எனது நடவடிக்கைகள் வரலாற்று பொன்னெழுத்துக்கள் – ஜனாதிபதி சிறிசேன

0 31

குமார்-ராஜா
பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கும் ஜனநாயகத்துக்கும் கௌரவமளிக்கின்ற தலைவரென்ற வகையிலேயே தாம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று சத்தியப்பிரமாணம் வழங்கிய பின்னர் அந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களும் கையொப்பமிட்டுத் தந்தாலும் தாம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கப் போவதில்லையென தாம் வெளியிட்ட செய்தி தமது தனிப்பட்ட அரசியல் கருத்து என்றும், அதே நிலைப்பாட்டிலேயே தற்போதும் இருப்பதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, எனினும் பாராளுமன்றம் மற்றும் ஜனநாயகத்தை மதிக்கின்ற தலைவரென்ற வகையில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.

பிரதமர் ஒருவரை தெரிவுசெய்வதற்கு அரசியலமைப்பின்படி பாராளுமன்றத்திற்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ அதிகாரம் கிடையாது என்றும், அதற்கான அதிகாரம் நிறைவேற்று ஜனாதிபதிக்கேயுள்ளதென்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, எனினும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்குமாறு பாராளுமன்றத்தில் 117 பேர் வாக்களித்து தமது பெரும்பான்மையை வெளிப்படுத்தியதாலும், பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு மதிப்பளிப்பதாலுமே தாம் அந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தைக் கலைத்தமை, பிரதமரை பதவி விலக்கியமை, புதிய பிரதமரை நியமித்தமை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தனது தனித் தீர்மானமன்றி, நாட்டின் உயர் சட்ட அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டே மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அவை தாய்நாட்டிற்காக மிகுந்த நேர்மையுடன் மேற்கொண்ட நடவடிக்கை என்றும், அரசியலமைப்பை மீறவேண்டுமென்ற எந்த எண்ணமும் தம்மிடம் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடிக்கு சிறந்த தீர்வு தேர்தலுக்கு செல்வதேயென தாம் நம்புவதாகவும், பாராளுமன்றத்தில் 122 பேரைவிட 155 இலட்சம் வாக்காளர்களின் இறைமையின் மூலமான தீர்மானம் நாடு மட்டுமன்றி, உலகமும் ஏற்றுக்கொள்ளுமென தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், 155 இலட்சம் வாக்காளர்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கே குறித்த வர்த்தமானி அறிவித்தலை தாம் வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

19ஆவது அரசியலமைப்பின்மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கமுடிந்தாலும் அதில் அரசியல் இழுபறி இருந்ததாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அந்த நிதியை மீள பெற்றுக்கொள்ளல் ஆகியவற்றுக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தை திருத்துவதற்கு பாராளுமன்றத்தில் நாளொன்றை பெற்றுக்கொள்வது காலம்தாழ்த்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அமைச்சுக்களை ஒதுக்குவதற்கான அடிப்படையை மேற்கொள்ள முடியாமலிருந்தமை, பிணைமுறி தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு முடியாமை, இராணுவ வீரர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கியமை போன்ற துரதிர்ஷ்டவசமான நடவடிக்கைகள், கடந்த நான்கு வருடங்களாக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியன தொடர்பில் தாம் மிகுந்த வேதனையுடன் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அண்மைக்கால அரசியல் ரீதியான தீர்மானங்களுக்கும் இத்தகைய நிலைமைகளே அழுத்தமாக அமைந்தன என்றும் அவர் தெரிவித்தார்.
யார் எத்தகைய கருத்துக்களை வெளியிட்டாலும், நாடு மற்றும் நாட்டு மக்களை கருத்திற்கொண்டே தாய்நாடு தொடர்பான தீர்மானங்களை தாம் கடந்த வாரங்களில் மேற்கொண்டதாகவும், தமக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாக சில தரப்பினர் தெரிவித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு மற்றும் நாட்டு மக்களுக்காக நேர்மை மற்றும் சரியான தீர்மானங்களை எடுத்ததற்காக தாம் சிறைசெல்ல நேர்ந்தாலும் அது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் குறிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கடாபியைப் போல் தம்மை இழுத்துச் சென்று படுகொலை செய்யப்போவதாக சிலர் கடந்தசில தினங்களாக கருத்துக்களை வெளியிட்டிருந்தனர் என்றும் கடுமையான அரசியல் நடத்திய ஜே.ஆர் ஜயவர்த்தன யுகத்திலும் அதன் பின்னரும் எந்தவொரு தலைவருக்கெதிராகவும் எவரும் இத்தகைய கருத்துக்களை வெளியிடவில்லையென்றும் அவ்வாறு இடம்பெறுமானால் அத்தகைய கருத்துக்களை வெளியிட்ட நபர் எதிர்கொள்ள நேரும் நிலை தொடர்பில் தாம் அறிவதாகவும் அவர் தெரிவித்தார். தாம் நாட்டில் ஏற்படுத்திய சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காகவே அவர்கள் அத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய பின்னணியில் நெருக்கடிகள் இன்றி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதே தமது எதிர்பார்ப்பு என தெரிவித்துள்ள ஜனாதிபதி நெருக்கடிகள் மூலம் நாடு பின்னடைவையே எதிர்கொள்ளும் என்றும் ஊழல் மோசடியற்ற அரசியல் மூலமே சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
தோல்வியடைந்துள்ள, முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ள சகவாழ்வு அரசியல் சிந்தனையை நாட்டையும் கலாசாரத்தையும் நேசிக்கக்கூடிய சமூக சிந்தனைக்கு மதிப்பளிக்கக்கூடிய அரசியல் அணி மூலம் மட்டுமே கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்தார். (ஸ)

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ