• யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்

    யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பாலாலி பிராந்திய விமான நிலையத்தை கடந்த ஜூலை மாதம் முதல் சர்வதேச விமான நிலையமாக மாற்றும் பொருட்டு, முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள், ஓடுதள அமைப்பு மற்றும் தொழில்நுட்ப வேலைத்திட்டங்கள் என்பன துரிதகதியில் இடம்பெற்றுவந்தன. இந்நிலையில், பலாலி பிராந்திய விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக அமைச்சரவையின் ஒப்புதலுடன் பெயர்மாற்றப்பட்டு, திறந்து வைப்பதற்கான…

    Read more
  • ராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை

    ராஜிவ் காந்தி படுகொலைக்கு தாங்கள் காரணம் அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு இந்திய தேசிய தலைவருக்கும் எதிராக செயல்பட நாங்கள் ஒருபோதும் எண்ணியதில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், ராஜிவ் காந்தி படுகொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று அவர் பேசினார். மேலும், வரலாறு திரும்ப எழுதப்படும்…

    Read more
  • இந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது

    யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில், இந்தியாவின் எயர் அலைன்ஸ் விமானம் தரையிறங்கியது. இந்திய தொழிநுட்ப அதிகாரிகள் குழுவுடன், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் குறித்த விமானம் நேற்றுத் தரையிறங்கியது. ஓடுபாதை பரிசோதனை, கட்டுப்பாட்டு கோபுரம், விமான நிலையத்தின் செயல்பாடுகள் என்பன குறித்து இந்திய அதிகாரிகள் இதன்போது ஆராய்ந்துள்ளனர். இதேவேளை நாளை விமான நிலைய திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. நாளை விமான நிலைய திறப்பு விழா சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை…

    Read more
  • ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு

    எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசிய கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக, கட்சிகளின் ஆலோசனைக்கமைய தயாரிக்கப்பட்ட பொது உடன்பாட்டில் 5 கட்சிகள் கையொப்பமிட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டத்திலிருந்து வெளியேறியது. யாழ்ப்பாண பல்கலைக்கழத்துக்கு அருகாமையில் உள்ள விருந்தினர் விடுதியில், இன்று பிற்பகல் 2.00 மணி…

    Read more
  • அரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த

    தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுவோம் என, எதிர்கட்சித் தலைவரும், பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் செய்தி ஊடகங்களின் பிரதானிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, “எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். அந்த முடிவுகள், ஜனாதிபதி தேர்தலில் வரப்போகும் முடிவுகளை வெளிக்காட்டியுள்ளன. “அரசியல் பிரச்சினைகளுக்கு அப்பால், தெற்கில்…

    Read more
  • பரீட்சார்த்த விமான சேவை

    யாழ்ப்பாண விமான நிலையம் இம்மாதம் 17ஆம் தேதி வைபவ ரீதியாக திறந்துவைக்கப்படவிருக்கையில், 14ஆம் தேதி ‘அலைன்ஸ் எயர்’ `Proving flight’ எனப்படும் பரீட்சார்த்த சேவைகளை மேற்கொள்ளவிருப்பதாக, அலையன்ஸ் எயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். எனினும், அலையயன்ஸ் எயர் எப்போது அதன் யாழ்ப்பாண சேவையை ஆரம்பிக்கும் என்பது இன்னமும் தீர்மானமாகவில்லை. பரீட்சார்த்த நடவடிக்கைகள் முடிந்ததும், சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

    Read more
  • ஒக்ரோபர் 17இல் யாழ்ப்பாணம் விமான சேவை?

    பலாலி விமான நிலையம் ‘யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ என்ற பெயர் மாற்றத்துடன், ஒக்ரோபர் 15 அல்லது 17ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டு சேவையை ஆரம்பிக்க, நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இரண்டாயிரத்து 250 மில்லியன் ரூபா செலவில், மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும் இந் நிர்மாண வேலைகளில் முதல் கட்ட வேலைகள் இப்போது நடைபெறுகின்றன. இதில், 300 மில்லியன் ரூபாவை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளபோது, மேலும் உதவியை இந்தியாவிடம் இலங்கை அரசு கோரியுள்ளது. இந்திய நகரங்களுக்கும் மாலைதீவுகளுக்குமான விமான சேவை…

    Read more
  • இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை

    இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து, ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று மாலைதீவு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சார்க்’ உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அங்கு பல்வேறு உயர்மட்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார். மாலைதீவு உயர் கல்வி…

    Read more
  • கோத்தாவுக்கு ஆதரவளிக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்

    ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு சிறிலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா இன்று இதனை அறிவித்தார். சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்றை நடாத்திய சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர். செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது நிமல் சிறிபால டி சில்வா, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு…

    Read more
  • ஆலய அத்துமீறலில் நடவடிக்கைக்கு சம்பந்தன் வலியுறுத்து

    செம்மலை கோவில் வளாகத்தில் பெரும்பான்மையினத்தவர் மேற்கொண்ட அத்துமீறல் நடவடிக்கைகளை அநுமதிக்க முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். நீதிமன்ற கட்டளைகளை மீறி செயல்பட்டவர்கள்மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். செம்மலை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறியோரை தடுக்காமல், அதனை அநுமதித்த பாதுகாப்பு தரப்பினர்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்….

    Read more

இதர செய்திகள்

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ