மைத்திரி கம்போடியா பயணம்

0 6

இலங்கைக்கும் கம்போடியாவுக்குமிடையில் இருந்துவரும் நீண்டகால உறவுகளை புதிய துறைகளுக்கு விரிவுபடுத்தி, பரஸ்பர நலன்களை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கம்போடிய அரசாங்கத்தின் விசேட அழைப்பின்பேரில் கம்போடியாவுக்கு பயணமான ஜனாதிபதி, இன்று முற்பகல் கம்போடியாவின் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
ஜனாதிபதியை கம்போடியா நாட்டின் பிரதிப் பிரதமர் உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

தனது இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கம்போடியா நாட்டின் மன்னரைச் சந்திக்கவுள்ளதுடன், கம்போடியாவின் பிரதமர் உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்.

இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார, வர்த்தக, சுற்றுலா மற்றும் பௌத்த சமய தொடர்புகளை விரிவுபடுத்துவதுபற்றி இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், இவை தொடர்பான புதிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.

இதேவேளை, இலங்கை-கம்போடிய வர்த்தக மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்விலும் மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வார்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ