• ஜனாதிபதியின் அதிகாரங்களை இல்லாமல்செய்ய எவருக்கும் உரிமையில்லை – சஜித் பிரேமதாச

  ஜனாதிபதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், ஜனநாயகத்தை, சட்டத்தை, நீதியை மதிக்கின்ற எவருக்கும், ஜனாதிபதியின் அதிகாரங்களை இல்லாமல் செய்வதற்கு உரிமை கிடையாது என, வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் பின்னர், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “விசேட அமைச்சரவை கூட்டம் தொடர்பில் சொல்வதற்கு எனக்கு அவசியம் இல்லாதிருக்கின்றது. ஏனெனில், அமைச்சரவை நிகழ்ச்சி நிரல் தொடர்பில் எழுத்து மூலமான எந்தவிடயங்களும் வெளியிடப்பட்டிருக்கவில்லை. ஆயினும், நிறைவேற்று…

  Read more
 • நவம்பர் 16இல் ஜனாதிபதி தேர்தல்

  2019ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல், எதிர்வரும் நவம்பர் 16ஆம் தேதி இடம்பெறவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். தேர்தல் தேதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல், எதிர்வரும் ஒக்ரோபர் 7ஆம் தேதி முதல் இடம்பெறும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

  Read more
 • பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிப்பு

  ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஜ.எஸ் தீவிரவாத அமைப்பினால், ஈஸ்டர் தினத்தன்று மத வழிபாட்டிடங்கள் மற்றும் விடுதிகள்மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இக்குண்டுத்தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து உண்மையினை கண்டறியும் பொருட்டு, பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவானது, பாதுகாப்பு தரப்பினர், அரசியல்வாதிகள் உள்பட பலரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில்,…

  Read more
 • பாதிக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை பொய்யுரைக்கிறது – யஸ்மின் சூக்கா

  கொத்தணி குண்டுகள் தொடர்பான உடன்படிக்கைக்கு தலைமையேற்றிருக்கும் இலங்கை, தனது நாட்டில் அத்தகைய கொத்தணிக் குண்டுகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் எவருமில்லை என துணிச்சலாக அறிவித்திருக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என, சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயல்திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பில், சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ‘உலகலாவிய ரீதியில், கொத்தணிக் குண்டு பாவனையினால் பொது மக்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்வதற்காக, 100 உறுப்பினர்கள் உள்ளடங்கியதாக உருவாக்கப்பட்ட கொத்தணிக் குண்டு…

  Read more
 • இனப் பிரச்னைக்கு ஒரு வருடத்தில் அரசியல் தீர்வு? – ரணில்

  இனப்பிரச்னைக்கு, ஒரு வருடத்தில் அரசியல் தீர்வும், கல்முனை பிரச்னைக்கு விரைவில் தீர்வும் வழங்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வாக்குறுதி அளித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் பாராளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்றது. சுமார் 30 நிமிடங்கள்வரை இடம்பெற்ற இச் சந்திப்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கலந்துகொண்டனர். இதன்போது, புதிய அரசியலமைப்பை…

  Read more
 • இந்தியாவிலிருந்து நாடு திரும்ப இலங்கை அகதிகள் விருப்பு மனு

  இந்தியாவுக்கு அகதிகளாக சென்ற 146 பேர் மீண்டும் இலங்கைக்கு செல்வதற்கான மனுவினை கையளித்துள்ளனர் தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு 146 பேர் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் நேற்று திங்கட்கிழமை மனு ஒன்றை கையளித்துள்ளனர். இலங்கையில் 1983இல் உள்நாட்டுப் போர் தொடங்கிய கால கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் சென்றுகொண்டிருந்தனர். நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, 2009 ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு…

  Read more
 • விண்வெளிக்கு மனிதனை அனுப்ப ஆயத்தமாகும் பாகிஸ்தான்

  2022ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதரை அனுப்பப்போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் சௌத்ரி நேற்று இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் கனவுத் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்தை ‘இஸ்ரோ’ 2022ஆம் ஆண்டு செயல்படுத்தவுள்ளது. இந்தியாவின் திட்டத்திற்கு போட்டியாக, பாகிஸ்தானும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சௌத்ரி கூறுகையில், “பாகிஸ்தான் 2022ஆம் ஆண்டு சீனாவின் உதவியுடன் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. விண்வெளிக்குச்…

  Read more
 • சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

  சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஏனைய பல இடங்களிலும் வெடிகுண்டுகள் வெடிக்குமென உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு மிரட்டல் கடிதமொன்று வந்துள்ளமையால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் சி. குமரப்பனுக்கு இக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதத்தை மேற்கு டெல்லி, மோதிநகர் சுதர்சன் பார்க் பகுதியைச் சேர்ந்த, ஹர்தான் சிங் நாக்பால் என்பவர் எழுதியுள்ளார். ‘நான் சர்வதேச காலிஸ்தான் ஆதரவு குழுவைச் சேர்ந்தவன். நேரத்துக்கு தகுந்த மாதிரி ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு நகர்ந்து செல்வேன். ‘தென் மாநிலத்தில்…

  Read more
 • 50 சதவீத எண்ணெய் உற்பத்தியை சவுதி அரேபியா நிறுத்தியது

  சவுதி அரேபியாவில் எரிபொருள் நிறுவனங்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக, சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, 50 சத வீத எண்ணெய் உற்பத்தியை சவுதி அரேபியா நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திலிருந்து 330 கிலோமீற்றர் தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ள, அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலைக் குறிவைத்து, நேற்று முன்தினம்…

  Read more
 • தெற்காசியாவின் மிக உயர்ந்த தாமரைக் கோபுரம் திறப்பு

  கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள, தெற்காசியாவின் மிக உயர்ந்த தாமரைக் கோபுரம், ஜனாதிபதி மைத்துரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு தாமரைக் கோபுரமானது, வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளின் அலைவரிசை ஒலிபரப்பை எண்மான அடிப்படையில் அதாவது ‘டிஜிற்றல்’ முறையில், ஒரே இடத்திலிருந்து மேற்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்துகிறது. 356 மீற்றர் உயரமான இந்த தாமரைக் கோபுரம், 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தின் நிர்மாண பணிக்கான அனைத்து ஆலோசனை சேவைகளையும், மொரட்டுவ பல்கலைக்கழக நிபுணர்கள் வழங்கியிருந்தனர். கோபுரத்தின்…

  Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ