• ஏழு பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை

    ‘ஹெரோயின்’ போதைப்பொருளை இறக்குமதிசெய்த குற்றத்துக்காக 7 பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருளை இறக்குமதி செய்தமை, அவற்றை சூட்சுமமாக விற்பனை செய்தமை ஆகிய குற்றங்களுக்காக, சந்தேக நபர்களை பொலிஸ் போதைப் பொருள் பணியகம் கைதுசெய்தது. 6 பாகிஸ்தானிய பிரஜைகள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்டவர்கள் சுங்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் போதைப் பொருள் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், நீதிமன்றத்தால் இந்த தண்டணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த 7 சந்தேக நபர்களும் 3…

    Read more
  • கதிரியக்க நீரை பசுபிக் பெருங்கடலில் சேர்க்க ஜப்பான் முடிவு

    கதிரியக்கம் கொண்ட நீரை பசுபிக் பெருங்கடலில் சேர்ப்பதற்கு ஜப்பான் அமைச்சர் பரிந்துரைத்துள்ளார். புகுஷிமா அணு உலையில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் காரணமாக, ஏற்பட்ட கதிரியக்கம் கலந்த நீரை, பசுபிக் பெருங்கடலில் கலந்து நீர்த்துப்போகச்செய்ய, ஜப்பான் சுற்றாடல்துறை அமைச்சர் யோஷியாகி ஹராடா பரிந்துரைத்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் ரிக்டரில் 9 என்ற அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக, சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியன. இதனால், அங்குள்ள புகுஷிமா அணு…

    Read more
  • காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான்-சீனா அறிக்கையை இந்தியா நிராகரித்தது

    சர்ச்சைக்குரிய காரஷ்மீர் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான்-சீனா இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இதுதொடர்பில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீன வெளிவிவகார அமைச்சர் சமீபத்தில் பாகிஸ்தான் சென்ற பின்னர் பாகிஸ்தானும், சீனாவும் காஷ்மீர்பற்றி கூட்டாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளன. இதனை நாங்கள் நிராகரிக்கிறோம். ‘சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதை’ என்ற பெயரிலான ஒரு திட்டத்தை அந்த நாடுகள் அறிவித்துள்ளன. இந்த பாதை இந்திய எல்லையில், பாகிஸ்தான் 1947ஆம் ஆண்டு முதல்…

    Read more
  • கோத்தாபயவின் மேன்முறையீடு நிராகரிப்பு

    முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. டி. ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக அமைப்பின்போது இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு விசாரணைகளுக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். குறித்த மேன்முறையீடே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 15ஆம் தேதி முதல்…

    Read more
  • பயங்கரவாதம் சமயத்துக்கோ, இனத்துக்கோ வரையறுக்கப்பட்டதல்ல – சவுதி சபாநாயகர்

    ‘பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, இலங்கையைப்போன்றே சவுதி அரேபியாவினதும் குறிக்கோளாகும். பயங்கரவாதம் என்பது குறித்தவொரு சமயத்துக்கோ இனத்துக்கோ வரையறுக்கப்பட்டது அல்ல’ என்று, சவுதி அரேபிய பாராளுமன்ற சபாநாயகர் தெரிவித்திருக்கிறார் இலங்கை வந்துள்ள சவுதி அரேபிய சபாநாயகர் கலாநிதி அப்துல்லா பின் மொஹமட் பின் இப்ராஹிம் அஷ் ஷெயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்குமிடையிலான ஒத்துழைப்பை பல துறைகளிலும் விரிவுபடுத்தல் தொடர்பாக சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. சவுதி அரேபிய நிதியத்தினூடாக இலங்கையில் பல்வேறு…

    Read more
  • ஜ.நா பேரவையில் இலங்கை விவகாரம் தவிர்ப்பு?

    ஜக்கியநாடுகள் சபையின் 42ஆவது கூட்டத் தொடரில் உiராயாற்றிய ஜ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அம்மையார் இலங்கை விவகாரம் குறித்து எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஜெனீவாவில் ஜ.நா மனித உரிமைப் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமாகியிருந்தது. கூட்டத்தொடரை ஆரம்பித்து, மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அம்மையார் உரையாற்றியிருந்தார். பல்வேறு நாடுகளின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து அவர் கவலை வெளியிட்டிருந்தபோதும், இலங்கை விவகாரங்கள் குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. இலங்கை…

    Read more
  • ரூபவாஹினியை திடீரென கைப்பற்றிய மைத்திரி!

    இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை உடன் அமுலக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சின்கீழ் கொண்டு வரும் வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. ரூபவாஹினியின் தலைவர் இனோகா சத்தியலிங்கம் பதவியில் இருந்து விலகாமையை இதற்கு காரணமாக காட்டி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பின்னால் பாரிய அரசியல் புரட்சி ஒன்று…

    Read more
  • ஹொங் கொங்கில் அமெரிக்க ஆதரவுகோரி போராட்டம்

    குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டமூலத்தை, ஹொங் கொங் திரும்பப் பெற்றபோதிலும், பிற நிபந்தனைகளை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டமூலத்தை ஹொங் கொங் ஜனாதிபதி திரும்பப் பெற்றபோதிலும், பிற நிபந்தனைகளை நிறைவேற்றக் கோரி, போராட்டக்காரர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் வலியுறுத்திவருகின்றனர். இங்கிலாந்தின் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து ஹொங் கொங் விடுவிக்கப்பட்ட பின்னர், கடந்த 1997ஆம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாக ஹொங் கொங் மாற்றம் பெற்றது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில்…

    Read more
  • தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வை வழங்குவேன்-சஜித்

    ஒரே நாட்டினுள் அதிகளவான அதிகார பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்குவதுடன், மாகாண சபையை பலப்படுத்தி, அதற்கான அதிகாரங்களை வழங்கவும் தயார் என, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ‘எண்டபிறைசஸ் சிறிலங்கா’ கண்காட்சி யாழ். முற்றவெளியில் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது. அங்கு விஜயம் செய்த அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம், நீங்கள் அதிகாரத்தை கைப்பற்றினால் தமிழ் மக்களின் பிரச்னைக்கு எந்தவிதமான தீர்வினை வழங்குவீர்கள் என, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத்…

    Read more
  • சந்திரயான்-2 ‘லான்டர்’ பகுதி சந்திர பரப்பில் கண்டுப்பிடிப்பு

    தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட ‘சந்திரயான்-2’ ‘லான்டர்’ பகுதி நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக ‘இஸ்ரோ’ அறிவித்துள்ளது. சந்திரயான்- 2 லான்டரின் தற்போதைய நிலை தொடர்பாக இன்று செய்தி ஊடகங்களுக்கு தெரிவிக்கும்போதே இஸ்ரோவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் லான்டர் பகுதியை, நிலவைச் சுற்றிவரும் சந்திரயான்-2 விண் ஓபிட்டர் கருவி மூலம் எடுக்கப்பட்ட படம் தமக்கு கிடைத்துள்ளதாகவும், இந்நிலையில் லான்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இஸ்ரோ சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யவதற்காக…

    Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ