வடக்கு, கிழக்கு இராணுவ மயமாக்கலின் நோக்கம் என்ன? சிறீதரன் எம்.பி.

0 19

நாட்டுக்கு அச்சுறுத்தல் என கூறிவிட்டு, வடக்கு, கிழக்கை மாத்திரம் இராணுவமயமாக்கலுக்குள் வைத்திருப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றதா என, பாராளுமன்றத்தில் இன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பி. சிவஞானம் சிறீதரன் கேள்வி எழும்பினார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலம் நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

“மதவாச்சிவரை இராணுவம் பாடசாலைகளில் சோதனையிடுவதும் இல்லை வீதிச் சோதனைச் சாவடிகளும் இல்லை, வடக்கு கிழக்கை மாத்திரம் இராணுவமயமாக வைத்திருப்பதற்கு இந்த அரசாங்கம் விரும்புகின்றது. பாடசாலை வாயில்களில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் புத்தகப் பைகளை இராணுவமும், சிவில் பாதுகாப்பு படையும் சோதனையிடுகின்றன.
பாடசாலைக்குள் இராணுவத்தினர் முகாமிட்டு இருக்கின்றனர்.

“ஒரு பாடசாலையில், அங்கு கல்வி கற்கும் பிள்ளைகள் எண்ணிக்கை 75, ஆனால், அங்குள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை 25. தென்னிலங்கையில் சிங்களவர் எவரும் ஏப்ரல் 21 தாக்குதலில் கொல்லப்படவில்லை. இதனைப் பார்த்தால், ஆட்சியை கைப்பற்றுவதற்காக யாரோ இதன் பின்னால் இருக்கின்றார்கள். அச்சுறுத்தல் இருக்குமானால் நாடுமுழுவதும் ஒரே மாதிரியான பாதுகாப்பு வேண்டும். வடக்கில் கிழக்கில் ஒரு மாதிரியும், தென்னிலங்கையில் வேறொரு மாதிரியும்
பாதுகாப்பு இருக்கின்றது.

“பூநகரி, கௌதாரிமுனையில் டக்கிளஸ் தேவானந்தாவின் தம்பியே மண்ணைக் களவெடுத்து செல்கின்றார். ஒரு ‘கீப்’ மண்ணைக் கொண்டுசெல்லும் வீதியால் மூன்று கீப் மண் டிப்பரில் கொண்டுசெல்லப்டுகிறது. ஜனாதிபதி இயற்கையைப்பற்றி பேசுகின்றார். அவரது அலுவலகத்திலிருந்து மண் அகழ்வதற்கு உத்தரவு இடப்படுகின்றது. சமுர்த்திப் பயனாளிகளிடமிருந்து ரூபா 500 பெறப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் சொன்னதாக இங்கே பேசுகின்றீர்கள். மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்துக்காக டக்ளஸ் தேவானந்தா மற்றும் சந்திரகுமார் ஆகியோர் 2 ஆயிரம் ரூபாக்களை சமுர்த்திப் பயனாளிகளிடம்
பெற்றுக்கொண்டார்கள்.

“சிங்களவர்கள் வடக்கு கடலில் வந்து மீன்களை அள்ளிச் செல்கின்றார்கள். எமது மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையாரை தூக்கி எறிந்து விட்டு, பிக்கு ஒருவர் புத்தர் சிலையை வைக்கின்றார் அதற்கு ரஜராஜ விகாரை என பெயர் சூட்டியுள்ளார். நாவற்குழியில் 100 வீதம் தமிழர்கள் வாழும் இடத்தில் பெரிய புத்தர் கோவிலை கட்டுகின்றார்கள். நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு அருகே, கடலில் பாரிய புத்தர் சிலையை அமைக்கின்றார்கள். கன்னியா வெந்நீர் ஊற்றில் இராவணன் தனது தயாரின் கடமையை செய்ய வெட்டுவித்த வெந்நீர் ஊற்றில் இருந்த பிள்ளையாரை தூக்கி எறிந்துவிட்டு, புத்தர்
சிலை வைக்கின்றார்கள். புத்தர் சிலை வைப்பதற்கு எதிராக அத்துரலிய ரத்தின தேரர் உண்ணாவிரதம் இருப்பாரா?’’ எனவும் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ