சோமாலியாவில் குண்டுத்தாக்குதல்: 5 பேர் பலி

0 33

சோமாலியாவின் தலைநகர் மொகடிசு நகரில் தங்குவிடுதியை இலக்குவைத்து நடாத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொகடிசு நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள நஸா-ஹப்லோத் தங்குவிடுதியின் நுழைவாயிலில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை வெடிக்கவைத்தும், ஆயுததாரிகள் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தியும் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சோமாலிய பாதுகாப்பு படையினர் ஆயுததாரிகளுடன் மோதலில் ஈடுபட்டதில், ஆயுததாரிகள் இருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோமாலியாவில் இயங்கும் அல்-கைடா ஆதரவு அமைப்பான அல்-ஷபாப் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ