இந்துக்கள் வேடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்? தமிழகத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு

0 26

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக இந்திய மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருப்பதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்ள்ளது. வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இத் தாக்குதலை நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதிகளுடன் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடாத்திய சோதனையில் சிலர் சிக்கினார்கள்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து எழுந்துள்ள சூழ்நிலைகள் காரணமாகவும், சுதந்திர தினத்தை முன்னிட்டும் சென்னையிலும், தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் ஏற்கனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த சூழ்நிலையில், இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தைப்போன்று இந்தியாவிலும் அதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை அனைத்து மாநில பொலிஸ் டி.ஜி.பி.களுக்கும் எச்சரிக்கை அறிவித்தல் விடுத்தது.

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தால், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் நாடு முழுவதும் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக எச்சரிக்கை விடுத்த மத்திய உளவுத்துறை, நேற்று முன்தினம் தமிழக பொலிஸ் டி.ஜி.பி. ஜே. கே. திரிபாதிக்கு அவசர அறிவித்தல் ஒன்றை அனுப்பியது. ‘இலங்கையிலிருந்து லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்துக்கள்போன்று மாறுவேடமிட்டு, தமிழகத்தில் தாக்குதல் நடத்தும் திட்டத்தோடு நுழைந்திருக்கும் பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 5 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்துக்கள்போன்று நெற்றியில் விபூதி பூசியும், திலகமிட்டும் அவர்கள் மாறுவேடத்தில் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். தற்போது அந்த பயங்கரவாத குழு கோவையில் இருக்கிறது. முக்கிய மத வழிபாட்டு தலங்கள், வெளிநாட்டு பயணிகள் அதிகம் வரும் சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு அந்த பயங்கரவாத குழு இலக்கு நிர்ணயித்துள்ளது.

‘மேலும், முக்கிய பாதுகாப்பு துறை அலுவலகங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், மத்திய-மாநில அரசுகளின் முக்கிய அலுவலகங்களில் தாக்குதல் நடத்துவதற்கும் அவர்கள் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்று கருதப்படுகிறது. இதேபோல், இந்து மத தலைவர்கள் மற்றும் வழிபாட்டு தலங்களையும் இலக்காக நிர்ணயிக்கக்கூடும். எனவே, அனைத்து மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் நுண்புலன்பிரிவின் செயல்பாடுகள் உடனடியாக ‘உஷார்’ நிலையை அடையவேண்டும்.

‘ஊடுருவியவர்கள், மர்ம நபர்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து, பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடிக்க வேண்டும். இதேபோல, சட்ட விரோதமாக படகுகளில் ஊடுருவல்காரர்கள் நகர்வு இருக்கிறதா என்பதையும் கண்காணிக்கவேண்டும். இந்த தகவலை மீனவர்களுக்கு அதிகாரிகள் குழு தெரிவித்து, சந்தேகத்துக்கு இடமான வகையில் எவரேனும் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க சொல்லவேண்டும்.’ – இவ்வாறு, மத்திய உளவுத் துறையின் அந்த அறிக்கையில் கூறப்பட்பள்ளது.

இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டை கண்டறியும் நிபுணர்கள் தீவிர சோதனை நடாத்தி வருகின்றனர்.

வணிக வளாகங்கள், கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்குள் நுழையும் வாகனங்களை பொலிஸார் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி, தீவிர சோதனை நடத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கிறார்கள்.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் தொடர் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. பயணிகளின் உடைமைகள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. சந்தேகத்துக்கு இடமான வகையில் திரியும் நபர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவையில் செப்டம்பர் 4 மற்றும் 6ஆந் தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற இருக்கிறது. எனவே, இந்த ஊர்வலத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என்றும், அதன் அடிப்படையிலேயே பயங்கரவாதிகள் கோவையில் ஊடுருவி இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ