தேசிய ஐக்கியத்துக்காக அனைவரும் உழைக்கவேண்டும் – ஜனாதிபதி

0 14

ஏப்ரல் தாக்குதல்களின் பின்னர் நாட்டின் தேசிய ஐக்கியத்துக்காக அனைவரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 சம்பவங்களால் சிதைந்த உள்ளங்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்கு, சமய தலைவர்கள் தலைமைத்துவத்தை வழங்கவேண்டும் என்பதுடன், குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி, அரசியல்வாதிகளும் இதற்காக தேசத்தின் பொறுப்பை நிறைவேற்றவேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு, தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற சமாதானம், ஐக்கியம் மற்றும் நல்லிணத்துக்கான தேசிய மாநாட்டில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“ஏப்ரல் 21ஆம் தேதி இடம்பெற்ற சம்பவங்களினால், இழந்த உயிர்களை மீண்டும் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டாலும், அடிப்படைவாதத்தை தோல்வியுறச்செய்து, எதிர்கால தலைமுறைக்காக நாட்டில் சமாதானம், ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

“ஏப்ரல் 21ஆம் தேதி இடம்பெற்ற சம்பவங்களுடன், நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சம், சந்தேகம் மற்றும் நம்பிக்கையீனங்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம். சமாதானம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவதைப்போன்று, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் நான் அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன்.

பயங்கரவாதத்துக்கு நாட்டில் எங்குமே இடமளிக்கப்போவதில்லை. அதை ஒழிப்பதற்காக அரச அதிகாரம் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

“நாட்டின் தேசிய ஐக்கியத்துக்காக, அனைத்து சமயத் தலைவர்களினதும் வழிகாட்டலில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கருத்துக்கு வரவேண்டும். அந்தவகையில், மக்கள் மத்தியில் அச்சம், சந்தேகம், நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலிருந்தும் அனைவரும் விலகியிருக்கவேண்டியது அவசியம்.’’ இவ்வாறு, அவர் குறிப்பிட்டார்

இலங்கையில் சமயங்களுக்கும் இனங்களுக்கும் மத்தியில், சமாதானம், சகவாழ்வு, சகிப்புத்தன்மை மற்றும் நம்பிக்கையை வளர்த்தல், பல்வேறு சமய பிரிவுகளுக்கு மத்தியில் சமாதானமாகவும் நல்லிணக்கமாகவும் வாழும் செய்தியை உலக மக்களுக்கு வழங்குவதும், நாட்டில் அனைத்து சமூக மக்களும் சமாதானமாகவும் நல்லிணக்கமாகவும் வாழ்வதை உறுதிப்படுத்துவதும், இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கமாகும்.

மாநாட்டில், சமய தலைவர்கள், முன்னணி அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ