
இலங்கை – தாய்லாந்து சுற்றுலா ஒப்பந்தம்
— June 30, 2019 0 40சுற்றுலாத் துறையை அபிவிருத்திசெய்யும் வகையில், இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிகையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கும் தாய்லாந்து சுற்றுலாத்துறை அதிகாரிக்கும் இடையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது.
இலங்கையிலிருந்து தாய்லாந்துக்கு செல்லும் பௌத்த சுற்றுலா பயணிகளுக்கு அங்குள்ள பௌத்த புனித ஸ்தலங்களை பார்வையிட வசதிகள் செய்துகொடுப்பதற்கும், தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு வரும் பௌத்த சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள பௌத்த புனித ஸ்தலங்களை பார்வையிடவும் வசதிகள் செய்துகொடுப்பது இவ்வொப்பந்தில் பிரதான இடத்தைப் பெற்றுள்ளதாகவும் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
Leave a reply