• செவ்வாய்க்கு விண்கலம் – சீனா திட்டம்!

  செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக அடுத்த ஆண்டு ஜூலை மாதமளவில் விண்கலம் ஒன்றினை அனுப்புவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த விண்கலம் மூலம் செவ்வாய்க் கிரகத்தின் தோற்றம், புவியியல் அமைப்பு, காந்த சக்தி உள்ளிட்டவை தொடர்பில் ஆய்வ செய்யமுடியும் என தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம், செவ்வாய்க் கிரகம்உருவான விதம், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை எதிர்காலத்தில் அறிந்துகொள்ளமுடியும். அத்தோடு, செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழும் அறிகுறி உள்ளதா? மனிதர்கள் வாழும் அளவுக்கு அங்கு பிராணவாயு உள்ளதா? என்பனபோன்ற விடயங்களையும் அறிந்துகொள்ள…

  Read more
 • ஹேமசிறி, பூஜித பிணையில் விடுதலை

  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இருவரும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கு கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரட்ண அனுமதி வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், அலட்சியமாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் இருவரும் கடந்த 2ஆம் தேதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

  Read more
 • ‘கூட்டமைப்புக்கு தலைமைத்துவ காய்ச்சல்’ -சி. வி. கே. சிவஞானம்

  ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனால் கொண்டுவரப்பட்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ. வி. .விக்கினேஸ்வரன், மீண்டும் சம்பந்தனோடு பேசி, கூட்டமைப்பில் மீள இணைவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அது சாத்தியமாகுமா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஏனெனில், எங்கள் இனத்தின் ‘தலைமைத்துவ வித்துவக் காய்ச்சல்’ இதற்கு வாய்ப்பளிக்காது என்றே நம்புகின்றேன்.’ இவ்வாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ. வி. கே….

  Read more
 • அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: மீண்டும் விவாதம்

  அரசாங்கத்து;ககு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீண்டும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இம்மாதம் 10, 11ஆம் தேதிகளில் இது மீண்டும் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களைத் தடுப்பதற்கும், நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கு தவறியமை மற்றும் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் நடத்தப்பட்ட இன ரீதியான வன்முறைகளைத் தடுக்கத் தவறியமை ஆகிய காரணங்களை முன்வைத்து, மக்கள் விடுதலை முன்னணி இந்த நம்பிக்கையில்லா பிரேரணையைச் சமர்ப்பித்துள்ளது. மேலும், குறித்த பிரேரணையை வெற்றிகொள்வது தொடர்பில் ஆளும்…

  Read more
 • பலாலி சர்வதேச விமான நிலையம்

  யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதன்போது, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பிரதம விருந்தினராக கலந்துகொண்டு, புனரமைப்பு ஆரம்பம் தொடர்பில் அமைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்துவைத்ததுடன், புனரமைப்பு பணிகளையும் ஆரம்பித்து வைத்தார். இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பலாலி விமான நிலையத்தின் இந்த அபிவிருத்தி பணிகள் இடம்பெறுகின்றன. நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் விமான சேவைகள்…

  Read more
 • மரண தண்டனைக்கு இடைக்கால தடை

  மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடைவிதித்து, உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 4 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதாக அண்மையில் செய்தி ஊடக பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அறிவித்திருந்தார். ஜனாதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனு மீதான வழக்கின் விசாரணை, மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின் பின்னர்,…

  Read more
 • மாணவனின் தந்தையைச் சுட்ட சிப்பாய்!

  அக்மீமன, உபானந்த வித்தியாலத்துக்குள் நுழையமுற்பட்ட நபர்மீது பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவச் சிப்பாய் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில், ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் தந்தையே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. குறித்த மாணவர் சுகவீனமுற்றிருப்பதாக, பாடசாலையிலிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பையடுத்து அப்பாடசாலைக்குச் சென்ற தந்தை, அங்கு உட்பிரவேசிக்க முயன்றபோது, படைச்சிப்பாய் அவருடன் தர்க்கம் புரிந்துள்ளார். எனினும், உயிரிழந்த…

  Read more
 • டாக்டர் ஷாபி தடுப்புக்காவல் தவறானது – புலனாய்வு பிரிவு

  தீவிரவாத செயல்பாடுகளில் தொடர்புகள் எதுவும் இல்லாத நிலையில், குருநாகல் டாக்டர் ஷாபியை தொடர்ந்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைத்திருப்பது முறையல்லவென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பாதுகாப்பமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டாக்டர் ஷாபி 1978ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் 9.1 பிரிவின்கீழ் கடந்த மே 27ஆம் தேதி முதல் 90 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர்மீது தீவிரவாத விடயங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இல்லாதபடியால், அவர் மீதான தடுப்புக்காவலை இரத்துச் செய்வதே…

  Read more
 • ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர கைது!

  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் குற்ற புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம், குற்றப் புலனாய்வுத்துறையினர் வைத்தியசாலையில்வைத்து…

  Read more
 • அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு

  2019ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு அமைய, அரச ஊழியர்களுக்கான சம்பளங்களை இன்று முதல் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், சுமார் 11 இலட்சம் அரச ஊழியர்களுக்கு இரண்டாயிரத்து 500 ரூபா இடைக்கால கொடுப்பனவு அவர்களின் சம்பளங்களுடன் மேலதிகமாக சேர்க்கப்படும் எனவும், பாதுகாப்பு தரப்பினருக்கான கொடுப்பனவுகள் மேலும் அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய கொடுப்பனவில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, விசேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் சுமார் நான்காயிரம் கோடி…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ