ஈஸ்டர் தினத்தில் 25 தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன

0 14


ஈஸ்டர் தினத்தில் 25 தாக்குதல்களுக்கு திட்டமிடப்பட்டிருந்ததாக குற்ற புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தினத்தில் 25 தாக்குதல்கள் நடத்தப்பட திட்டம் வகுக்கப்பட்டதாக தெரிவித்த குற்ற புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஷானி அபேசேகர, எனினும் புலனாய்வு தகவல்கள் மூலமாக அவை முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதியில் குண்டுதாரியொருவர் இரண்டு மூன்று தடவைகள் குண்டை வெடிக்க வைப்பதற்காக முயற்சி செய்ததாகவும் அவர் தனது சாட்சியத்தில் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு தனது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. நேற்றையதினம் குற்ற புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஷானி அபேசேகர, இந்த தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகி பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.

2018ஆம் ஆண்டு டிசம்பரில் மாவனல்ல பகுதியில் புத்தர் சிலைகள்மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரணை செய்தபோது, இருவர் தொடர்பிலான தகவல்கள் வெளியாகின. தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றை விசாரணையில் பெற்று, அதனூடாக மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் விசாரணையில், 105 கிலோ வெடிபொருள்களும், வெடிக்கவைக்கும் கருவிகளும் மீட்கப்பட்டன. இவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சஹ்ரான்குறித்த தகவல் வெளியாகியதில் அவரைத் தேடி சென்றோம். குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்த நிலையில் பலரைக் கைதுசெய்தோம். இப்போது, 80 வீதமான விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளன. சஹ்ரான் குழுவில் பலரும் உயிரிழந்துவிட்டனர். எஞ்சியவர்கள் தடுப்பில் உள்ளனர். தீவிரவாதி சஹ்ரான் தொடர்பாக தகவல்கள் முன்கூட்டியே கிடைத்தபோதிலும் ஏன் அவரைக் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.

புலனாய்வுக் குறைபாடுகளே இதற்கு காரணம். குண்டுத் தாக்குதலைத் திட்டமிட்ட குழுவினர், எந்த இடத்தில் இருந்தார்கள் என்ற சரியான தகவல் கிடைத்திருக்கவில்லை. தாஜ் சமுத்திரா விடுதியில் குண்டுதாரி இரண்டு, மூன்று தடவைகள் குண்டை வெடிக்கச்செய்ய முயற்சி செய்திருக்கின்றார். எனினும், குண்டுகள் வெடிக்காததில் அவற்றை தெஹிவளைக்கு எடுத்துச்சென்று, அங்குள்ள விடுதி ஒன்றில்வைத்து பரிசோதனைசெய்தபோது வெடிப்பு இடம்பெற்றது.

ஷரியா சட்டத்தின்படி, 20 பேர்வரை மரண தண்டனை நிறைவேற்றி கொல்லப்பட்டதாக பிக்கு ஒருவர் முன்வைத்த தகவல் தொடர்பாக எங்களுக்கு முறைப்பாடு கிடைத்திருக்கிறது. விசாரணை தொடர்ந்தும் இடம்பெறுகிறது. என்றும் ஷானி அபேசேகர குறிப்பிட்டார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நேற்று இரவு அரச புலனாய்வுத்துறை தலைவர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன சாட்சியமளித்தார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரின் சாட்சியத்தினை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியின் குழு அறையில் பெறுவதில்லையென்றும், அதற்கு செய்தி ஊடகங்களை அநுமதிப்பதில்லையென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, நேற்று இரவு விவசாய அமைச்சின் ‘கொவிஜன மந்திரய’ எனப்படும் பாராளுமன்றத்துக்கு அருகில் உள்ள கட்டடத்தில் அவரின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ