
யூரோ 2016 : இங்கிலாந்தும் வேல்ஸும் 2ஆவது சுற்றுக்கு தகுதி
— June 20, 2016 0 208யூரோ 2016 போட்டிகளில் இங்கிலாந்தும் வேல்ஸும் 16 அணிகள் கொண்ட 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
குழுநிலையில் `பி` பிரிவில் உள்ள இங்கிலாந்தும் வேல்ஸும் திங்களன்று முறையே ஸ்லோவாக்கியா மற்றும் ரஷ்யாவுடன் மோதின.
இங்கிலாந்துக்கும் ஸ்லோவக்கியாவுக்கும் இடையேயான ஆட்டம் கோல் எதுவுமின்றி, வெற்றி தோல்வியின்றியும், ரஷ்யாவுக்கும் வேல்ஸுக்கும் இடையேயான ஆட்டம் 3-0 என்ற கோல் கணக்கிலும் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இரண்டு அணிகளும் தமது பிரிவில் முதலாம் இரண்டாம் இடங்களை எட்டியுள்ளன.
`பி’ பிரிவில் முதலாவது இடத்தை எட்டியிருக்கும் வேல்ஸ், `டி’ பிரிவில் 3ஆம் இடத்திலிருக்கும் குரோஷியாவை காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தில் எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே பிரிவில் இரண்டாம் இடத்திலிருக்கும் இங்கிலாந்து, 2004ஆம் ஆண்டு யூரோ கிண்ண வாய்ப்பையும் 2006ஆம் ஆண்டு உலக கிண்ண வாய்ப்பையும் தட்டிப்பறித்த போத்துக்கல் அணியை கால் இறுதிக்கு முந்திய ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.
Leave a reply