மாலைதீவு முன்னாள் துணை ஜனாதிபதிக்கு இலங்கை தாக்குதலுடன் தொடர்பு?

0 23

படகு ஒன்றில் செல்லும்போது தமிழகம் தூத்துக்குடியில் கைதுசெய்யப்பட்ட மாலைதீவின் முன்னாள் துணை ஜனாதிபதி அஹ்ம்மத் ஆதீப், தூத்துக்குடி சென்று சில தினங்கள் தங்கியிருந்துவிட்டு பின்னர் இலங்கைக்குத் தப்பி வர திட்டமிட்டிருந்தமை முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதற்கு, தூத்துக்குடியில் உள்ள சிலர் உதவ சம்மதித்திருக்கிறார்கள். தூத்துக்குடியிலிருந்து இராமேஸ்வரம் சென்று, அந்த வழியாக இலங்கைக்குள் ஊடுருவும் திட்டத்தைத் தமிழக கடலோரக் காவல்படையினர் முறியடித்திருக்கிறார்கள்.

இலங்கையில் சில மாதங்களுக்கு முன்பு குண்டுவெடிப்புச் சம்பவம் நடைபெற்ற நிலையில், மாலைதீவு முன்னாள் துணை ஜனாதிபதி இங்கு வர திட்டமிட்டிருந்தது தற்செயலானதா அல்லது அவருக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினருடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து இந்திய மத்திய உளவுப்படையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த சந்தேகத்தையடுத்து, இந்திய தேசிய புலனாய்வு முகவராhன என்.ஐ.ஏ தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறது.

கேரளாவின் கொச்சி நகரில் சில மாதங்களுக்கு முன்பு 6 இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என்கிற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டனர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக ஒகஸ்ட் 2ஆம் தேதி அபு பஷிர் என்ற 29 வயது இளைஞர் கைதுசெய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த சாலி முகமது என்பவரையும், நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சுபான் அப்துல்லா என்பவரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைதுசெய்தனர்.

இந்த பின்னணியில், மாலைதீவின் முன்னாள் துணை ஜனாதிபதி இலங்கை வர திட்டமிட்டிருந்தது தற்செயலானதா அல்லது அவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என விசாரணை நடக்கிறது. தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர கண்காணிப்பிலிருக்கும் நிலையில் முன்னாள் துணை ஜனாதிபதி ஆதீப் தூத்துக்குடி வழியாகத் தமிழகத்துக்குள் ஊடுருவ முயன்ற சம்பவம் இந்திய மத்திய உளவுத்துறையினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அதனால், தூத்துக்குடியில் அவருக்கு அடைக்கலம் கொடுக்க முன்வந்த நபர்கள் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

00000000000
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு 12 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள்

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு புனித ஹஜ் பெருநாள் எதிர்வரும் 12 ஆம் திகதி என கொழும்பு பெரிய பள்ளிவாயல் இன்று அறிவித்துள்ளது.
துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இடம்பெற்றது.
நாட்டின் பல பாகங்களிலும் துல்ஹஜ் தலைப்பிறை தென்பட்டுள்ளதனால், துல்கஃதா மாதத்தை 29 ஆக நிறைவு செய்வதாகவும் பிறைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை முஸ்லிம்களுக்கு புனித அரபா தினம் 11 ஆம் திகதி அமையவுள்ளதாகவும் பிறைக் குழு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ