• கோட்டாபய பிரஜாவுரிமை: இடைநிறுத்த மனு தாக்கல்

  முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், சிறிலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கைப் பிரஜையாக ஏற்றுக் கொள்வதை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, எதிர்வரும் 2ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், 2ஆம் தேதி காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி யசந்த கோதாகொட மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது….

  Read more
 • கேட்க ஒரு சங்கீதம்!

  ….. எப்படிச் சொல்லலாம்? மகாராஜபுரம் சந்தானம், நெய்வேலி சந்தானகோபாலன் கச்சேரியைக் கேட்டால், நாமும்கூட பாடலாம் என்றவிதமான ஓர் உணர்வு ஏற்படும். ஆழ்ந்த வித்வப் புலமையின் லாவக வெளிப்பாடு அது. பூஷணி கல்யாணராமன் கச்சேரி கேட்டால், எல்லோருக்குமே சங்கீதம் கேட்கத் தோற்றும் – இப்படிச் சொல்லலாம். உன்னதமான ஒரு சங்கீத பாணியின் அசல் ஜொலிப்பு அமைதியாய் ஒளிரும்; கொள்ளையாய் ஆட்கொள்ளும். ‘முற்றுமுழுதான இசை அர்ப்பணம்’ – இப்படித்தான் அவரை விமர்சகர்கள் முத்தாய்ப்பிடுவார்கள். இது, சங்கீத சாம்ராஜ்யத்தில், ஆர்ப்பாட்டமேதுமில்லாத, அமைதியான…

  Read more
 • வலுப்பெறும் சட்ட விதிவிலக்கு கலாசாரம்: மைத்திரிக்கு சம்பந்தன் கடிதம்

  முல்லைத்தீவு நீராவியடி விவகாரத்தில் முறையான விசாரணை இல்லாவிட்டால் சர்வதேச மட்டத்தில் பாரிய விளைவுகள் ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றின்மூலம் தெரிவித்துள்ளார். நீராவியடி விவகாரம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று முன்தினம் அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கடிதத்தில், ‘நீதிமன்ற தீர்ப்பினை மீறியவர்கள் முறையாக கையாளப்படுவதுடன், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதற்கு மாறாக, குறித்த துறவியின் பூதவுடலை ஆலய…

  Read more
 • அரசு ஆதரவை கூட்டமைப்பு மீள் பரிசீலிக்கவேண்டும் – தமிழர் மரபுரிமைப் பேரவை

  நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் செவிசாய்க்க தவறும் பட்சத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு வழங்கும் ஆதரவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என தமிழர் மரபுரிமை பேரவை, கூட்டமைப்பிடம் வலியுறுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கோவில் குடியிருப்பு கிராம அலுவலர் அலுவலகத்தில் தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்களுக்கும் தமிழர் மரபுரிமை பேரவை மற்றும் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பின்போதே தமிழர் மரபுரிமை பேரவையால் ஐந்து அம்ச கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர்…

  Read more
 • ஐ.நா. அமைதிப்படை விவகாரம்: சவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் இலங்கை

  லெபனானில் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கை இராணுவம், அடுத்த மாதம் முழுமையாக திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட விவகாரமானது சர்வதேச ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இறுதிப் போர் இடம்பெற்ற காலத்தில், இலங்கைப் படையணியின் 58ஆவது பிரிவுக்குத் தலைமை தாங்கிய சவேந்திர சில்வாமீது பல்வேறு போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடம் வழங்கிய வாக்குறுதியை மீறி, சவேந்திர சில்வாவை இலங்கை…

  Read more
 • ஐ. தே. க. ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச

  ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். சிறிகோத்தா ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 3.00 மணி அளவில் கூடியது. இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயர் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டது. ஐக்கிய தேசிய முன்னணி…

  Read more
 • நீதிமன்றங்கள் ஸ்தம்பிதம்; முல்லைத்தீவில் மாபெரும் பேரணி

  . முல்லைத்தீவு, நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில், நீதிமன்ற உத்தரவு எழுத்துமூலம் வழங்கப்படுவதற்கு முன்னரேயே பௌத்த மதகுருவின் சடலம் தகனம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில், கொலம்பே மேதாலங்கார தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட சம்பவத்தை பொலிசார் வேடிக்கை பார்த்ததாகவும், நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும், சட்டத்தரணி, ஆலய பூசகர் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டமை என்பவற்றையும் கண்டித்து…

  Read more
 • நீதிமன்ற உத்தரவையும்மீறி, தேரரின் உடல் ஆலய வளாகத்தில் தகனம்!

  முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் பிக்குவின் உடலை, நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம்செய்ய தடை விதித்து, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலும், இன்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டது. பிக்குவின் உடலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம்செய்ய தடை உத்தரவிட்டுள்ள விதித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம், தேரரின் உடலை இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறும் தீர்ப்பளித்தது. எனினும், நீதிமன்ற உத்தரவினை…

  Read more
 • ரணிலின் அதிகார துஷ்பிரயோகங்கள் – மைத்திரி குற்றச்சாட்டு

  அரசியல் பலத்தை பயன்படுத்தி ரணில் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பது தற்பொழுது வெளிப்படுத்தப்படுகின்றது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியில் அரசியல் பழிவாங்கல் நடந்துள்ளது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தளையில் நடைபெற்ற சுந்திர கட்சி சம்மேளன கூட்டத்தின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டு மக்கள் ஏன் என்னை ஜனாதிபதியாக நியமித்தனர்? நாட்டுக்கு ஜனநாயகம் தேவை என்றே அவர்கள் என்னை நியமித்தனர். ஊழல், வன்முறை ஆட்சி இருந்தபடியால், நான்…

  Read more
 • தேர்தலில் கோட்டாபயவுக்கு கட்டுப்பணம்

  பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலை, ராஜகிரிய தேர்தல் காரியாலயத்தில் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் கட்டுப்பணத்தை செலுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, காமினி லொக்குகே ஆகியோரும் அங்கு சென்றிருந்தனர். ஜனாதிபதி தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோட்டபாய ராஜபக்ஷவைத் தவிர இதுவரை 3 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16ஆம் தேதி…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ