செய்தித் துறையை மோடி அரசு அச்சுறுத்துகிறது?

0 10

கலையரசன்

தமிழகத்தில் கவர்னர் அலுவலகத்தின் புகாரின்பேரில் `நக்கீரன்’ ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற தலையீட்டால் விடுதலைசெய்யப்பட்ட விவகாரத்தின் பரபரப்பு ஓய்வதற்குள், தேசிய அளவில் ‘குயின்ற்’ (Quint) இணைய இதழ் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகள் பரபரப்பை ஏற்படுத்தின.

கடந்த வியாழன் காலை, உள்ளூர் காவல்துறையுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் நொய்டா நகரில் உள்ள ‘குயின்ற்’ இணைய இதழ் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளரான தொழிலதிபர் ராகவ் பாஹல் வீட்டில் நுழைந்து சோதனை நடாத்தத் தொடங்கினர். பெங்களூரில் உள்ள ‘தி நியூஸ் மினிட்’ செய்தி இணையதள அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த தளத்தின் முதலீட்டாளர்களில் ராகவ் பாகலும் ஒருவர்.

வரி ஏய்ப்பு தொடர்பான சோதனை இதுவென, பிற்பகலில் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் முதலில் ‘குயின்ற்’ அலுவலகத்தில் ‘சர்வே’ செய்ய வந்திருப்பதாகக் கூறியதாக இந்தச் சம்பவம் தொடர்பாக ‘எடிட்டர்ஸ் கில்ட்’ அமைப்பிற்கு எழுதிய கடிதத்தில் ராகவ் தெரிவித்திருந்தார். சோதனையின்போது இருந்த நபர் ஒருவரும், அதிகாரிகள் சர்வே செய்ய வந்திருப்பதாக கூறியதாகவும், பின்னர் ஒரு மணி நேரம் கழித்துச் சோதனைக்கான ‘வாரண்ட்’ இருப்பதாகத் தெரிவித்ததாகவும் கூறினார்.

விசாரணை அதிகாரிகள், ஆசிரியர் குழு உறுப்பினர்களிடம் நிறுவன முதலீடுபற்றி எல்லாம் கேட்டிருக்கின்றனர். பெங்களூரு நியூஸ்மினிட் அலுவலகத்தில் நடந்த சோதனையிலும், குயின்ற் ‘சர்வே’ தொடர்பான சோதனையென்றே கூறியுள்ளனர்.

‘குயின்ற்’ அலுவலக சோதனையின்போது, ஆசிரியர் குழு தொடர்பான தகவல்களை நகலெடுக்க வேண்டாம் என்றும், கம்ப்யூட்டரில் பார்வையிடவேண்டும் என்றால் ராகவ் பாஹல் அருகில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

‘எடிட்டர்ஸ் கில்ட்’ அமைப்புக்கு எழுதிய கடிதத்தில், தங்கள் நிறுவனம் முறையாக வரிசெலுத்தும் நிறுவனம் என்றும், நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும், சோதனையின்போது ஆசிரியர் குழு தகவல்களில் கை வைக்க வேண்டாம் எனக் கோரியதாகவும், ராகவ் பாஹல் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவத்தையடுத்து, பத்திரிகையாளரும் ‘எடிட்டர்ஸ் கில்ட்’ தலைவருமான சேகர் குப்தா, அரசு இதுதொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என கூறினார். சிரேஷ்ட வழக்கறிஞரான பிரசாந் பூஷண், ‘குயின்ற்’ இதழ் அரசை விமர்சிப்பதாலேயே இந்தச் சோதனை நடைபெற்றதாகவும், இது செய்தி ஊடகங்களை மிரட்டும் செயல் என்றும் கூறினார்.

இது, செய்தி ஊடகங்களுக்கான அச்சுத்தல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கருத்து தெரிவித்தார்.

வருமானவரித் துறைக்குப் பொருத்தமான பிரிவின் கீழ் விசாரணை நடத்த அதிகாரம் இருந்தாலும், அரசை விமர்சிப்பவர்கள்மீதான மிரட்டல் என பார்க்கக்கூடிய வகையில் இந்த அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது என்று ‘பத்திரிகை கில்ட்’ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி தேவையான தகவல்களை அளிக்க தயாராகவிருக்கும் அதேவேளை, பத்திரிகைச் சுதந்திரத்தில் சமரசம் செய்துகொள்ளமுடியாது என ‘குயின்ற்’ தெரிவித்துள்ளது. அதிகாரிகள் சோதனையின் நோக்கத்தை அதிகாரிகள் மாறிமாறித் தெரிவித்தமை, எதிர்ப்புக் குரலை நசுக்கும் முயற்சியின் அங்கமாக இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக சந்தேகிக்கவைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு செய்தி ஊடகங்கள் மோடி அரசுக்குப் புகழ்மாலை சூட்டிக்கொண்டிருக்கும்போது, அரசை விமர்சிக்கும் செய்தி ஊடகங்கள் இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கும் தொந்தரவுகளுக்கும் இலக்காவது தொடர்கதையாகிவருகிறது. விமர்சனங்கள் தொடர்பில் ஆளும் பா. ஜ. க. இந்த அளவுக்குச் சகிப்பின்மையை வெளிப்படுத்துவது, அதன் பதற்றத்தையே பறைசாற்றுவதாக அரசியல் அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
*

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ