பிள்ளையார் ஆலயம் பெயர் மாற்றம்

0 36

பௌத்த பிக்குவால் ‘கணதேவி தேவாலயம்’ என பெயர் மாற்றப்பட்ட நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பெயர்ப்பலகை, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் கட்டளைப்படி, மீண்டும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

குறித்த சர்ச்சைக்குரிய ஆலயம் தொடர்பான வழக்கு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தால் நகர்த்தல் பத்திரம் தாக்கச் செய்யப்பட்டு, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணைகளின்போது, நீதிமன்றம் இம்மாதம் 6ஆம் தேதி வழங்கிய தீர்ப்புக்கு அமைய, கணதேவி தேவாலயம் என எழுதப்பட்டிருந்த பெயரை நீக்கி, நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் என எழுதி, மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு மன்று கட்டளையிட்டது. இதனையடுத்து, கணதேவி தேவாலயம் என பெயர் மாற்றப்பட்ட நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பெயர்ப்பலகை, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் கட்டளைப்படி மீண்டும் நீராவியடி பிள்ளையால் ஆலயம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இக்கட்டளை வழங்கப்பட்டு 20 நாட்களை கடந்துள்ளபோதிலும் பொலிஸார் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்றும், பௌத்த பிக்குவால், பிள்ளையார் ஆலயத்துக்கு பொருத்தப்பட்டுள்ள இரகசிய சீ.சீ.ரி.வி கமெராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விடுக்கப்பட்டிருந்த உத்தரவும் அமூல்நடத்தப்படவில்லை என்றும் ஆலய தரப்பில் தெரிவிக்கப்பட்டுதையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் ஆலய பெயர் மாற்றத்துக்கும், சிசிரிவி கமெராக்களை அகற்றுவதற்கும் உத்தரவிட்டிருக்கிறார்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ