குண்டுத்தாக்குதல் தொடர்பில் உளவுத்துறைத் தகவல் கிடைக்கவில்லை – ரணில்

0 8

கொழும்பிலிருந்து குமார்-ராஜா

ஏப்ரல் 21ஆம் தேதிக்கு முன்னர், தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து எந்த உளவுத்துறை தகவலையும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவு பெற்றுக்கொள்ளவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி, பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட, விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் சாட்சியம் வழங்கினார்.

இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்த்து போராடுவதற்கு போதுமான சட்டங்கள் இயற்றப்படவில்லை என்பது எனது கருத்து. வெறுக்கத்தக்க பேச்சுக்கு எதிராக, புதிய சட்டத்தை நீதி அமைச்சு தயாரிக்கிறது. பயங்கரவாதம் தொடர்பான தற்போதைய சட்டங்களை மீண்டும் தட்டிப்பார்ப்பது அவசியம் என, தெரிவுக்குழு முன் பிரதமர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கும் தனக்குமிடையிலான உறவுகளின் பாதிப்பு இந்த மோசமான புலனாய்வு தவறுக்கு காரணமாகுமா என்பதுபற்றி சரியாக கூறத் தெரியவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க

பிரதி சபாநாயகர்: தாக்குதல் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கூறப்படுகின்றன. புலனாய்வு தகவல்கள் உங்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது.

பதில் : வாரத்தில் 2, 3 தடவைகள் சட்டம் ஒழுங்கு அமைச்சரினால் எனக்கு அறிக்கை கிடைக்கும். ஐ.எஸ்.ஸிற்கு ஒத்துழைப்பு வழங்கும் அந்த கருத்துள்ள நபர்கள் பற்றிய தகவல்களும் எமக்கு கிடைத்தன. முதற்றடவையாக சிரியா சென்று இறந்த நபர் பற்றிய தகவல் தாமதமாக கிடைத்தது. அதன் பின்னர் இறந்த நபர் பற்றியும் தகவல் கிடைத்தது. சிரியா சென்று வந்த சிலர்பற்றி புலனாய்வு பிரிவு தகவல் திரட்டியது. ஆனால், பயங்கரவாத செயல்பாடுகள் குறித்து தகவல் கிடைக்கவில்லை. பல்வேறு விடயங்கள் குறித்தும் சட்டம் ஒழுங்கு அமைச்சு எனக்கு தகவல் வழங்கும்.

பிரதி சபாநாயகர்: அடிப்படைவாத அமைப்புகள் குறித்து புலனாய்வு தரப்பு உங்களுக்கு தெரியப்படுத்தியதா?

பதில் : பாதுகாப்பு சபையில் இது பற்றி ஆராயப்பட்டது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சகல விடயங்கள் குறித்தும் தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்க: சகல பாதுகாப்பு சபை கூட்டங்களிலும் பங்குபற்றியுள்ளீர்களா?

பதில் : 2018 ஒக்ரோபர் மாதம்வரை பாதுகாப்பு சபைக்கு அழைப்பு வந்தது. அநேகமானவற்றில் பங்குபற்றியுள்ளேன். அதன்பின்னர் அழைப்பு வரவில்லை. இதுபற்றி ஆராய்ந்தபோது, பெப்ரவரி மாதத்தின் பின்னர் பாதுகாப்பு சபை கூடவில்லை என அறிந்தேன்.

ரவி கருணாநாயக்க: பாதுகாப்பு சபைக்கு அழைக்கப்படவில்லை என வினவினீர்களா?

பதில் : இல்லை. பாதுகாப்பு சபை கூடவில்லையென அறிந்தேன். தன்னையும் அழைக்கவில்லை என பொலிஸ் மாஅதிபர் என்னிடம் கூறினார்.

ரவி கருணாநாயக்க: பாதுகாப்பு சபைக்கு செல்லாமல் எவ்வாறு பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பெற்றீர்கள்?

பதில் : பாதுகாப்பு சபையைவிட, சட்டம் ஒழுங்கு அமைச்சினூடாக தான் தகவல்களை பெற்றேன். பாதுகாப்பு சபையில் தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டன.

ரவி கருணாநாயக்க: முப்படை உங்களுக்கு தகவல் அளித்ததா? 2014ஆம் ஆண்டுமுதல் மத அடிப்படைவாதம் பற்றி தகவல் பரிமாறப்பட்டுள்ளது?

பதில் : சட்டம் ஒழுங்கு அமைச்சினூடாகத்தான் தகவல் கிடைத்து வந்தது. முப்படை தகவல்கள் பாதுகாப்பு சபையில்தான் கிடைத்தது.

ரவி கருணாநாயக்க: காத்தான்குடியில் அடிப்படைவாதம் இருப்பது குறித்தும், இலங்கை ஐக்கியத்துக்கு முரணான விடயங்கள் இடம்பெறுவதாகவும் தகவல் கிடைத்ததா?

பதில்: காத்தான்குடிதான் அடிப்படைவாதத்தின் மத்திய நிலையமாக இருப்பதாக தகவல் கிடைத்தது.அரசியல் ரீதியான விடயங்கள் தொடர்பில் அரசியல் வாதிகளூடாக கையாண்டேன். 2018ஆம் ஆண்டிலிருந்து ஸஹ்ரான் குறித்து தேடப்பட்டது. அவர் தலைமறைவாகியிருந்தார்.

ரவி கருணாநாயக்க: புலனாய்வு தகவல்களை பரிமாற்றுவதில் குறைபாடு காணப்படுகிறதா?

பதில்: பாதுகாப்பு சபையில் புலனாய்வு தகவல்கள் பரிமாறப்படுகிறது. தகவல் பரிமாற்றம் எவ்வளவு தூரம் நடந்தது என்று தெரியாது.

ரவி கருணாநாயக்க: துருக்கி தூதுவர் தமது நாட்டு அமைப்பு குறித்து தெரியப்படுத்தியிருந்தாரா?

பதில் : துருக்கி தூதுவர் என்னுடன் கதைத்தார். தமது நாட்டு அமைப்பு பற்றி கூறினார். பாதுகாப்பு பிரச்னை எதுவும் எழவில்லை என பாதுகாப்பு தரப்பு கூறியது. புலனாய்வு தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஐ.எஸ் தொடர்பில் அமெரிக்கா, இந்தியாபோன்ற நாடுகளிலிருந்து தகவல் கிடைத்தது.

நளிந்த ஜயதிஸ்ஸ: பாதுகாப்பு சபையில் இருக்கவேண்டிய உறுப்பினர்கள் யார்?

பதில்: நான் இருந்த அரசாங்கங்களில் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர்,,முப்படை தளபதிகள், புலனாய்வு பிரதானிகள், பொலிஸ் மா அதிபர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், சிலவேளை நீதி அமைச்சின் செயலாளர் கலந்துகொள்வர்,

நளிந்த ஜயதிஸ்ஸ: நீங்கள் பிரதமராக செயலாற்றிய காலப்பகுதிகளில் இம்முறைதானா முதல்தடவையாக 6 மாதங்கள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை?

பதில்: பெபப்ரவரி மாதத்தின் பின்னர் பாதுகாப்பு சபை கூடவில்லை. பாதுகாப்பு சபை மாதம் ஒரு தடவை கூடும். சிலவேளை 3 வாரம் 5 வாரத்துக்கு ஒரு தடவையும் கூடும்.

நளிந்த ஜயதிஸ்ஸ: 2018 ஒக்ரோபரின் பின்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதா?

பதில்: ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள். எல்.ரீ.ரீ.ஈ தலைதூக்குகிறதா, ஐ. எஸ். ஆதரவான குழுக்கள் என்பன குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

நளிந்த ஜயதிஸ்ஸ: 2015இலிருந்து 2018வரை அடிப்படைவாத குழுக்கள்பற்றி முஸ்லிம் அமைப்புகளும் மௌலவிமாரும் தகவல் வழங்கியுள்ளனர். ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

பதில்: பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு இதுதொடர்பில் அறிவுறுத்தப்பட்டது. இரு பள்ளிவாசல்களுக்கு இடையிலான பிரச்னையே காணப்பட்டது. பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை நடாத்தியது. சட்ட மா அதிபர் திணைக்களமும் இதுதொடர்பில் அறிவித்திருந்தது. 2018இல் ஸஹ்ரானை கைதுசெய்ய உத்தரவு பெறப்பட்டது. ஸஹ்ரான் வெ ளிநாடு சென்றதாக கூறப்பட்டது. இந்தியா சென்றதாகவும் கூறப்பட்டது.

நளிந்த ஜயதிஸ்ஸ: அம்பாறை மற்றும் திகன சம்பவங்களின்போது சட்டம் ஒழுங்கு அமைச்சராக நீங்கள் செயல்பட்டீர்கள். இதன் பின்னர் அடிப்படைவாத குழுக்கள் வளர்ச்சி கண்டதா என்பது குறித்து ஆராய்ந்தீர்களா?

பதில்: இந்த சம்பவங்களின் பின்னர் சிரியாவுக்கு சென்றுவந்த குழுக்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. தாக்குதல்கள் தொடர்பில் இவர்கள் கோபத்துடன் இருந்துள்ளார்கள்.

நளிந்த ஜயதிஸ்ஸ: தௌஹீத் ஜம் ஆத் அமைப்பை தடைசெய்வதுபற்றி பாதுகாப்புச் சபை கவனம் செலுத்தவில்லையா?

பதில்: முதலில் இந்த அமைப்புக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கான காரணத்தைத் தேடிப்பார்க்கவேண்டியிருந்தது. இதன்போது பாயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அவர்கள் பற்றி எமக்கு அறிக்கை கிடைத்தது.

நளிந்த ஜயதிஸ்ஸ: மதரசா பாடசாலைகளை கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையா?

பதில் : மதரசா பாடசாலைகளை கண்காணிக்கும் பொறுப்பு முஸ்லிம் விவகார அமைச்சுக்கு வழங்கப்பட்டிருந்தது. மதரசா பாடசாலைகளில் கற்பிக்கவரும் நபர்கள்பற்றி எமக்கு முன்னர் எந்தவிதமான அறிக்கையும் கிடைத்திருக்கவில்லை. குண்டுத் தாக்குதல்களின் பின்னர் உள்விவகார அமைச்சு குறிப்பிட்ட எண்ணிக்கையைக்கொண்ட வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் வந்திருப்பதாக அறிக்கையிட்டிருந்தார். அதன்பின்னரே எமது கவனம் செலுத்தப்பட்டு, அவ்வாறானவர்களை திருப்பியனுப்ப நடவடிக்கை எடுத்தோம்.

நளிந்த ஜயதிஸ்ஸ: அரபு மொழிப் பயன்பாடு தொடர்பில் உங்களுக்கு அறிவிக்கப்பட்டதா?

பதில்: அரபு மொழிப் பயன்பாடு தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டபோது அரசாங்க அலுவலகங்களிலோ அல்லது மாகாண நிறுவனங்களிலோ அவ்வாறான அரபு மொழிப் பயன்பாடு இல்லையென்றே பதில் வழங்கப்பட்டது. தனியார் நிறுவனங்களில் அவ்வாறான பயன்பாடு இருந்திருக்கலாம்.

நளிந்த ஜயதிஸ்ஸ: இந்தக் குழு அடிப்பைட வாதத்திலிருந்து அப்பால் செல்லத் தொடங்கியிருந்தார்கள். வவுணதீவு பொலிஸ் படுகொலை, மாவனல்ல தாக்குதல் போன்ற சம்பவங்களைக் குறிப்பிடப்படலாம். இதுபற்றி…

பதில்: இதுபற்றி கலந்துரையாடினோம். குறிப்பாக, அமைச்சர் கபீர் ஹாசிம் தனது செயலாளர் தாக்கப்பட்ட சம்பவம்பற்றிக் கூறியிருந்தார். பொலிஸ் அதிகாரிகளின் படுகொலையுடன் இவர்களுடைய தொடர்பு இருப்பதாக அறிக்கையிடப்பட்டிருக்கவில்லை. கபீர் ஹாசிம் அமைச்சரின் செயலாளர் மீதான தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

நளிந்த ஜயதிஸ்ஸ: புலனாய்வுத் தகவல் பற்றி நடவடிக்கை எடுக்கப்படவில்லையென கருதுகின்றீர்களா?

பதில் : வனாத்தவில்லு தொடர்பில் அறிக்கையிடப்பட்டிருந்ததுடன், அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. வழக்குத் தொடர்வதற்குப் போதுமான சாட்சிகள் இருந்தனவா என்பது பற்றித் தெரியாது. அமைச்சர் கபீர் ஹாசிமிடமும், பொலிஸ் மா அதிபரிடமும் நான் தொடர்ச்சியாக ஆராய்ந்து வந்தேன். போதியளவு சாட்சி இருந்ததா என்பது பற்றித் தெரியாது. பொலிஸாரின் படுகொலையுடன் இவர்களின் தொடர்பு இல்லாவிட்டாலும், கிழக்கு மாகாணத்தில் தேடிப்பார்க்குமாறு கூறியிருந்தேன்.

நளிந்த ஜயதிஸ்ஸ: ஏப்ரல் 9ஆம் தேதி அனுப்பப்பட்ட புலனாய்வு எச்சரிக்கை உங்களுக்குக் கிடைக்கவில்லையா?

பதில் : தாக்குதலின் முன்னர் எனக்கு கிடைக்கவில்லை. பாதுகாப்புத் தரப்பினருக்கு அனுப்பப்பட்ட கடிதம் எனது பாதுகாப்புப் பிரிவுக்கும் கிடைக்கவில்லை. பிரதமர் பாதுகாப்புப் பிரிவுக்கும் கிடைக்கவல்லை. பொலிஸ் மா அதிபரும் பின்னர் இதனை ஏற்றுக்கொண்டிருந்தார்.

நளிந்த ஜயதிஸ்ஸ: தாக்குதலுக்கு முன்னரான தினத்தில்கூட தாக்குதல்கள் நடத்தப்படலாம் என தகவல்கள் கிடைத்திருந்தன. ஏப்ரல் 20, 21ஆம் தேதி உங்களுக்கு அவ்வாறான தகவல்கள் தெரியப்படுத்தப்பட்டனவா?

பதில் : எனது பாதுகாப்பு பிரிவுக்கு எந்தவித தகவலும் தெரியப்படுத்தப்படவில்லை. கடிதம் அனுப்பப்டிட்டிருந்தால் நான் பொலிஸாரிடம் கேட்டிருப்பேன். சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் நான் கொழும்பில் இருக்கவில்லை. கொழும்பு திரும்பிய பின்னரேயே இதுபற்றி எனக்குத் தகவல்கள் கிடைத்தன.

நளிந்த ஜயதிஸ்ஸ: தகவல் பொறிமுறையில் குறைபாடு உள்ளதா?

பதில்: 9ஆம் தேதியின் பின்னர் விடுமுறைகாலம் என்பதால், அதிகாரிகள் பலர் வெளிமாவட்டங்களுக்குச் சென்றிருந்ததால் நடவடிக்கை எடுப்பதில் குறைபாடுகள் இருந்திருக்கலாம்.

நளிந்த ஜயதிஸ்ஸ: அரசாங்க புலனாய்வு சேவையின் தலைவரும் உங்களுக்கு தகவல்களை வழங்குவாரா?

பதில்: அரசாங்க புலனாய்வுப் பிரிவின் தலைவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு கூறியிருந்தேன். 21ஆம் தேதி தாக்குதல் நடைபெறுவது தொடர்பில் எனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

ஜயம்பதி விக்ரமரத்ன: பாதுகாப்புச் சபைக் கூட்டம் முன்னைய சந்தர்ப்பங்களில் எப்படி கூட்டப்பட்டது?

பதில்: ஜே. ஆர். ஜயவர்த்தனவின் காலத்தில் சில சந்தர்ப்பங்களில் நான் கலந்துகொண்டிருந்தேன். 87ஆம் ஆண்டின் பின்னர் ஒவ்வொரு வாரமும் பாதுகாப்புச் சபை கூடியது. பிரேமதாச, விஜயதுங்க மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் பாதுகாப்புச் சபை கூடியது. எனினும், யுத்தம் முடிவடைந்த பின்னர் நிலைமைகள் மாறியிருந்தன. வாரவாரம் கூடவேண்டிய தேவை இருந்ததா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஜனாதிபதி இல்லாத நேரத்தில் பிரதமரின்கீழ் தேசிய பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டுள்ளது. அக்காலத்தில் தேசிய பாதுகாப்புச் சபை மற்றும் இணைந்த நடவடிக்கை குழு என இரண்டு சபைகள் இருந்தன. சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் ஒரு பிரிவு இருந்தது.

ஜயம்பதி விக்ரமரத்ன: குண்டுத் தாக்குதலின் பின்னர் நீங்கள் பாதுகாப்புச் சபையைக் கூட்டியிருந்தீர்கள் அதுபற்றி கூறுங்கள்?

பதில் : அலரிமாளிகைக்கு வருமாறு நான் அவர்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்கள் அங்கு வருவதில் காலதாமதம் இருப்பதை உணர்ந்தமையால் நான் நேரடியாகப் பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று பாதுகாப்புச் சபையைக் கூட்டுவதற்குத் தீர்மானித்தேன். கடந்த காலங்களிலும் எனக்கு அவ்வாறான அனுபவம் உண்டு.

ஏம். ஏ. சுமந்திரன்: பாதுகாப்புச் சபைக் கூட்டம் அடுத்து எப்போ கூட்டப்படும் என்பது உங்களுக்கு அறிவிக்கப்படுமா?

பதில்: பாதுகாப்பு அமைச்சு அல்லது ஜனாதிபதி செயலகம் அடுத்த பாதுகாப்புச் சபைக் கூட்டம் எப்போது என்பது பற்றி எமக்கு அறிவிக்கும். மாதத்துக்கு ஒருதடவை நடத்தப்பட்டதாகவே எனக்கு நினைவு உள்ளது.

ஏம். ஏ. சுமந்திரன்: தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் பெப்ரவரி மாதம் நடைபெற்றதாக அறிந்ததாக கூறினீர்கள்?

பதில்: நான் பொலிஸ் மா அதிபரிடம் கேட்டேன். தானும் அழைக்கப்படவில்லையென அவர் கூறியதுடன், பாதுகாப்புச் சபை இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

எம். ஏ. சுமந்திரன்: இந்த நிலைமை 2018 ஒக்டோபர் மாதத்தின் பின்னர் ஏற்பட்ட நிலைமையாகும். பிரதமர் தேசிய பாதுகாப்புச் சபைக்கு அழைக்கப்படவில்லை என்பதை யாரிடமாவது கேட்டீர்களா?
பதில்: பாதுகாப்புச் சபை இரத்துச் செய்யப்பட்டுள்ளதென்றே நான் நினைத்திருந்தேன், பாதுகாப்புச் செயலாளரிடம் கேட்டபோதும் அவரும் அவ்வாறே கூறியிருந்தார்.

எம். ஏ. சுமந்திரன்: தேசிய பாதுகாப்புச் சபை மீண்டும் கூட்டப்படாது என அறிந்துகொண்டபோது, இதுபற்றி ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதுபற்றியோ, மக்களுக்கு தெரியப்படுத்துவது பற்றியோ நீங்கள் யோசிக்கவில்லையா?

பதில்: ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றி தகவல்கள் இருக்கவில்லை. போதைப்பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது. நான் ஜனாதிபதியிடம் கேட்கவில்லை. எனினும், சட்டம், ஒழுங்கு என தனியான அமைச்சு இருக்கவேண்டும். அதுவே வினைத்திறனான செயல்பாடாக இருக்கும் எனக் கருதியிருந்தேன். ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்ட விடயம் குறித்த விசாரணை முடிவடைந்த பின்னர் சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். இது, தனிப்பட்ட விடயமாக இருக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

எம். ஏ. சுமந்திரன்: 2014ஆம் ஆண்டிலிருந்து இதுதொடர்பில் தகவல்கள் உள்ளன. 2015ஆம் ஆண்டிலிருந்து அடிப்படைவாதம் வளர்ச்சியடைவதாக தகவல்கள் இருந்துள்ளன. அவ்வாறான சூழ்நிலையிலேயே நீங்கள் பிரதமராகப் பதவியேற்றிருந்தீர்கள். சட்டம் அமைச்சர்களிடமிருந்து அறிக்கைகள் பெற்றிருந்தாகவும் கூறியிருந்தீர்கள். இது சரியா?

பதில்: 2014ஆம் ஆண்டிலும் அறிக்கையிடப்பட்டிருந்தது. 2016ஆம் ஆண்டிலிருந்து நிலைமை மாற்றமடைந்திருந்தது. பாதுகாப்பு கோணத்தைவிட, அரசியல் கோணத்திலிருந்தும் இது பார்க்கப்பட்டது.

எம், ஏ. சுமந்திரன்: காத்தான்குடியில் சட்டம் ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதுபோன்ற பிரச்னைகள் இருந்தன. இதுபற்றி உங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்ததா?

பதில்: சட்டம், ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுவதில்லையென எனக்குத் தகவல்கள் கிடைத்திருக்கவில்லை. பயங்கரவாத செயல்பாடுகுள் பற்றியோ ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புத் தொடர்புகள் பற்றியோ கிடைக்கவில்லை.

எம். ஏ. சுமந்திரன்: அடிப்படைவாதத்தை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதுபற்றி கலந்துரையாடியிருந்தீர்களா?

பதில்: எமது பங்காளிக் கட்சிகள், சுயாதீன நபர்களுடன் இதுபற்றிக் கலந்துiயாடிருந்தேன். பயங்கரவாதம் இல்லையெனின் அடிப்படைவாதம் அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்படவேண்டும் என எண்ணியிருந்தேன். எதிர் அரசியல் நடவடிக்கைகளாலேயே அடிப்படைவாதம் தோற்கடிக்கப்பட முடியும் என பாதுகாப்பு அமைச்சும் ஆலோசனை வழங்கியிருந்தது.

எம். ஏ. சுமந்திரன்: உங்கள் பாதுகாப்பு பிரிவுக்குக்கூட அறிவிக்கப்படவில்லையெனக் கூறப்பட்டது. எனினும், சில அமைச்சுக்களின் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டதா?

பதில்: அவர்களுக்கு ஒருபோதும் இவ்வாறான தகவல்கள் கிடைத்திருக்கவில்லை. ஏனெனில், நான் விடுமுறைக்காக நுவரெலியா சென்றிருந்தேன். அங்கு நான் சுதந்திரமாக நடமாடியிருந்தேன். அச்சுறுத்தல் பற்றிய தகவல் கிடைத்திருந்தால் என்னை எச்சரித்திருப்பார்கள். எனது பாதுகாப்புப் பிரிவுக்கு அறிவிக்கவில்லையென்பதை பொலிஸ் மா அதிபரும் பின்னர் ஏற்றுக்கொண்டிருந்தார்.

எம். ஏ. சுமந்திரன்: பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குச் சென்றபோது எதிர்ப்புக்கள் இருந்தனவா?

பதில்: நான் அங்கு தலைமையேற்றேன். உடனடியாக செயல்பாடுமாறு பணிப்புரைவிடுத்தேன். மாலையானபோது, நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 9ஆம் தேதிக்கும் 20ஆம் தேதிக்கும் இடையில் இடம்பெற்ற நிகழ்வுகள் முக்கியமானவை.

எம். ஏ. சுமந்திரன்: காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் விடுக்கப்பட்டமைபற்றி எப்போது தெரிந்துகொண்டீர்கள்?

பதில்: அடுத்தநாள் 17ஆம் தேதி அல்லது 18ஆம் தேதி அறிந்துகொண்டேன். விசாரணை நடைபெறுவதாகக் கூறியிருந்தார்கள். ஏப்ரல் 9ஆம் தேதி கிடைத்த தகவலுடன் தொடர்புபட்டதாக நான் கருதவில்லை. வேறொரு சம்பவமாகவே எனக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

எம். ஏ. சுமந்திரன்: ஒக்ரோபர் மாதத்தின் பின்னர் உங்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டது. இது, இந்த மோசமான புலனாய்வு தவறுக்கு காரணமாகும் என கருதுகின்றீர்களா?

பதில்: இதுபற்றி சரியாக கூறத் தெரியவில்லை. ஏன் எனது பாதுகாப்புப் பிரிவுக்கு அனுப்பப்படவில்லையென்து தெரியவில்லை. இந்தக் கேள்விகளுக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு சிறந்த பதிலாக இருக்கும் என்பதாலேயே இந்த முயற்சிக்கு நான் ஒத்துழைப்பு வழங்கியிருந்தேன்.

ஆஷஜ் மாரசிங்க: 2018 டிசம்பர் மாதத்தின் பின்னர் உங்களுக்கும் பாதுகாப்புப் பிரிவுக்கும் இடையில் முரண்பாடிருந்ததா?

பதில்: அவர்களிடமிருந்து அறிக்கை கிடைக்கவில்லை. தனிப்பட்ட ரீதியில் அவர்களுடன் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆஷஜ் மாரசிங்க: மதரசாக்களை நிர்வகிப்பது மற்றும் புதிய சட்டங்களை இயற்றுவது பற்றிய நடவடிக்கைகள் எந்தளவில் உள்ளன?

பதில்: மதரசா தொடர்பில் சட்டத்தை தயாரிக்கும் பொறுப்பை கல்வி மற்றும் முஸ்லிம் விவவகார அமைச்சுக்கு கையளித்துள்ளோம். ஏனைய முஸ்லிம் அமைச்சர்களின் கருத்துக்களையும் பெற்று சட்ட வரைபொன்றை தயாரிக்குமாறும், நாட்டுக்கு சூவுறு சட்டங்கள் அவசியப்படுவதால் அதுபற்றி ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கையிடுமாறு நீதியமைச்சு உள்ளிட்ட அமைச்சர்களுக்குக் கூறியுள்ளேன். 2000ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டுவரையான காலப் பகுதியில் பிரித்தானியா நடைமுறைப்படுத்திய சட்டங்களை அடிப்படையாகக்கொண்டு சட்டவரைபுகளைத் தயாரிக்குமாறே நாம் கூறியுள்ளோம். பல அமைச்சுக்களை இணைத்து செயல்படவேண்டிய தேவையுள்ளது.

ரவி கருணாநாயக்க: வெறுக்கத்தக்க பேச்சு குறித்த சட்டம் முக்கியமானதாகும். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

பதில்: சட்டம் அவசியமாகும். வெறுக்கத்தக்க பேச்சுப் போன்ற விடயங்கள் தொடர்பில் நீதியமைச்சு சட்டங்களைத் தயாரித்து வருகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட வன்முறையொன்று முன்னெடுக்கப்பட்டது. எனினும், சகல மதத் தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வெறுக்கத்தக்க பேச்சுத் தொடர்பான சட்ட வரைபை நீதியமைச்சு தயாரித்துள்ளது. இது குறித்த அறிக்கையை அனுப்புமாறு கோரமுடியும். இதனைக் கண்காணிப்பதற்கு தனியான பிரிவொன்று அவசியமாகும்.

சரத் பொன்சேகா: பயங்கரவாதத்தை அடையாளம் காண்பதற்கும் அதனை தடுப்பதற்கும் தேவையான அனுபவம் அமைச்சர்களுக்கு இல்லையென நான் கருதுகின்றேன்?

பதில்: 2018ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம்வரை இவர்கள் பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் இருக்கவில்லை. அடிப்பைடவாத செயல்பாடுகுள் பற்றியே எமக்கு அறிக்கை கிடைத்திருந்தது. அனுபவம் உள்ளவர்களையே இந்த அமைச்சுக்களுக்கு நியமிப்பார்கள். அனுபவம் இருந்தால் சிறப்பானதாக இருக்கும். பாதுகாப்புப் பிரிவில் இல்லாவிட்டாலும் அனுபவம் வாய்ந்தவர்களின் பெயர்களையே நாம் அனுப்பியிருந்தோம்.
சரத் பொன்சேகா கேள்வி : இஸ்லாம் அடிப்படைவாதமும், பயங்கரவாதமும் வெவ்வேறான விடயங்களாகவே இங்கு பேசப்பட்டது. இஸ்லாம் பயங்கரவாதம் உள்ள நாடுகளில் முதலில் அடிப்படைவாதமே தோன்றுகிறது. இதனை அடையாளம் காண்பதில் குறைபாடு உள்ளதா?
பதில் : அடிப்படைவாதத்திலிருந்தே பயங்கரவாதத்துக்கே செல்கின்றனர். எமது புலனாய்வுப் பிரிவினர் அஅந்த இடத்தையே அடையாளம் காணவேண்டும். எமது பொறிமுறையானது எல்.ரி.ரியினரை கையாள்வதற்காக குஉருவாக்கப்பட்டது. எனின்த்தான் நாம் உலகத்துடன் உள்ள விடயங்களுடன் இணைவதற்கு நாம் முன்வரவேண்டும்.
சரத் பொன்சேகா கேள்வி : சஹரானுக்கு எதிராக பிடியாணை இருந்தபோதும் அவரைக் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
பதில் : சஹரான் இலங்கையிலிருந்து வெளியேறியிருப்பதாக சந்தேகப்பட்டனர். சட்டவிரோதமான முறையில் தப்பிச் சென்றிருக்கலாம் என்றே அவர்கள் நம்பியிருந்தனர். அதன் பின்னரே இவரைப்பற்றித் தேடிப்பார்த்திருக்க வேண்டும். எனினும் அப்போது நாம் அரசாங்கத்தில் இருந்திருக்கவில்லை.
எம்.ஏ.சுமந்திரன் கேள்வி : புலனாய்வு பிரிவுகளால் தகவல் சூசுகரிப்பதில் குறைபாடு இருந்ததாக நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில் : இதில் குறைபாடுகள் இருக்கின்றன. சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஊடாகவே நான் செயற்பட்டிருந்தேன். யுத்த காலத்தில் இந்த அமைச்சின் ஊடாக பல தகவல்கள் கிடைத்திருந்தன. எனக்குத் தேவையாக இருந்தது இந்த அமைச்சின் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ளவே;டியிருந்தது.
சரத் பொன்சேகா கேள்வி : நாட்டில் தொடர்ந்தும் பலர் கைதுசெய்யப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. இந்த அச்சுறுத்தல் நீங்கவில்லையெனக் கருதுகின்றீர்களா?
பதில் : இந்த சதியுடன் சம்பந்தப்பட்டவர்கள் உயிருடன் இருந்தால் அனைவரும் கைதுசெய்யப்பட்டு;ளனர். இதுதவிரவும் இந்த அமைப்புக்களுடன் சம்பந்தவ்வட்ர்வர்கள் இருக்கலாம். முகாம்களுக்குச் சென்றவர்கள் மாத்திரமன்றி இந்தக் குழுகளும் ச்ந்பதவர்கட தேனுயீர்சூகுhப்பையொன்றைப புருகியிருந்தால் அவர்களையம் விவாரிக்க சூவுண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது ஒரிடத்துடன் முடிடைவாயாது. இதுபற்றி கதைப்பவர்கள் கூட கைதுசெய்யப்பட சூவுண்டும். சம்பந்தப்பட்ட விசாரணைகளில் ஒன்று முடிவடைந்தது என்று நாம் திருப்தியடைய முடியாது. ஒரு குழு முடிந்தாலும் மற்றுமொரு குழு அதனைத் தொடரமுடியும். இதில் யாருடைய கருத்துக்கள் இருக்கின்ற என்பதே சவாலாகும். ஆயுதம் என்பது துப்பாக்கி மாத்திரமல்ல புதிய யுகத்துக்கு வந்துள்ளோம் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

சரத் பொன்சேக: ஒரு பயங்கரவாத நடவடிக்கை மட்டுமே முடிந்துள்ளது. மேலும் இடம்பெறலாம் இதனை நான் ஆரம்பம் முதல் கூறிவருகிறேன்.

பதில்: தனிநபர் ஒருவர்கூட இதனை முன்னெடுக்கலாம். இதுதொடர்பில் மிக அவதானமாக இருக்கவேண்டும்.

சரத் பொன்சேக: எதிர்க்கட்சி துண்டுப்பிரசுரம் வெளியிட்டுள்ளது; நாட்டில் பாதுகாப்பு கிடையாது என அவர்கள் கூறிவருகின்றனர்.

பதில்: நாட்டின் பாதுகாப்பு நிலைமை சிறப்பாக இருக்கிறது. எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டில் உண்மை கிடையாது. அவர்களின் காலத்திலும் பாதுகாப்பு பிரச்னை இருந்தது. புற்றுநோய் பரவாமல் தடுக்கவேண்டும்.

நளின்: தாக்குதல் தொடர்பில் 9ஆம் தேதி தகவல் கிடைக்கவில்லை என்றீர்கள். இந்திய தூதரகத்துக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது பற்றி?

பதில்: இந்திய தூதரகத்துக்கு இடைக்கிடை பாதுகாப்பு எச்சரிக்கை வரும்

நளின்: 21ஆம் தேதி தாக்குதல் நடந்து 21 நாட்களின் பின்னர் குருணாகலிலும் வேறு பகுதிகளிலும் பள்ளிகள், கடைகள் தாக்கப்பட்டன. மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஏன்முடியவில்லை?

பதில்: பல இடங்களில் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. அரசியல் ரீதியில் செயல்படலாம் என தகவல் இருந்தது.

நளின்: 19ஆவது திருத்தத்தில் பிரதமரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன. பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு அமைச்சு இன்றி, பிரதமரின் பொறுப்பு எவ்வாறிருக்கும்?

பதில்: சட்டம், ஒழுங்கு அமைச்சினூடாகவே தகவல் பெறப்படும். முழுநேர சட்டம், ஒழுங்கு அமைச்சர் அவசியம். இணையத்தளத்தினூடாகக்கூட ஆதரவாளர்கள் சேரலாம். ஸஹ்ரானை சந்திக்காதவர்கள்கூட விரிவுரை கேட்டு இணைந்துள்ளனர்.

சுமந்திரன்: திகன சம்பவத்தின் பின்னர் ஸஹ்ரானின் ஆதரவாளர்கள் அதிகரித்துள்ளனர். 1983 தாக்குதலின் பின்னர் புலிகளின் பலம் கூடியது. இதனை எப்படி தடுக்கலாம்?

பதில்.1983 வன்முறையால் நாட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. இஸ்லாத்துக்கு எதிரான அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனை பாதுகாக்கவேண்டும் என்றும் கருதியே பயங்கரவாத அமைப்பில் பலர் இணைந்தார்கள்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ