
யூரோ 2016: அரை இறுதியில் வேல்ஸ், போர்த்துக்கல்
— July 2, 2016 0 220யூரோ 2016 போட்டிகளில் வேல்ஸ் மற்றும் போர்த்துக்கல் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக 2ஆவது தரநிலையில் உள்ள பெல்ஜியத்தை 3-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி,வேல்ஸ் முதல் தடவையாக, பெரும் சுற்றுப்போட்டியின் அரை இறுதிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் மூன்று கோல்களை பெல்ஜியத்துக்கு அடித்ததன் மூலம் 32 ஆண்டுகளின் பின்னர் அந்த அணிக்கு 3 கோல்களை அடித்த அணி என்ற சாதனையையும் வேல்ஸ் நிலைநாட்டியிருக்கிறது.
யூரோ 2016இன் மற்றொரு கால் இறுதி சுற்று போட்டியில் போர்த்துக்கல் அணி பெனால்ரி முறையில் 5-3 என்ற கோல் கணக்கில் போலந்தை வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
வேல்ஸுக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையேயான அரை இறுதிப்போட்டி எதிர்வரும் புதன் கிழமை நடைபெறவுள்ளது.
ஏற்கனவே கால் இறுதிக்கு தகுதிபெற்றுள்ள ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிரான்ஸ், ஐஸ்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளுக்கிடையேயான அரை இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிகள், எதிர்வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் கலந்துகொண்டு, யூரோ 2016 வெற்றிக்கிண்ணத்தை தங்களுக்குள் சுவீகரிக்கும்.
Leave a reply