கன்னியாவில் போராட்டகாரர்மீது சுடுதண்ணீர் வீச்சு!

0 13

திருகோணமலையில் தமிழ் மக்களின் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் கன்னியா வெந்நீருற்று பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு, அவ்விடத்தை பௌத்த மயமாக்கும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்போரட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி. யோகேஸ்வரன், தென்கையிலை ஆதீனம், சின்மயா மிசன் சுவாமிகள் மற்றும் தமிழ் அரசியல் கட்சியினர், இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, கன்னியா போராட்டத்துக்கு நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக போராட்டம் மேற்கொள்ளப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுடன், போராட்டகாரர்களை கன்னியா வெந்நீருற்று அமைந்துள்ள பகுதிக்கு செல்வதற்கு பொலிஸாரினால் தடையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையிலும், போராட்டம் சாத்வீகமான முறையில், சிவபுராணம் இசைத்து, பொலிஸாரால் போடப்பட்ட தடைக்கு முன்பாக அமர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, போராட்டத்தில் பங்குகொண்டிருந்த கன்னியா வெந்நீருற்று கிணறுகள் அமைந்துள்ள இடம் மற்றும் வெந்நீருற்று பிள்ளையார் ஆலய காணியின் உரிமையாளரான கோகிலரமணி அம்மையாரும், தென் கையிலை ஆதினமும் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு, போராட்டத்தை கைவிடுமாறு கோரப்பட்ட சமயம், கன்னியா வெந்நீருற்று வீதியில் உள்ள தேநீர்ச் சாலையில் நின்றிருந்த பெரும்பான்மையினத்தவர்களால் சுடுதண்ணீர் ஊற்றி அவமதிக்கப்பட்டதுடன், அநாகரிக வார்த்தைகளும் அவர்களை நோக்கி பேசப்பட்டன.
இதனால், போராட்டக்காரர்கள் கடும் ஆத்திரமடைந்து பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டதுடன், சுடுதண்ணீர் ஊற்றி அவமதித்தவர்களை உடனே கைதுசெய்யுமாறும் கடுமையாக கோரிக்கை விடுத்தனர்.

போராட்டக்காரர்களின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தவதாக அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டபோதிலும், அவர்களின் கூற்றில் நம்பிக்கையடையாது பொலிஸாருடன் கடும் வாக்குவாதமும் இடம்பெற்றது. இதேவேளை, அங்கு நிலவிய பதற்ற நிலமைகளையடுத்து, இராணுவத்தினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் பங்குகொள்வதற்காக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளிலிருந்து சென்ற பொதுமக்கள் பயணித்த பேருந்துகள் இராணுவத்தினரால் மறிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பொதுமக்களும் கடும் சோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.

கன்னியா வெந்நீருற்று பகுதி பௌத்தமயமாக்கலுக்குள்ளாகும் செயல்பாடுகள் அதிகரித்துவரும் நிலையில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களிடமிருந்து இதற்கு எதிர்ப்புக்கள் அதிகரித்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ