• அரோகரா கோஷத்துடன் நல்லூர் கந்தனின் இரதோற்சவம்

  இலட்சக்கணக்கான அடியவர்களின் ‘அரோகரா’ கோஷத்துடன், யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தப் பெருமானின் தேர்த்திருவிழா இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் நான்கு திசைகளிலும் குழுமியிருந்த இலட்சக் கணக்கான அடியவர்களின் அரோகரா கோஷத்துடன் நல்லூர்க் கந்தன் தேரில் ஆரோகணித்தார். பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆடியமாவசைக்கு பின்னர்வரும் ஆறாம் நாளில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து மஹோற்சவங்கள் காலை, மாலை வேளைகளில் சிறப்புற இடம்பெற்றுவந்த நிலையில், நேற்றைய தினம் சப்பரத்திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை…

  Read more
 • பாராளுமன்ற இடைநிறுத்தம்: பொறிஸ் விஷப் பரீட்சை?

  -யோகி பிரிட்டனில், பாராளுமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்திவைக்க, பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை, பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் ஆலோசனையில், மகாராணி நேற்று இதற்கான சம்மதத்தைத் தெரிவித்திருந்தார். பாராளுமன்ற நடவடிக்கைளை நடைபெறவிடாது இடைநிறுத்திய பிரதமரது இச் செயல், பல அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘பிறெக்சிற்’ என்ற, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்தேயாகவேண்டும் என்ற பிடிவாத போக்குக்கு பாராளுமன்றத்தில் எழக்கூடிய எதிர்ப்புக்களிலிருந்து தப்புவதற்காக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மேற்கொண்ட குறுக்குவழியே பாராளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்தும் இந்…

  Read more
 • பாதுகாப்புக்கு அச்சுறுத்தலின்றி, வடக்கில் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு

  தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், வடக்கில் மேலும் விடுவிக்கக்கூடிய காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு உரிய துறைகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். யுத்தம் நிறைவடைந்த தருணத்தில் வடக்கில் பாதுகாப்பு துறையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகளை மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக கடந்த ஐந்து வருட காலமாக அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். முப்படையினருடன் இணைந்து, வடக்கிலுள்ள காணிகளை பார்வையிட்டு, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு விடுவிக்கக்கூடிய அனைத்து…

  Read more
 • பல்லாயிரக்கணக்கான அடியவர் சூழ நல்லூர் சப்பர திருவிழா

  வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் சப்பரத் திருவிழா இன்று நடைபெற்றது. நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 25 தினங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கந்தப் பெருமானின் மாம்பழத் திருவிழா நேற்று நடைபெற்று, 23ஆம் நாளான இன்று சப்பரத் திருவிழா பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா நாளை காலை 7 மணிக்கும், தீர்த்தத் திருவிழா மறுநாள் வெள்ளிக்கிழமையும்…

  Read more
 • வங்கதேசத்தில் ரொஹிங்கியா முஸ்லிம்கள் பேரணி

  வங்கதேசத்தில் ரொஹிங்கியா முஸ்லிம்கள், பேரணி ஒன்றை நடாத்தியுள்ளனர். மியான்மரில் ஏற்பட்ட வன்முறையை நினைவுகூரும் வகையில், வங்கதேச முகாம்களில் உள்ள இரண்டு லட்சம் ரொஹிங்கியாக்கள் நேற்று இப் பேரணியில் ஈடுபட்டனர். வன்முறை காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மியன்மரிலிருந்து 7 லட்சத்து 40 ஆயிரம் ரொஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற நேரிட்டது. அவர்கள் இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் அகதிகளாக சென்றனர். இந் நிலையில், சொந்த நாட்டைவிட்டு வெளியேறியதை நினைவுகூரும் வகையிலும், தாய்நாட்டுக்கு மீண்டும் அரசு அழைத்துக் கொள்ளாததை கண்டித்தும்…

  Read more
 • அமேசன் காட்டுத் தீ: பாதிப்புற்ற நாடுகளுக்கு ஜீ-7 நாடுகள் உதவி

  உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசனில் கடந்த சில நாள்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. அமேசன் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில் இருந்தாலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசூவெலா உள்ளிட்ட 8 நாடுகளில் இந்த காடுகளின் பகுதிகள் காணப்படுகின்றன. காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுமாறு உலக நாடுகளுக்கு கொலம்பிய அரசாங்கம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ ஜீ-7 நாடுகள் முன்வந்துள்ளன. இதேவேளை, தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலுள்ள…

  Read more
 • ஒக்டோபர் 15 முதல் பலாலி – இந்தியா விமான சேவை

  ஒக்ரோபர் 15ஆம் தேதி முதல் இந்தியாவிலிருந்து பலாலிக்கு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்ரெம்பர் இறுதி முதல் சேவைகள் ஒத்திகை பார்க்கப்படுமெனவும் தெரியவருகிறது . பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுபற்றி இன்று கலந்துரையாடினர். வடக்கில் இதுதொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கூட்டமைப்பினருக்கு பிரதமர் விளக்கினார். விமான சேவையை தொடங்குவது தொடர்பான 30 வீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் முடிந்துவிட்டதாக…

  Read more
 • அமேசன் காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதில் பூர்வ குடியினர்

  அமேசன் காடுகளில், வரலாற்றில் இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சிக்கு உதவ, ஆயுதப் படைகளை அனுப்புவதற்கு பிரேசில் ஜனாதிபதி போல் சாயர் போல்சனாரூ உத்தரவிட்டுள்ளார். இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வகுடிகள் வாழும் இடங்கள், குடியிருப்புப் பகுதிகளை ஒட்டியுள்ள காடுகள் ஆகிய இடங்களுக்கு படையினர் அனுப்பப்படுகின்றனர். அமேசன் தீ கட்டுப்படுத்தப்படும்வரை, பிரேசிலுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமுலாக்கப் போவதில்லை என, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து நாடுகள் கூறியுள்ளன. பிரேசிலிலிருந்து, மாட்டிறைச்சி இறக்குமதி…

  Read more
 • இந்துக்கள் வேடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்? தமிழகத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு

  தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக இந்திய மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருப்பதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்ள்ளது. வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இத் தாக்குதலை நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதிகளுடன் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில்…

  Read more
 • எதிர்ப்புகளுடன், யாழ்ப்பாணத்தில் காணாமல்போனோருக்கான அலுவலகம்

  காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இரகசியமான முறையில், அவசரமாக இன்று அதிகாலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கொக்குவில் ஆடியபாதம் வீதியில் திறந்துவைக்கப்பட்ட குறித்த அலுவலகம், சிறிது நேரத்திலேயே பூட்டப்பட்டுள்ளது. காணமல்போனோர் அலுவலகம், யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அலுவலகத்தை இங்கு திறக்க வேண்டாமென்று கேட்டுக்கொண்ட காணாமல் போனவர்களின் உறவுகளின் அமைப்புக்கள், அவ்வாறு திறக்க முற்பட்டால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில், சபாநாயகர்…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ