையினால், திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் தேதி தாக்கல்செய்யப்பட்டிருந்த எழுத்தாணை மனுமீதான விசாரணை இன்று இடம்பெற்றது. மனுதார் சார்பில்…

  Read more
 • மனித குலம் முழுமைக்குமான சமாதானம்

  ‘மனிதனின் இந்த ஓர் அடி, மனுக் குலத்தின் அசுர பாய்ச்சல்.’ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாள், பூமிக் கிரகத்திலிருந்து, 2 லட்சத்து 40 ஆயிரம் மைல் தொலைவில் ஒலித்த மனிதக் குரல் இது. ‘ஈகிள்’ விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த கமெரா, மனிதனின் அந்த காலடியையும் அவனின் அந்தக் குரலையும் பூமிக்கனுப்ப, அந்த வரலாற்றுக் கணத்தை 650 மில்லியன் மக்கள் தத்தம் உணர்வுகளோடு கண்டார்கள்; கேட்டார்கள். சந்திரனில், நீல் ஆம்ஸ்ரோங் கால் பதித்த நாள். 102 மணி (4 நாள்கள்)…

  Read more
 • யாழ்ப்பாணம் – இந்தியா விமான சேவை விரைவில்

  யாழ்ப்பாணத்திலிருந்து இந்திய நகரங்களுக்கிடையிலான விமான சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து நான்கு இந்திய நகரங்களுக்கான விமான சேவையை விரைவில் தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக, இந்திய செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பெங்களூரு, கொச்சி, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி விமான சேவையை தொடங்கவுள்ளதாக சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதற்காக இந்தியா 300 மில்லியன் ரூபா…

  Read more
 • தமிழர் உரிமைப் பிரச்னைகளில் இனி தலையிட மாட்டேன் – மனோ கணேசன்

  அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர, வடகிழக்கின் உரிமை பிரச்னைகளில் இனி தலையிடமாட்டேன் எனவும், உரிமைக் கோரிக்கைகள் தொடர்பில் தனது தலையீட்டை வடகிழக்கின் மக்கள் பிரதிநிதிகள் எழுத்து மூலமாக கோருவார்களாயின் அவைபற்றி பரிசீலிப்பேன் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, செய்தி ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அமைச்சரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்திருக்கிறது. “நேற்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய சில கட்சிகளின் தமிழ்…

  Read more
 • இந்து ஆலயங்களில் மிருகபலியிடலாம் – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

  இலங்கையில் இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு, வேள்வி நடாத்துவதற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தடையைத் தள்ளுபடிசெய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேல் நீதிமன்றம் வழங்கியிருந்த இத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மேன்முறையீட்டாளரான கவுணவத்தை நரசிம்ம வைரவர் ஆலய நிர்வாகத்துக்கு வழக்குச் செலவை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனுவை சிரேஷ்ட சட்டத்தரணி கே. வி. எஸ். கணேசராஜா, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார். மனுவின் எதிர்மனுதாரர்களாக…

  Read more
 • கன்னியா விவகாரம்: தொல்பொருள் ஆய்வு திணைக்களத்தில் தமிழர் நியமனத்துக்கு ஜனாதிபதி பணிப்பு

  தொல்பொருள் ஆய்வு திணைக்களத்தின் ஆராய்ச்சி சபையில் 5 மேலதிக தமிழ் உறுப்பினர்களை இணைப்பதற்கான விசேட உத்தரவொன்றை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார். கன்னியா தமிழர் நிலப்பகுதி அபகரிப்பது குறித்து இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில், கன்னியாவில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சர்ச்சை குறித்த முழு விபரத்தையும், அது தமிழர் பாரம்பரிய பூமி என்பதனையும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் மனோ கணேசன், தொல்பொருள் ஆராய்ச்சி சபையில் இருக்கும் 32 தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும்…

  Read more
 • மரண தண்டனை ஒழிப்பு: வர்த்தமானி வெளியானது

  மரணதண்டனையை இல்லாதொழிக்கும் சட்டத்தை கொண்டுவரும் தனிநபர் பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. பாராளுமன்றத்தில் மரணதண்டனைக்கு எதிரான சட்டம் இயற்றப்படும் அறிவித்தல் வந்தால், அன்றைய தினம் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்படுமென ஜனாதிபதி முன்னர் கூறியிருந்த நிலையில், குறித்த விசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

  Read more
 • ரஞ்சன் ராமநாயக்க விவகாரம்: ‘சிறிகோத்தா’வுக்கு பிக்குகள் படையெடுப்பு?

  புத்த சாசனத்துக்கும், பௌத்த பிக்குமார்களுக்கும் அகௌரவத்தை ஏற்படுத்தும் வகையில் காணொளியையும் கருத்தையும் வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை கைதுசெய்வதற்கு பொலிஸ் தலைமையகத்துக்கு தென்னிலங்கையின் பௌத்த அமைப்புக்கள் இரண்டு நாள் காலக்கெடுவை விதித்திருக்கின்றன. அடுத்த இரண்டு நாள்களுள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை கைதுசெய்யாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமாக ‘சிறிகோத்தா’வை ஆயிரக்கணக்கான பிக்குமார்களை அழைத்துவந்து முற்றுகையிடுவோம் என்றும் அந்த பௌத்த அமைப்புக்கள் பொலிஸார் முன்னிலையில் எச்சரிக்கை விடுத்துள்ளன. நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி…

  Read more
 • கன்னியாவில் போராட்டகாரர்மீது சுடுதண்ணீர் வீச்சு!

  திருகோணமலையில் தமிழ் மக்களின் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் கன்னியா வெந்நீருற்று பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு, அவ்விடத்தை பௌத்த மயமாக்கும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்போரட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி. யோகேஸ்வரன், தென்கையிலை ஆதீனம், சின்மயா மிசன் சுவாமிகள் மற்றும் தமிழ் அரசியல் கட்சியினர், இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, கன்னியா போராட்டத்துக்கு நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக போராட்டம் மேற்கொள்ளப்பட்டவர்களுக்கு…

  Read more
 • கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டி-2019: யாருக்கு உரிய கிண்ணம் இது?

  அரவிந்தன் மார்ட்டின் கப்டில் மைதானத்தில் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார். அவர் கண்களில் கண்ணீர் வழிகிறது. அவரது அணியினர் அவரைக் கட்டியணைத்து ஆறுதல்படுத்துகிறார்கள். அதே மைதானத்தில் வேறோர் இடத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார். அவர் கண்களில் கண்ணீர் வழிகிறது. அவருடைய அணியினர் அவரைக் கட்டியணைத்துப் பாராட்டுகிறார்கள். இரண்டு கண்ணீருக்கும் இடையில் உள்ள வித்தியாசம், முன்னையது சோகக் கண்ணீர்; மற்றையது ஆனந்தக் கண்ணீர். வெற்றிக்குத் தேவையான ஓட்டங்களை எடுக்க ஓடிய கப்டில் கோட்டைத் தொடுவதற்குள் இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர்…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ