எமது உரிமை மறுப்பே பௌத்த மயமாக்கலின் சூட்சுமம் – பாராளுமன்றத்தில் சம்பந்தன்

0 14

இலங்கையில் தமிழ் மக்களால் இரண்டாம் தர பிரஜையாக வாழமுடியாது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் தொடர்ந்தும் இரண்டாந்தர பிரஜைகளாக நடாத்தப்படும் நிலையில், சர்வதேசம் இதனை வெறும் பார்வையாளராக பார்த்துச்செல்ல முடியாது என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் கேள்வி எழுப்பி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றும்போதே திரு சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பினைக் கொணர்ந்து, மக்களால் நிராகரிக்கப்பட்ட 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பை நீக்குவோம் என்ற வாக்குறுதிக்கு அமைவாகவே புதிய அரசாங்கத்துக்கு எமது மக்கள் வாக்களித்து, மாற்றத்தை கொண்டுவந்தார்கள். 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பை அப்போது ஆட்சியில் இருந்த ஜ. தே. க அரசு, தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனேயே கொண்டுவந்தது. அதற்குரிய ஆணையை மக்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முயலவில்லை. அந்த அரசியலமைப்பை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுப்பதாக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஒவ்வொரு காலப்பகுதியிலும் தேர்தல்கள் இடம்பெறுகின்றபோதெல்லாம் அரசியல்வாதிகள் இதனை வலியுறுத்தினர், வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன.

2015ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பினைக் கொண்டுவருதாக வாக்குறுதியளித்தனர். இதற்கு இணங்க, 90 வீதமான மக்கள் தேர்தலில் வாக்குறுதியளித்தனர்.

ஆனால், நடைமுறை அதற்கு மாறாகவே காணப்படுகின்றது. ஆனாலும், 2015ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்க பலரும் தமது ஆதரவினை வழங்கினார்கள்.
இதன்பின், பல உப குழுக்கள் உருவாக்கப்பட்டு, முன்மொழிவுகள் சமர்பிக்கப்பட்டன. ஆனால் இன்று, சில மறைமுக காரணங்களுக்காக அரசியலமைப்பு விடயம் கவனத்தில் கொள்ளப்படாமையானது, 2015ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையை மீறும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகின்றது. அத்தோடு, 2016ஆம் ஆண்டு பாராளுமன்றத்தால் வழங்கப்பட்ட அநுமதியை மீறும் ஒரு செயலாகவும் இது காணப்படுகின்றது.

இந்த நாடானது அரசியலமைப்பினைக்கொண்டே ஆளப்படவேண்டும். ஆனால், மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பக்கொண்டல்ல. இதனை மாற்றவேண்டியது பாராளுமன்றத்தின் கடமையாகவுள்ளது.

சுதந்திரத்துக்கு முன்னர் தமிழ் மக்கள் பிரிவினை குறித்து சிந்தித்தார்களா: இல்லை. அதற்குப் பின்னரே எமது பல தலைவர்கள் குறிப்பாக, தந்தை செல்வநாயகம், பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க போன்றோருடன் தமிழ்மக்களுக்கான தீர்வு தொடர்பாக பேசினார். அன்று தொடக்கம் தமிழ் மக்களுக்கான தீர்வு முயற்சிகள் எடுக்கப்பட்டடே வந்தன.

ஆனால், என்ன நடந்தது? தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தவேண்டியேற்றப்பட்டது?
இதனை நீங்கள் அறிவீர்கள். ஆகவே, தமிழ் மக்கள் நிராகரிக்கும் அரசியலமைப்பொன்றினூடாக நாம் ஆளப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையில் 30 வருட காலமாக இடம்பெற்ற போரினை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச நாடுகள் பல இலங்கைக்கு உதவின. இந்த உதவிகளால் பாதிக்கப்பட்ட தரப்பாகவே தமிழ் மக்கள் மாறியிருக்கின்றனர். விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு, இன்று 10 வருடங்கள் கடந்துள்ள ஆனால், தமிழ் மக்கள் இரண்டாம்தர பிரஜைகளாகவே நடாத்தப்பட்டு வருகின்றனர். இதனை சர்வதேச சமூகம் சாதாரண பார்வையாளராக கடந்து செல்லமுடியாது.

நாங்கள் இலங்கையை பிரிக்க விரும்பவில்லை. இலங்கையை பிரிக்காது தீர்வைப் பெறுவதே எமக்கு பலமானதாக அமையும். ஆனாலும், சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாக உள்ளக சுயநிர்ணய உரிமைகையக் கோர எமக்கு நிச்சயம் உரித்து உண்டு. இதனை எவராவது தடுத்துவிடமுடியுமா?, தடுத்துவிட முடியாது.

இன்று, வடக்கு கிழக்கில் உள்ள மக்களுக்கு, எமக்கும் ஓர் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது. சிங்கள பௌத்த மயமாக்கல் செயல்பாடுகள் தமது பிரதேசத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்படும் காரணமாகவே, தமக்கான தீர்வு மறுக்கப்படுகின்றது என. இவ்விடயமும் சூட்சுமமாக முன்னெடுக்கப்படுகின்றது.

ஆகவே, அரசியலமைப்பு அதிகாரம் மத்தியில் இருப்பது, ஊழலுக்கே வழிவகுக்கும்.
நல்லிணக்க ஆணைக்குழு உங்களால் நியமிக்கப்பட்டது. அது குறிப்பிடுவதுபோன்று, தேசிய பிரச்னை தீர்க்கப்படவேண்டும். இது, உயர் தகமை வாய்ந்தவர்களாலேயே முன்வைக்கப்பட்டது. அதனை நிறைவேற்றாதிருப்பது உங்களது தவறு. ஆகவே, எல்.எல்.ஆர்.சி குறிப்பிடுவதுபோன்று, தேசிய பிரச்னையை தீர்க்க புதிய அரசியலமைப்பை உருவாக்குங்கள்; அதிகாரங்களை பரவலாக்குங்கள்.

1957இல் பண்டாரநாயக்க, பின்னர் டட்லி சேனநாயக்க, பின்னர் பிரமேதாஸ, பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க, அதன்பின்பு மகிந்த ராஜபக்சவினாலும், இப்போது, மைத்திரி-ரணில் கூட்டணியினாலும் இனப் பிரச்னையைத் தீர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவை முடிவுறுத்தப்படவில்லை எனவே, அவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுங்கள். இவ்வாறு, நாம் விரும்பாத அரசியலமைப்பின்கீழ் எம்மைத் தொடர்ந்தும் ஆள நினைந்தால், அது தவறாக அமையும். அத்தோடு, நீங்கள் தோல்வியடைந்த அரசாக, சர்வதேச அங்கீகாரத்தை இழந்து, செல்லுபடியற்ற
அரசாக மாற்றப்பட்டுவிடுவீர்கள்.

வடக்கிலும் கிழக்கிலும் வாழும் நாம், தொடர்ந்தும் இரண்டாம் தர பிரஜைகளாக வாழமுடியாது. நாங்கள் கௌரவத்துடன் வாழவேண்டும். ஆகவே, உச்சபட்ச அதிகார பரவலாகத்தை எமக்கு வழங்க நடவடிக்கை எடுங்கள். பிரிக்கப்படாத, ஒற்றுமைப்பட்ட இலங்கைக்குள் வாழவே நாம் விரும்புகின்றோம். இதனை உலக தலைவர்கள் பலரும் வலியுறுத்தியும் இருக்கின்றனர்.

இவ்வாறு, சம்பந்தன் தொடர்ந்து பேசுகையில் கூறினார்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ