• பப்புவா சிறையில் 250 கைதிகள் தப்பி ஓட்டம்

    இந்தோனேஷிய அரசுக்கு எதிரான போராட்டத்தில், பப்புவா சிறை சூறையாடலில் 250 கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் பப்புவா பிராந்தியம் அமைந்துள்ளது. முன்னர், டச்சு காலனி ஆதிக்கத்தின்கீழ் இருந்துவந்த இப் பிராந்தியம், 1963ஆம் ஆண்டு விடுதலை பெற்று, தன்னை ஒரு சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால், அண்டை நாடான இந்தோனேஷியா, எண்ணெய் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட, இயற்கை வளங்கள் மிகுந்த பப்புவா பிராந்தியத்தை தன்னோடு இணைத்துக்கொண்டது. அதேவேளை, பப்புவா பிராந்தியத்துக்கு…

    Read more
  • அமேசன் காடுகளில் பெரும் தீ

    பிரேசில் நாட்டின் அமேசன் காடுகளில் தீ ஏற்பட்டுள்ள நிலையில், மனாஸ் நகரில் சுற்றுச்சூழல் நெருக்கடி நிலையும், பெரு நகரில் சுற்றுச்சூழல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அமேசன் காடுகள் 5.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட, உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டல காடாகும். புவி வெப்பமடைதலை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசன் மழை காடுகளில், வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிக தடவை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம்…

    Read more
  • ‘எனது அமெரிக்க குடியுரிமை சட்டரீதியாக இரத்து’ – கோட்டாபய

    அமெரிக்க குடியுரிமையை சட்ட ரீதியாக இரத்து செய்துள்ளதாக, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அமெரிக்கக் குடியுரிமையை இரத்து செய்யவில்லை என பல்வேறு தரப்பினரும் கூறிவந்தாலும், அது முற்றிலும் பொய்யான விடயம் எனவும், அமெரிக்க குடியுரிமையை சட்டரீதியாக இரத்துச் செய்துள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். நேற்று, கொழும்பு இராஜகிரியவிலுள்ள பொதுஜன பெரமுன தலைமையகத்தில் மாகாண சபை உறுப்பினர்களின் சந்திப்பு, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும்…

    Read more
  • எந்த வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றவில்லை – யசூசி அகாசியிடம் சம்பந்தன்

    இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லையென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜப்பானின் இராஜதந்திரி யசூசி அகாசி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிபோதே, சம்பந்தன் இவ்வாறு கூறினார். “இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் சர்வதேச சமூகம் பாரிய பங்களிப்பை அரசுக்கு வழங்கியிருந்தது. எனினும், இனப்பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வை எட்டுவது தொடர்பில் இலங்கை அரசு…

    Read more
  • இலங்கையில் நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயம்?

    சர்வதேச பங்களிப்புடன், உடனடியாக நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயம் ஒன்றை இலங்கை அரசாங்கம் உருவாக்கவேண்டும் எனவும், அரசாங்கம் அதனைச் செய்யாதவிடத்து, ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு, அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. புதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வாவின் நியமனத்தையடுத்து, மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகம், சவேந்திர சில்வாவினால் வழிநடத்தப்பட்ட 58ஆவது படையணி,…

    Read more
  • கோட்டாபய குடியுரிமை: கருத்து தெரிவிக்க அமெரிக்க தூதர் மறுப்பு

    இலங்கையில், பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்ட விடயம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் நேற்று கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றினை நடாத்தினார். இதன்போது, அமெரிக்க பதிவாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள குடியுரிமை துறந்தவர்களின் பட்டியலில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறாமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போது, “குடியுரிமையைக கைவிடுவது…

    Read more
  • இராணுவ தளபதி நியமனம்: சர்வதேச ரீதியில் எதிர்ப்புக்கள்!

    இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். போர்க் ற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அவரை இராணுவ தளபதியாக நியமிப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையிலேயே ஜனாதிபதி அவரை புதிய இராணுவ தளபதியாக நியமித்துள்ளார். இந்நிலையில், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஜக்கிய நாடுகள் சபையின் தொடர்ச்சியான அறிக்கைகளில் சிக்கியுள்ள…

    Read more
  • இந்தியாவுக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவல்?

    ஜ.எஸ் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடலாம் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஏஜென்ட் உள்பட, 4 பேர் இந்தியாவுக்குள் நுழைந்து பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத் துறைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் சிரோஹி பொலிஸ் கண்காணிப்பாளர் கல்யாண்மால்மீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆப்கானிஸ்தான் குழு கடவுச்சீட்டுக்களில் ஐ.எஸ்.ஐ முகவர்கள் நான்குபேர் இந்தியாவுக்குள் நுழைந்தனர். இதன் காரணமாக ராஜஸ்தான் மற்றும் குஜராத்…

    Read more
  • `சங்கீத கலாநிதி’ சௌமியா

    பிரம்ம கான சபாவில் சௌமியாவின் கச்சேரி. 2017 இசை விழா சீசன். பைரவியில் தியாகராஜரின் “உபசாரமு…’’ ‘ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே’ – மணிவாசகர் சொல்வார். சௌமியாவின் பாட்டையும் அதுபோலவே சொல்லத் தோன்றும். சகானாவில் ராகம்-தானம்-பல்லவி. ராக ஆலாபனையை முடித்தார். “ஆகா, ராம்நாட் கிருஷ்ணன் போல இருக்குது. அவ்வளவு பிரமாதம்; ஐம்பது வருஷங்களுக்கு முன்னர் கேட்டது.’’ அவையிலிருந்து எழுந்த குரலைத் திரும்பிப் பார்த்தேன். அவர் ஒரு ஞானஸ்தர்; கட்புலனற்றவர். முதல் நாள் மியூசிக் அக்கடமியில் அவரைப் பார்த்தேன். தினமும்…

    Read more
  • யாழ்ப்பாணத்தின் ஓர் இசை வடிவம்

    அவருடைய சங்கீதமும் அவருடைய பண்புகளும் சார்ந்து, அந்தக் காலத்தில் – அந்தக் குழாத்தில், ராம் குமாரசாமி தனித்த சில மதிப்புக்களைக்கொண்ட ஒருவராகவே திகழ்ந்தார். ரஸிக ரஞ்சன சபா, சங்கீத வித்வத் சபை, அண்ணாமலை மன்றம், பின்னர் இளம் கலைஞர் மன்றம், நுண்கலை மன்றம், எஸ். ரி. ஆர். இல்லத்து உள்ளரங்கு என்பன, யாழ்ப்பாணத்தில் அப்போது இசை விழாக்களுக்கும் இசைக் கச்சேரிகளுக்குமான பொதுவான அரங்குகளாகவிருந்தன. ரசனையும், விமர்சனமும் கூடவே இங்கு எதிரொலிகளாய்க் கேட்கும். இலங்கை வானொலியிலும் கலைஞர்கள் தர…

    Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ